கரூர் மாவட்ட புதிய அதிமுக மாவட்ட செயலாளர் கட்சியின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்ததால் பரபரப்பு !!! - tamilkalam

News Update

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Saturday, May 16, 2026

கரூர் மாவட்ட புதிய அதிமுக மாவட்ட செயலாளர் கட்சியின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்ததால் பரபரப்பு !!!

 

அதிமுக அணி இரு பிரிவாக பிரிந்த நிலையில் கரூர் மாவட்ட செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான விஜயபாஸ்கரை  கட்சி பதவியிலிருந்து பொதுசெயலாளர் எடப்பாடி  பழனிசாமி நீக்கியிருந்தார் . அவருக்கு பதிலாக மேற்கு ஒன்றிய செயலாளர் கமலகண்ணன்  மாவட்ட செயலாளராக நியமனம் செய்யப்பட்டார். இதனையடுத்து  எடப்பாடி  பழனிசாமியிடம் வாழ்த்து  பெற்று கரூர் மாவட்ட அலுவலகத்திற்க்கு  கட்சியினர் வந்தனர் . நேற்று மதியமே கட்சி அலுவலகம் பூட்டப்பட்டு போலீசார் நிறுத்தப்பட்டிருந்தனர்  . 



அலுவலக வாயிலில்  இருந்த எம் ஜி ஆர்  சிலைக்கு மாலை அணிவித்த பின்னர் கட்சியினர்  அலுவலக பூட்டை உடைத்து உள்ளே சென்றனர் . மாவட்ட செயலாளரின் அறை பூட்டப்பட்டிருந்ததால்  முன் அறையில் கட்சியினர் கமலகண்ணனுக்கு மாலை அணிவித்தனர். 


இதனை அறிந்த விஜயபஸ்கரின் ஆதரவாளர்கள் சுமார் 15 பேர் வந்து கட்சி அலுவலகத்தின்  பூட்டை  உடைத்து  செல்ல நீங்கள் யார் என கேள்வி கேட்டனர் . மேலும் இதனை போலீசார் நீங்கள் வேடிக்கை பார்க்காலாமா என வாக்குவாதம் செய்தனர் . 

எங்களை நியமித்தது  கட்சியின் பொது  செயலாளர் எடப்பாடி  பழனிசாமி நீங்கள் எங்களை கேள்வி கேட்க உரிமையில்லை என இரு தரப்பினரும் வாக்குவாதம்  செய்தனர் . 

பின்னர் போலீசார் இரு தரப்பினரையும் வெளியே போக சொல்லி போலீசாரின்  கட்டுப்பாட்டிற்க்கு  கட்சி அலுவலகத்தை கொண்டுவந்தனர் . 

இதனால் அங்கே சுமார் அரை  மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது 

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages