தமிழக முதல்வர் விஜய் வருகை
வாக்களித்த மக்களுக்கு நன்றி
தெரிவித்து பேசுகிறார்
வாரிய தலைவர் கு.ப.கிருஷ்ணன் தகவல்
தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய தலைவர் கு. ப. கிருஷ்ணன்
நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் முதலமைச்சராக பொறுப்பேற்ற பின்னர் முதல் முறையாக நாளை மறுநாள் (திங்கட்கிழமை)திருச்சி மாவட்டத்திற்கு வருகை தருகிறார்.
தனி விமானத்தில் வருகை தரும் முதல்வர்
தனக்கான பிரத்தியேக வாகனத்தில் திருச்சி விமான நிலையத்திலிருந்து
திருச்சி புதுக்கோட்டை சாலை, டிவிஎஸ் டோல்கேட் ,
பழைய பால்பண்ணை,
சஞ்சீவி நகர்
சத்திரம் பேருந்து நிலையம் வழியாக
திருச்சி ஜோசப் மைதான கல்லூரிக்கு வந்தடைகிறார்.
பின்னர் அங்கு ஏற்பாடு பகுதியில் பொதுமக்கள் மத்தியில் நன்றி தெரிவித்து உரையாற்றுவார்.
இந்த நிகழ்வானது நாளை மறுநாள் மாலை 4 மணிக்கு நடைபெறுகிறது.
தமிழகத்தின் மற்ற பகுதிகளுக்கும் அவர் செல்வார்.
இன்றைக்கு தமிழக முதலமைச்சருக்கு நிகராக மூவுலகத்திலும்
யாரும் கிடையாது. அவருக்கு நிகர் அவர் மட்டும்தான்.
தமிழக வெற்றிக்கழக தொண்டர்களுக்கு ஒரு அன்பு வேண்டுகோள். உங்களை நாங்கள் இரு கரம் கூப்பி கேட்டுக் கொள்கிறேன்
முதல்வர் விஜய் வரும் வாகனத்தை யாரும் பின்தொடராதீர்கள்.
நீங்கள் நிற்கும் இடத்தில் உங்களை அவர் சந்திப்பார். திருச்சி மக்களின்
எதிர்பார்ப்புகள் முதல்வர் விஜய நிச்சயம் நிறைவேற்றுவார்.
இவ்வாறு அவர் கூறினார்



No comments:
Post a Comment