மீண்டும் தமிழ்நாட்டில் ஜென்சி புரட்சி வெடிக்கும் என ஆளுநருக்கு எச்சரிக்கை - மக்கள் சமூக நீதி பேரவையின் பொது செயலாளர் சுமதி பேட்டி !!! - tamilkalam

News Update

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Friday, May 8, 2026

மீண்டும் தமிழ்நாட்டில் ஜென்சி புரட்சி வெடிக்கும் என ஆளுநருக்கு எச்சரிக்கை - மக்கள் சமூக நீதி பேரவையின் பொது செயலாளர் சுமதி பேட்டி !!!

 

மக்கள் சமூக நீதி பேரவையின் பொது  செயலாளர் பேட்டியளித்தார்  அப்போது கூறியதாவது .......





இந்திய அரசியலமைப்பு சட்டப்படியும் S.R.பொம்மை எதிரிடை இந்திய யூனியன் வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பின்படியும் ஆளுநர் தனிப்பெரும் கட்சியினை ஆட்சியமைக்க அழைக்க வேண்டும் . தனிப்பெரும்பான்மையை  நிரூபிக்கவேண்டிய இடம் சட்டமன்றமே தவிர , ஆளுநர் மாளிகை அல்ல . தமிழக ஆளுநர் உடனடியாக தா வெ க தலைவர் விஜய்யை  ஆட்சியமைக்க அழைக்கவேண்டும் . தனி மெஜாரிட்டியை  நிரூபிக்க கோருவது , ஆளுநரின் அதிகார வரண்பூ மீறிய செயல் BJP ன்  கைப்பாவையாக செயல்படுகிறார் , இது கண்டிக்காதக்கதாகும் .



தமிழக ஆளுநர் உடனடியாக த வெ க தலைவர் விஜய்யை ஆட்சியமைக்க அழைக்கவேண்டும் என மக்கள் சமூக நீதி பேரவை சார்பாக அறிவிப்பு அனுப்பியயுள்ளோம் . வருகிற 11.05.2026 தேதியன்று மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் நீதிப்பேராணை மனு தாக்கல் செய்யவுள்ளோம் 






மக்கள் சமூக நீதிப்பேரவை  சார்பாக தமிழகம் முழுவதும் ஆளுநரை கண்டித்து சுவரொட்டி ஒட்டியுள்ளோம்  . வருகிற 11.05.2026 அன்று த வெ க தலைவர் விஜய்யை  ஆட்சியமைக்க ஆளுநர் அழைக்கக்கோரி  சாகும்வரை உண்ணாவிரத போராட்டத்தை  தொடங்கவுள்ளோம்.  


மாநில சுயாட்சியில் உண்மையான அக்கறை தி மு க அரசுக்கு இருந்தால் ஆளுநரை கண்டித்து  ஸ்டாலின் போராட வேண்டும் . இல்லையேல் தி மு க விற்கும் பா ஜ க விற்கும்  கள்ளக்கூட்டு உள்ளது என்பதை மக்கள் புரிந்து கொள்வார்கள் . 

ஜல்லிக்கட்டு போராட்டம் போல்  மீண்டும் தமிழ்நாட்டில் ஜென்சி புரட்சி வெடிக்கும் என ஆளுநருக்கு எச்சரிக்கிறோம் என பேட்டியளித்தார் 







 ,

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages