இசை அமைப்பாளரும் நடிகருமான G.V.பிரகாஷ் திருச்சியில் பேட்டி - tamilkalam

News Update

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Monday, March 30, 2026

இசை அமைப்பாளரும் நடிகருமான G.V.பிரகாஷ் திருச்சியில் பேட்டி




விஜய்க்கு ஆல் தி பெஸ்ட் - 

நான் பொதுவான ஆள் எனவே எல்லாரும் வாக்களியுங்கள் - இசை அமைப்பாளரும் நடிகருமான G.V பிரகாஷ் குமார் திருச்சியில் பேட்டி


அறிமுக இயக்குநர் மரியாராஜா இளஞ்செழியன் இயக்கத்தில் நடிகர்கள் ஜிவி.பிரகாஷ், கௌரிபிரியா , ஜார்ஜ் மரியான் நடிப்பில் உருவான திரைப்படம் ஹேப்பி ராஜ் திரைப்படம் திரையரங்கி வெளியாகி உள்ளது.


 படக்குழுவினர் பல்வேறு திரை அரங்கிற்கு சென்று ரசிகர்களை சந்தித்து வருகின்றனர் இந்நிலையில் இன்று திருச்சி சோனா மீனா திரையரங்கிற்கு வந்த படக்குழுவினர் ரசிகருடன் உரையாடினர்


 தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த நடிகர் ஜி.வி.பிரகாஷ் 

தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறோம் செல்லும் இடத்தில் எல்லாம் படம் ஹவுஸ் புல்லாக ஓடிக்கொண்டிருக்கிறது.

திருச்சி LA சினிமா சோனா மீனா வந்திருந்தோம் இங்கேயும் ஹவுஸ்புல்.

இந்தப் படத்தை ஹிட் கொடுத்த தமிழக மக்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இப்படத்தை குடும்பத்தோடு வந்து பார்க்கின்றனர் இது

அவளுடைய அப்பாவை மீண்டும் ஞாபகப்படுத்துகிறது.

யார் யாருக்கெல்லாம் அப்பா ஹீரோவோ அவர்களுக்கு இந்த படத்தை நான் சமர்ப்பிக்கிறேன்.

இந்த படத்தில் மூலம் என்ன செய்தியை சொல்கிறீர்கள் என்ற கேள்விக்கு ....

 எல்லோருக்கும் அம்மா மிகவும் கிளோஸ் ஆக இருப்பார்கள். ஆனால் அப்பா சைலன்ட் ஹீரோவாக இருப்பார். ஆனால் அவர் காண்பித்துக் கொள்ள மாட்டார் அவர் என்ன எல்லாம் இழக்குகிறார்.

இல்ல எல்லாம் நம்மைப் பற்றி பரிசீலிப்பார்.

இதெல்லாம் காட்டி கொள்ளமாட்டார் உரிய அங்கீகாரம் அவருக்கு கிடைக்காது.

இந்தப் படத்தை பார்க்கும் பொழுது உங்களுடைய கஷ்ட நஷ்டங்களை உங்கள் பிள்ளைகள் பார்த்து பெருமை கொள்வார்கள்.

படம் பார்த்தவுடன் கண்டிப்பாக உங்கள் அப்பாவுக்கு போன் செய்வீர்கள்.

அடுத்ததாக இயக்குனர் செல்வராகம் படம் போய்க் கொண்டிருக்கிறது அடுத்து வர இருக்கிறது.

திரையுலகம் சேர்ந்த விஜய் அரசியலுக்கு வந்து 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர் அறிவித்துள்ளார் என்ற கேள்விக்கு .....

பொலிடிகலா பெஸ்ட் விஷஸ். எந்த பொலிடிகல் ஸ்டாண்டும் எனக்கு கிடையாது. நான் பொதுவான ஆள் எனவே எல்லாரும் வாக்களியுங்கள் என்றார்.

*திரைப்படத்தின் நடிகர் ஜார்ஜ் மரியான் பேசும்போது:*

இத்திரைப்படத்தில் அனைவரும் சிறப்பாக நடித்திருக்கிறோம்.

கலகலப்பான படம் மகிழ்ச்சியோடு பாருங்கள்.

இது திரைப்படத்தில் ஹீரோவுக்கு தகப்பனாக நடித்துள்ளேன். 

படத்தில் ஹீரோயினுக்கு ரெண்டு பேருக்கும் சண்டை ஏற்படும் பின்பு சுமுகமாக முடியும் திரைப்படம் நல்லா வந்திருக்கிறது.

இந்த படம் ப்ரொடியூசர் ஹாப்பியா ஆடியன்ஸ் ஹாப்பியா என்ற கேள்விக்கு .....

எல்லோருக்கும் ஹேப்பி...ஹீரோ ஷோரூம் ஹேப்பி..

ஜிவி பிரகாஷ்.....

படம் வெளியாவதற்கு முன்பாகவே ப்ரொடியூசர் ஹேப்பி தான்.

இப்போது ஆடியன்ஸும் ஹேப்பி டிஸ்ட்ரிபியூட்டர் கிளப் ஹாப்பி என்றார்


*திரைப்படத்தின் கதாநாயகி கௌரி பிரியா பேசும்போது*

படம் எல்லோருக்கும் பிடித்திருக்கிறது.

சென்னை மதுரை பொள்ளாச்சி என்று எல்லா இடத்திற்கும் சென்றோம்.

எல்லோரும் குடும்பமாக, நண்பர்களோடும் ஒரு குறிப்பிட்ட வயதுக்கு என்ற படம் இல்லாமல் மகிழ்ச்சியோடு இந்த படத்தை காணலாம் பெருமையாக இருக்கிறது இந்த படத்தில் வாய்ப்பு கிடைத்ததுக்கு.

கதை கேட்கும் போது முதல் பாதி மிகவும் வேடிக்கையாக இருக்குமோ என்று நினைத்தேன். ஆனால் போகப் போக கதை ஒரு குடும்ப கதையாக மாறிவிட்டது. இதில் காதல், குடும்பம் இருக்கிறது இயக்குனர் எல்லாவற்றையும் அதில் கொடுத்திருக்கிறார்.

இதில் நடித்திருப்பது எனக்கு பெருமையாக உள்ளது என கூறினார்.


No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages