துரோகம் செய்வது எடப்பாடிக்கு ஒன்றும் புதிதல்ல என திருச்சியில் கள்ளர் முன்னேற்ற கழக. தலைவர் பேட்டி. - tamilkalam

News Update

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Monday, March 30, 2026

துரோகம் செய்வது எடப்பாடிக்கு ஒன்றும் புதிதல்ல என திருச்சியில் கள்ளர் முன்னேற்ற கழக. தலைவர் பேட்டி.


 துரோகம் செய்வது எடப்பாடி பழனிச்சாமிக்கு புதிதல்ல - சோழப் பேரரசர் கட்சி தலைவர் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் கூறினார்.

சோழப்பேரரசு கட்சி மற்றும் கள்ளர் முன்னேற்ற கழகத்தின் நிறுவன தலைவர் வழக்கறிஞர் மழவராயன் சரவணத் செய்தியாளர்களுக்கு நேற்று மாலை அளித்த பேட்டியில் கூறியதாவது:-

கள்ளர்களுக்கு என திருச்சியில் 

78 வருடங்களுக்கு பிறகு மாநாடு நடத்தினோம்.

மேலும் சட்டமன்ற தேர்தலில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான கூட்டணிக்கு ஆதரவு அளித்து இருந்தோம். ஆனால் அவர் எங்களை மதிக்கவில்லை. வேட்பாளர் பட்டியலில் எங்கள் முக்குலத்தோர் கள்ளர் மக்களுக்கு ஒரு சீட்டு கூட ஒதுக்கவில்லை,

முக்குலத்தோர் சமுதாயத்தை புறக்கணித்திருக்கிறார்.

கடந்த தேர்தலில் 10.5 இடஒதுக்கீடு காரணமாக தென் மாவட்டங்களில் டெபாசிட் இழந்து ஆட்சி இழந்தார்.

இவரின் போக்கை கண்டித்து, எடப்பாடியையும் என்.டி.ஏ கூட்டணியும் டெபாசிட் இழக்க வைப்போம்.  

தென் மாவட்டத்தில் ஒட்டுமொத்த முக்குலத்தோர் சமுதாயத்தினர் கொந்தளித்து உள்ளனர்.

மேலும் என்.டி ஏ கூட்டணிக்கு வழங்கிய ஆதரவு வாபஸ் பெறுகிறோம். எடப்பாடியை உருவாக்கிய சசிகலாவுக்கு ஆதரவு தருகிறோம்.

அவர் அறிவிக்கிற எல்லா தொகுதிகளுக்கும் தீவிர பிரச்சாரத்தை மேற்கொள்வேன்..

சசிகலா அவர்களிடம் 2 தொகுதி கேட்டு உள்ளோம் அதை அவர்கள் அறிவிப்பார்.

துரோகம் செய்வது எடப்பாடிக்கு புதிதல்ல என்று எல்லோருக்கும் தெரியும்

அவர் துரோகத்தில் பிறந்து வளர்ந்து உள்ளார்.

எடப்பாடி பற்றி இவ்வளவு தெரிந்தும் ஏன் கூட்டணி பேசுகிறீர்கள் என்ற கேள்விக்கு .... 

அவரிடம் அடிபட்டவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள், நாங்கள் புதியவர்கள் அதனால் எங்களுக்கு தெரியவில்லை

இப்போதுதான் அவரது சுயரூபம் தெரிகிறது.

மேலும் திமுக ஆட்சியில் பாலியல் குற்றம் அதிகரித்து உள்ளது. சட்டம் ஒழுங்கு என்பது கேள்விக்குறியாக உள்ளது.

தற்பொழுது வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில் எட்டு வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் துன்புறுத்தப்பட்டால் அவர்களுக்கு மரண தண்டனை வழங்கப்படும் என கூறியுள்ளார்.

இனிவரும் காலங்கள் அவர்கள் வெற்றி பெற்று வந்தால் சட்டம் ஒழுங்கு பாதிக்காத வகையில் செயல்பட்டால் மட்டுமே மக்கள் ஏற்றுக் கொள்வார்கள்.


திமுக அதிமுகவுக்கு மாற்றாக தவெகவை பார்க்காமல் சின்னம்மாவை பார்த்த காரணம் என்ன? 

முயற்சி செய்தோம், ஆனால் அவர்கள் 234 தொகுதிகளும் தனித்து நின்று அவர்களுடைய பெரும்பான்மை என்னவென்று காட்டவேண்டும் என திட்டமிட்டு செயல்படுகின்றனர்.


திருச்சி கிழக்கில் விஜய் போட்டியிடுகிறார் அவர்கள் வெற்றி பெறுவாரா ?


அவர் விஐபி கேண்டிடேட்

ஏற்கனவே மக்கள் அதிமுக, திமுகவுக்கு வாக்களித்துள்ளனர் . இம்முறை நம் தொகுதியில் இருக்கிறாரே என்று 100% மக்களுடைய மனம் மாறுவதற்கான வாய்ப்பு உள்ளது.


2026 இல் ஆட்சி மாற்றம் வருமா?


இவர்கள்தான் ஜெயிப்பார்கள் அவர்கள்தான் ஜெயிப்பார்கள் என்று கூற முடியாது. 100% தொங்கு சட்டமன்றமாக அமையும் மக்களுடைய மனநிலையும் அப்படித்தான் இருக்கிறது. 

எனவே குறிப்பிட்ட சொல்ல முடியாத இதுதான் இருக்கிறது.


கண்டிப்பாக ஆட்சி மாற்றம் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது என தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages