மாணவி கொலை வழக்கில் தமிழக அரசு கடுமையான. நடவடிக்கை எடுக்க கோரி பாரத.ராஜா யாதவ் கண்டன அறிக்கை - tamilkalam

News Update

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Friday, March 13, 2026

மாணவி கொலை வழக்கில் தமிழக அரசு கடுமையான. நடவடிக்கை எடுக்க கோரி பாரத.ராஜா யாதவ் கண்டன அறிக்கை

 * *விளாத்திக்குளம் மாணவி பிரதிபாவை கொன்ற குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்*


* *பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு நிவாரண உதவியும் அரசு வேலையும் வழங்க வேண்டும்*


* *நீதிக்காக போராடிய மக்களை அடித்த ஆய்வாளர் ஹரிஹரனை சஸ்பெண்ட் செய்ய வேண்டும்

* *பாரத முன்னேற்றக் கழகம் வலியுறுத்தல்

*யாதவர்களின் அரசியல் கட்சியான பாரத முன்னேற்றக் கழக தலைவர்* *பாரதராஜா யாதவ்*

*தமிழக அரசுக்கும்* *காவல்துறைக்கும்* *விடுத்துள்ள* *வேண்டுகோள் வருமாறு*........


தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளம் அருகே உள்ள  வேடநத்தம் ஊரில் வசிக்க்கும்

 யாதவ சமுதாயத்தினை சேர்ந்த   +2 வகுப்பு மாணவி பிரதிபாவை. சில நயவஞ்சக கயவர்கள்

 பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி கொடூரமாக படுகொலை செய்துள்ளனர்.

பிரதிபா கொல்லப்பட்டு இரண்டு நாட்களாகியும் குற்றவாளிகள் கைது செய்யப்படாமலிருப்பது உள்ளூர் காவல்துறை மீது சந்தேகத்தினையும்  அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது

மாணவி பிரதிபாவை காணவில்லையென  துடித்துக்கொண்டு சம்பந்தப்பட்ட  மகளிர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்காத  ஆய்வாளர் பிரவீனாவின் அலட்சியபோக்கினால் வருங்காலத்தில் உயரிய நிலைக்கு வரவிருந்த மாணவி பிரதிபாவை இழந்து யாதவ சமுதாயம் தவிக்கின்றது.

இதைவிடக்கொடுமை நீதி கேட்டு போராடி வரும் உள்ளூர் மற்றும் சமுதாய அப்பாவி மக்கள் பலரையும் தகாத வார்த்தையில் பேசியது மட்டுமின்றி 

அடித்தும் ஆய்வாளர் ஹரிகரன் துன்புறுத்தியுள்ளார்.

மேலும் பலரையும் சாலையில் தர தரவென இழுத்து சென்று அவமானப்படுத்தியுள்ளார்.உடனடியாக ஆய்வாளர் ஹரிஹரனை  காவல்துறை உயரதிகாரிகள் சஸ்பெண்ட் செய்ய முன்வர வேண்டும் .

ஒரு சில சமுதாயத்தினர் பாதித்தால் மட்டும்  வெகுண்டு எழும் அரசும்,

காவல்துறையினரும் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை 

சில மணி நேரங்களிலேயே பிடித்து 

என்கவுண்டர் செய்வதிலும் கைகால்களை முறிப்பதிலும் முனைப்பு காட்டுகின்றன.

 ஆனால்..பல சமுதாயத்தினர் பாதிக்கப்படுவது பாரபட்சமாக பார்க்கப்படுவது ஏன்..? வேதனை!

பாதிப்பு என்பது எல்லோருக்கும் உள்ளதுதானே இதனை அனைத்து தரப்பினரும் உணரவேண்டும்.

அலட்சியமாகவும், பொறுப்பை உணராமலும், அசட்டையாக செயல்ப்பட்ட மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் பிரவீனாவை டி.ஐ.ஜி சரவணன் சஸ்பெண்ட் செய்துள்ளார்கள்.

பெண்கள் - மாணவ மாணவிகள் முன்னேற்றத்துக்கு பாடுபட்டு வரும் தமிழக முதல்வர்

மு.க.ஸ்டாலினும்,

காவல்துறையும் அதிரடி நடவடிக்கை எடுத்து மாணவி பிரதிபாவை பாலியல்  மற்றும் வன்கொடுமை செய்து கொடூரமாக கொன்ற. குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

இந்த நடவடிக்கையை கண்டு கொடூர குற்றவாளிகள், கயவர்கள் உள்ளிட்ட எவரேனும் இனி இதுபோன்ற செயலில் ஈடுபடக்கூடாது.எண்ணுவதற்கே அஞ்சவேண்டும்.

அதுமட்டுமின்றி தமிழக அரசு உடனடியாக

 மாணவி பிரதிபா குடும்பத்திற்கு உரிய நிவாரணத் தொகையையும்

அக்குடும்பத்தினை சேர்ந்த ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டுமென

பாரத முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வேண்டுகின்றோம்.

*இவ்வாறு பாரதராஜா யாதவ் வலியுறுத்தியுள்ளார்*  தேர்தல் நேரத்தில் நடந்திருக்கும் இக் கொடடூரமான செயலில் ஈடுபட்டோரை பிடித்து கடுமையான நடவடிக்கை எடுக்க அரசு நடவடிக்கை எடுக்க


வேண்டுமென பாரத முன்னேற்றக் கழகத்தின் தலைவர்..பாரதிராஜா யாதவ் வலியுறுத்தி  கேட்டுக் கொண்டார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages