தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் முன்னணி தலைவர்கள், நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம்.
திருச்சி
நாள் : 14.03.2026 சனி காலை 10
தமிழ்நாட்டில் வேளாண் தொழிலையும் விளை நிலங்களையும் பாதுகாக்கவும் விவசாயிகள் வாழ்க்கைத் தரத்தை உயர்த்திடவும் கீழ்க்கண்ட கோரிக்கைகளை தங்கள் கட்சியின் தேர்தல் அறிக்கையில் வெளியிட்டு அதனை ஆட்சி காலத்தில் நிறைவேற்றிட முன்வர வேண்டும் என கீழ்கண்ட கோரிக்கைகளை முன் வைத்தனர்.
குறைந்த பட்ச ஆதாரவிலை நிர்ணய சட்டம் கொண்டு வர வேண்டும் என்றும்...
1. மத்திய அரசு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணய சட்டம் கொண்டு வர தமிழக அரசு வலியுறுத்தி பெற்றுத்தர வேண்டுமென்றும்.....
எம்.எஸ்.சுவாமிநாதன் குழு அறிக்கை நிறைவேற்றவும் வலியுறுத்தப்பட்டது....
2. எம்.எஸ்.சுவாமிநாதன் குழு அறிக்கையை முழுமையாக நிறைவேற்ற மத்திய அரசை வலியுறுத்தி நிறைவேற்ற வேண்டும் என்றும்
இந்தியா - அமெரிக்க தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை திரும்பப்பெறவும் கோரப்பட்டது..
3. இந்தியா - அமெரிக்க தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தால் இந்தியாவில் உற்பத்தி செய்யக்கூடிய வேளாண் உணவு பொருட்கள் சந்தைப்படுத்த முடியாத பெரும் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளது. மேலும் சோளம், பால்வளம் போன்ற உணவுப் பொருட்கள் உற்பத்தி இந்தியாவில் அடியோடு அழியும் நிலை ஏற்பட்டுள்ளது, அமெரிக்காவில் நம் பொருட்களை இறக்குமதி செய்து
சந்தைப்படுத்துவதற்கு 18 சதவீதம் வரி விதிக்கப்படும். அமெரி பொருட்களை இந்தியாவில் 0% வரியில் இறக்குமதி செய்ய ஒப்பந்தம் வழிவகை செய்கிறது. எனவே ஒப்பந்தத்தை இந்திய விவசாயிகள் நலள் கருதி உடனடியாக திரும்பப் பெற வலியுறுத்த வேண்டுமெனவும்........
இலவச மின்சாரம் ரத்து செய்யும் மின்சார ஒழுங்குமுறை ஆணைய சட்டத்தை திரும்ப பெறவும் கோரப்பட்டது......
4. மத்திய அரசின் மின்சார ஒழுங்குமுறை ஆணைய சட்டத்தால் விவசாயிகள் பயன்படுத்தி வரும் இலவச மின்சாரம் ரத்து செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. வேளாண் உற்பத்தியை கணக்கில் கொண்டு இலவச மின்சாரம் தொடரும் வகையில் மின்சார ஒழுங்குமுறை ஆணைய சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என்றும்..,..
வேளாண் கடன்களை ரத்து செய்திட வேண்டியும்..
5. தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளின் விவசாயிகள் பெற்றுள்ள கடன் முழுமையும் நிபந்தனையின்றி தள்ளுபடி செய்ய வலியுறுத்த வேண்டுமென்றும்...
மரபணு மாற்று விதைகளை அனுமதிக்க கூடாது எனவும்........
6. மரபணு மாற்று விதைகள் இந்தியாவிற்கு அனுமதிப்பதை கொள்கை முடிவு எடுத்து கைவிட வலியுறுத்த வேண்டும் என்றும்....
தமிழ்நாடு அரசு நில ஒருங்கிணைப்பு சட்டம் 2023 கைவிடுவும் வலியுறுத்தப்பட்டது....
7. தமிழகத்தில் விவசாயிகள் விளைநிலங்களை விவசாயிகள் ஒப்பதல் இன்றி அபகரிப்பதற்கும், அருகில் உள்ள ஏரி, குளம், குட்டைகள், ஆறுகள் உள்ளிட்ட நீர்வழிப் பாதைகளையும் ஒப்பந்தம் பெரும் கார்ப்பரேட் நிறுவனங்கள் அபகரிப்பதற்கு வழி வகுக்கும் தமிழ்நாடு அரசு நில ஒருங்கிணைப்பு சட்டம் 2023 கைவிட வேண்டும் என்றும்....
அணைகளின் நீர் கொள்ளளவை உயர்திட வேண்டுமென்றும்....
8. மேட்டூர், வைகை, கேபிஆர் அணைகளை தூர்வாரி நீர் கொள்ளளவை அதிகப்படுத்த வேண்டுமென்றும்...
நெல் கொள்முதலில் தனியாரை அனுமதிக்காதே.....எனவும்...
9. தமிழகம் முழுமையிலும் நெல் கொள்முதலை தமிழக அரசே பொறுப்பேற்று செயல்படுத்த வேண்டுமென்றும். தனியாரை அனுமதிக்கக் கூடாது என்றும்....
நெல் குவிண்டால் ரூ.3500/- விலை வேண்டுமென்றும்....
10. நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூபாய் 3500/- விலை நிர்ணயம் செய்திட வேண்டும் என்றும்.....
கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.5000/- விலை வேண்டுமென்றும்....
11. கரும்பு டன் ஒன்றுக்கு ரூபாய் 5000/- ம் விலை நிர்ணயம் செய்திட வேண்டும் என்றும்
கல்வி கடனை ரத்து செய்திட உடனடி நடவடிக்கை வேண்டுமென்றும்....
12. மாணவர்களின் கல்விக் கடன் நிலுவையை முழுமையும் தள்ளுபடி செய்திட வேண்டுமென்றும்......
ஒன்றியங்கள்தோறும் நெல் கிடங்குகள் அமைத்திட வேண்டுமென்றும்......
13. தமிழகத்தில் நெல் கொள்முதல் செய்து இருப்பு வைப்பதற்கு மூடப்பட்ட கிடங்குகளை ஒவ்வொரு ஒன்றியத்திற்கும் உடனடியாக ஏற்படுத்திட வேண்டும் என்றும்...
நெல் உலர்த்தும் இயந்திரங்கள், சிசிடிவி கேமராக்கள் அமைத்திட வேண்டியும்,.
14. நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் உலர்த்தும் இயந்திரங்கள் அமைக்கப்பட வேண்டும். உரிய எடையில் நெல் கொள்முதல் செய்வதை நவீன இயந்திரங்கள் மூலம் உறுதிப்படுத்த வேண்டும். ஒவ்வொரு நேரடி நெல் கொள்முதல் நிலையத்திலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தி கண்காணிக்க வேண்டுமெனவும்...
மாவட்ட அளவில் விலை நிர்ணயக்குழுக்கள் அமைத்திடவும் வலியுறுத்தினர்.
15. காய்கறிகள் பழ வகைகள் உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு கட்டுப்படியான விலை நிர்ணயம் செய்து கொள்முதலை உறுதிப்படுத்த வேண்டும். கொள்முதலையும் சந்தைப்படுத்துவதையும் அரசு தீவிரமாக கண்காணித்து விவசாயிகளை விலை குறைவில் இருந்து பாதுகாக்க, மாவட்ட ஆட்சியர் தலைமையில் விலை நிர்ணயக்குழு அமைத்திட முன்வர வேண்டுமெனவும்...
ஏக்கர் 1க்கு உற்பத்தி ஊக்கநிதி ரூ. 10 ஆயிரம் வழங்கிட வேண்டுமெனவும்,...
16. வேளாண் உற்பத்தியை ஊக்கப்படுத்த ஏக்கர் ஒன்றுக்கு பத்தாயிரம் ரூபாய் ஆண்டுதோறும் ஊக்க நிதியாக வழங்கி விவசாயிகளை பாதுகாக்க முன்வர வேண்டுமெனவும்....
மத்திய அரசின் வேளாண் காப்பீட்டு நிறுவனம் மூலம் செயல்படுதிட வேண்டுமென்றும்...
17. வேளாண் காப்பீட்டு நிறுவனம் மூலம் மட்டுமே விவசாயிகள் காப்பீடு செய்து இழப்பீடு பெறுவதற்கான நடவடிக்கையை கொண்டு வர வேண்டும். மேலும் தனி நபர் காப்பீடு திட்டத்தை அறிமுகப்படுத்த வேண்டும். தனியார் காப்பீட்டு நிறுவனங்களை தமிழகத்தில் அனுமதிக்க கூடாது என்றும்
பிஏசிபிகளை ரிசர்வ் வங்கி கட்டுப்பாட்டில் அனுமதிக்க கூடாது என்றும்....
18. தமிழகத்தில் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்களை (பிஏசிபி) ரிசர்வ் வங்கி கட்டுப்பாட்டிற்குள் கொண்டு செல்வதை தடுத்து நிறுத்தி, விவசாயிகள் பங்களிப்புடன் அரசியல் சார்பற்ற முறையில் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்களை செயல்படுத்த முன்வர வேண்டும் என்றும்.....
பிஏசிபி மூலம் வாடகை இயந்திர மையம் அமைத்திட வேண்டுமென்றும்...
19. ஒவ்வொரு தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்களிலும் அறுவடை இயந்திரங்கள், உழவு இயந்திரங்கள், நடவு இயந்திரங்கள் குறைந்த
வாடகையில் விவசாயிகளுக்கு கிடைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்....
மதுரை, திருவாரூரில் வேளாண் பல்கலைக்கழகங்கள் அமைத்திட வேண்டியும்..
20. காவிரி டெல்டாவை மையப்படுத்தி திருவாரூரிலும், தென் மாவட்டங்களை மையப்படுத்தி மதுரையிலும் புதிய வேளாண் பல்கலைக்கழகங்களை உருவாக்கிட வேண்டுமென்றும்.
ஊராட்சிகள் தோறும் வேளாண் உற்பத்தியாளர் குழுக்களை ஏற்படுத்திட வேண்டுமென்றும்...
21. வேளாண் உற்பத்தியாளர் குழுக்களை அரசியல் சார்பற்ற முறையில் ஒவ்வொரு ஊராட்சியிலும் உருவாக்கிட வேண்டும். அவர்களுக்கு தேவையான கடனுதவி, சந்தைப்படுத்துவதற்கான ஏற்றுமதி இறக்குமதி சார்ந்த நடவடிக்கைகளை இலகுவாக்கி நடைமுறைப்படுத்த முன்வர வேண்டுமென்றும்..
டெல்டாவில் கடல் முகத்துவார நதிகளை சீரமைத்திட துரித நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும்..
22. காவிரி டெல்டா மாவட்டங்களில் கடல் முகத்துவார நதிகளை மறுசீரமைப்பு செய்யும் திட்டத்தை முன்னாள் முதலமைச்சர் அம்மா ஜெ.ஜெயலலிதா அவர்கள் சுமார் 1500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நிறைவேற்றித் தந்தார்கள். இரண்டாவது கட்ட நிதியை பெற்று பல்வேறு நதிகள் சீரமைப்பு பணிகளை நிறைவேற்றாமல் கடந்த ஐந்தாண்டுகளாக தமிழக அரசு கைவிட்டுவிட்டது. எனவே அதனை முழுமையாக நிறைவேற்றிட முன்வர வேண்டும். ஏரிகளை தூர்வாரி கரைகளை பலப்படுத்த வேண்டும். பாசன, வடிகால் ஆறுகள் அனைத்தையும் தூர்வாரி கரைகளை பலப்படுத்திட வேண்டுமென்றும்.
கட்டுபாடற்ற பூச்சிக்கொல்லி ராசாயண உரங்கள் பயன்பாட்டை கட்டுப்படுத்திடவும் கோரப்பட்டது...
23. விளைநிலங்கள் மலட்டுத்தன்மையாகி வருகிறது. கட்டுக்கடங்காத பூச்சிக்கொல்லி மருந்துகள் மற்றும் களைக்கொல்லிகள் தன் விருப்பத்திற்கு விற்பனை செய்யப்பட்டு ஒட்டுமொத்த மண்ணும் மலட்டுத்தன்மை அடைந்து விட்டது. உற்பத்தி செய்யும் பொருட்கள் நஞ்சாகிவிட்டது. இதிலிருந்து
பாதுகாப்பதற்கு இரசாயன உர பயன்பாட்டை குறைப்பதற்கும். கட்டுக்கடங்காத பூச்சிக்கொல்லி மருந்துகள் விற்பனையை தடை செய்திட வேண்டும். மாற்று தொழில்நுட்பத்தை கொண்டு வர வேண்டும். குறிப்பாக கடல் பாசிகளை மூலப் பொருட்களாக கொண்டு இயற்கை உர உற்பத்தி தொழிற்சாலைகளை உருவாக்க வேண்டுமென்றும்...
ஊராட்சிகள் தோறும் இயற்கை உர உற்பத்தி மையங்களை துவங்கிடவும்....
24. ஒவ்வொரு ஊராட்சிகளிலும் மக்கும் குப்பை, மக்கா குப்பைகளைக் கொண்டு இயற்கை உர உற்பத்தியை வேளாண் கூட்டுறவு அமைப்புகளை உருவாக்கி செயல்படுத்த முன்வர வேண்டுமென்றும்..
இலவச மின்சார இணைப்பு வழங்கிடவும்
25. இலவச மின்சார இணைப்புகள் தேவைக்கு ஏற்ப விவசாயிகளுக்கு வழங்கிட முன்வர வேண்டுமென்றும்......
உழவர் உற்பத்தியாளர் குழுக்களை ஏற்படுத்திடவேண்டியும்
26. மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை உற்பத்தி செய்வதற்கும் சந்தைப் படுத்துவதற்கும் தேவைக்கேற்ப உழவர் உற்பத்தியாளர் குழுக்கள் மூலம் உரிய சிறு தொழிற்சாலைகளை உருவாக்கி செயல்படுத்திட முன்வர வேண்டுமென்றும்..
குடிமராமத்து திட்டத்தை செயல்படுத்திடவேண்டுமென கேட்க்கப்பட்டது.
27. குடிமராமத்து திட்டத்தை செயல்படுத்தாமல் திமுக அரசு கைவிட்டுவிட்டது. மீண்டும் குடிமராமத்து திட்டத்தை செயல்படுத்த அவசர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இதன் மூலம் விவசாயிகள் இலவசமாக மண் எடுத்து வயல்களை மேம்படுத்திக் கொள்ள வழிவகை செய்யப்பட வேண்டுமென்றும்...
பரந்தூர் விமான நிலைய திட்டம்விவசாயப் பேரழிவை ஏற்படுத்தும் எனவே கைவிட வலியுறுத்தப்பட்டது.
28. சென்னை அருகே காஞ்சிபுரம் மாவட்டத்தில் பரந்தூர் விமான நிலையம் அமைப்பதற்கு எதிராக தொடர் போராட்டங்களை அப்பகுதி விவசாயிகள் தீவிரப் படுத்தி வருகிறார்கள். சென்னைக்கு குடிநீர் வழங்கும் செம்பரம்பாக்கம் ஏரியின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் சுமார் 3500 ஏக்கர் பரப்பரவிலான பரந்தூர் பகுதி ஏரி அபகரிக்கப்படுகிறது. விவசாயிகள் வாழ்க்கை கேள்விக்குறியாகி உள்ளது. ஏற்கனவே சென்னையில் உலகத்தரம் வாய்ந்த விமான நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது வேலூர் அப்துல்லாபுரத்தில் விமான நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு இடைப்பட்டிருக்கிற பரந்தூர் விமான நிலையம் தமிழக வளர்ச்சிக்கு எதிரானது. கும்மிடிப்பூண்டி முதல் கன்னியாகுமரி வரை சுமார் 1200 கிலோ மீட்டர் தொலைவிற்கான நீள்சதுரத்தில் உள்ளது. தமிழகத்திற்கு பரந்தூர் விமான நிலையம் எந்த வகையிலும் வளர்ச்சிக்கு பொருத்தமற்றது. எனவே அதனை உடனடியாக கைவிட முன்வர வேண்டும் என வலியுறுத்தப்பட்டது....
திருமண்டங்குடி சக்கரை ஆலை விவசாயிகளை பாதுகாத்திட கோரப்பட்டது .
29. தஞ்சாவூர் மாவட்டம் திருமண்டங்குடி சர்க்கரை ஆலை நிறுவனம் ஆருரான் சக்கரை ஆலை நிறுவனத்திற்கு சொந்தமாக இருந்தது. ஆலையின் நிறுவனர் விவசாயிகள் பெயரில் போலியாக சுமார் 400 கோடி அளவில் பல்வேறு வங்கிகளில் கடன் பெற்று மோசடி செய்துள்ளார். இது வெளிப்படையாக அம்பலப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு எதிராக திமுக கடந்த 2021க்கு முன்னதாக தீவிர போராட்டத்தில் ஈடுபட்டது. திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு திருமண்டங்குடி உள்ளிட்ட அந்நிறுவனத்திற்கு சொந்தமான வடபாதிமங்கலம், கொல்லுமாங்குடி உள்ளிட்ட சர்க்கரை ஆலைகளையும், அதற்குண்டான விளைநிலங்களை எல்லாம் விலைக்கு வாங்கி விவசாயிகள் போராட்டத்தை முறியடிக்க காவல்துறை மூலம் தொடர் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. மாநில அளவிலான வங்கியாளர் கூட்டத்திலும் கடன் மோசடி குறித்து முழு விவரங்களையும் வெளிப்படுத்தி முதலமைச்சருக்கு அனுப்பி வைத்தும் இதுவரையிலும் தீர்வு காணுவதற்கான Page 7 of 10முயற்சியை முதலமைச்சர் மேற்கொள்ளாது மிகுந்த வேதனை அளிக்கிறது. விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையும் வழங்காமல் இழுத்தடிக்கப்படுகிறது, ஆலையின் ஒருபுறம் வாயிலில் விவசாயிகள் 1200 நாட்களை கடந்து போராடிக் கொண்டிருக்கிறார்கள். மறுபுறம் உள்ள வாயிலில் வழியாக மதுபானம் தயார் செய்து சந்தைப்படுத்தப்படுவது வேதனை அளிக்கிறது. இது குறித்து முதலமைச்சர் உரிய விளக்கம் அளிக்க முன்வர வேண்டும். விவசாயிகளுடைய வாழ்வாதாரத்தை பாதுகாப்பதற்கு முன்வர வேண்டுமென இக்கூட்டம் வலியுறுத்தப்பட்டது.
சிப்காட் என்ற பெயரில் விளை நிலங்களை அபகரிப்பதை உடனடியாக நிறுத்தவும் கோரப்பட்டது.
30. தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பற்றதற்கு பிறகு 33 க்கும் மேற்பட்ட சிப்காட்டுகள் விளை நிலங்கள் அமைக்கப்பட்டுள்ளது.ஆனால் எந்த ஒரு இடத்திலும் தொழிற்சாலைகள் துவங்கவில்லை. மாறாக விவசாயிகள் விளை நிலங்களை அபகரிப்பதற்கு இன்னும் பல மாவட்டங்களில் தீவிர முயற்சியில் தமிழக அரசு ஈடுபட்டு வருவது வன்மையாக கண்டிக்கத்தக்கது. நல்ல நிலத்தடி நீர் பாசன வசதி உள்ள விளை நிலங்களை அபகரிப்பதற்கு தமிழக அரசு முயற்சிப்பதை இக்கூட்டம் வன்மையாக கண்டிக்கிறது. எனவே உடனடியாக சிப்காட்டிற்காக தேர்வு செய்யப்பட்ட நிலங்களை தர மறுத்து எதிர்ப்பு தெரிவித்து போராடி வருகிற இடங்களில் நிலங்கள் கைப்பற்றுவதை கைவிட இக்கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
மதுரை மேலூர் பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்திட கோரப்பட்டது.
31. மதுரை மேலூர் பகுதியை மையமாக வைத்து டாங்ஸ்டன் திட்டம் செயல்படுத்துவதற்கு மத்திய மாநில அரசுகள் முயற்சிப்பதை வன்மையாக கண்டிக்கிறோம்.தற்போதைய நிலையில் கைவிட்டதாக அறிவிக்கப்பட்டாலும் பாராளுமன்றத்தில் அரியவகை கனிமங்களை எடுக்கப்படும் என மத்திய நிதியமைச்சர் அறிவித்துள்ளார், எனவே தமிழ்நாடு அரசு மேலூர் பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்து விவசாயிகளை பாதுகாத்திட வேண்டுமெனவும் கேட்கப்பட்டது.
கனிமவள கொள்ளையை தடுத்து நிறுத்திட திடமான நடவடிக்கை வேண்டுமெனவும்....
32. கனிமவள கொள்ளையை தடுத்து நிறுத்த வேண்டும். தமிழகத் தேவைக்கான மணல், கனிம வளங்கள் குறைந்த விலையில் பொது மக்களுக்கு கிடைப்பதை உறுதிப்படுத்திட வேண்டும். வெளிநாடுகளுக்கும் வெளி மாநிலங்களுக்கும் ஏற்றுமதி செய்வதற்கு தடை விதித்திட வேண்டும் என்றும்.
வனவிலங்குகள் பாதிப்பிற்கு இழப்பீடு பெற்றுக்கொடுக்க வேண்டுமென்றும்,..
33. காட்டுப்பன்றிகள் வனவிலங்குகளால் பயிர்கள் அழிவதும், மனிதர்கள், விவசாயிகள் கொல்லப்படுவதும் தொடர்கிறது. இதனை தடுத்து நிறுத்த முன் வர வேண்டும். மேலும் பிரதமர் காப்பீடு திட்டம் மூலம் உரிய இழப்பீடு பெற்று தர அவசர நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென்றும்.
மேற்கு தொடர்ச்சி மலை வள பாதுகாப்பு கவுன்சில் உருவாக்கிட துரித நடிவடிக்கை எடுக்க வேண்டுமென்றும்....
34. காலநிலை மாற்றத்திற்கு அடிப்படையாக விளங்குவது மேற்கு தொடர்ச்சி மலை வள பாதிப்பாகும். பத்துக்கு மேற்பட்ட மாநிலங்களை உள்ளடக்கி உள்ளதால் இதனை பாதுகாக்க தேசிய அளவில் மேற்கு தொடர்ச்சி மலை வள பாதுகாப்பு கவுன்சில் உருவாக்கப்பட வேண்டும். இதன் மூலம் பேரிடரை எதிர்கொள்வதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசின் மூலம் மேற்கொள்ள முன்வர வேண்டுமென்றும்,
இடுபொருள் இழப்பீடாக ஏக்கர் ஒன்றிக்கு ரூபாய் 25000/-தர வேண்மென்றும்.
35. பேரிடர் பெருமழையால் தமிழகத்தில் தொடர்ந்து வேளாண்மை பாதிக்கப்பட்டு வருகிறது. இதனை கருத்தில் கொண்டு பேரிடர் மேலாண்மை திட்டத்தில் இழப்பீட்டுத் தொகைகளை உயர்த்திட வேண்டும். குறிப்பாக ஏக்கர் ஒன்றுக்கு இடுபொருள் இழப்பீடாக ரூபாய் 25000/- ம் வழங்குவதற்கு முன்வர வேண்டுமென்றும்.
ஆறுகளில் கழிவு நீர் கலப்பதை தடுத்து நிறுத்திட வேண்டுமென்றும்
36, காவிரி, வைகை, தாமிரபரணி, பாலாறு, நொய்யல், தென்பெண்ணை உள்ளிட்ட அனைத்து நதிகளிலும் கழிவு நீர் கலக்கப்படுவதை தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்றும் '.
குத்தகை விவசாயிகள் பதிவை உறுதிபடுத்திட வேண்டுமென்றும்
37.கோவில், அறக்கட்டளைகள், ஆதீனங்களுக்கு உட்பட்ட குத்தகை நிலங்களை குத்தகை பாக்கி காரணம் காட்டி நில வெளியேற்றம் செய்வதை தடுத்து நிறுத்திட வேண்டும். கடந்த காலங்களில் குத்தகை பதிவை ரத்து செய்து கோயில் சொத்துக்கள் என்கிற பெயரில் அறநிலையத்துறை தனது இணையதளத்தில் பதிவேற்றம் செய்ததை அகற்றிட வேண்டும். குத்தகை விவசாயிகளுக்கு அந்நிலம் குத்தகை பதிவின் அடிப்படையில் உறுதிப்படுத்த வேண்டும். இனாம் மற்றும் அநாதின நிலங்களை விவசாயிகள் ஒப்பதில் இன்றி அபகரிக்காதே. குத்தகை பதிவை உறுதிப்படுத்திடு. என்றும்
குத்தகை விவசாயிகளுக்கு அடையாள அட்டை வழங்கிடு....என்றும்
38. குத்தகை விவசாயிகளுக்கும் அடையாள அட்டை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். மத்திய, மாநில அரசுகள் வழங்கும். அனைத்து சலுகைகளும் மற்றும் பிரதமர் கிசான் திட்டத்தில் பயன்பெறவும் அனுமதிக்க வேண்டுமென்றும்.................. ...................
தமிழகம் முழுவதுமுள்ள விவசாய சங்கங்களின் நிர்வாகிகள் திருச்சியில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் வரும் சட்டமன்றத் தேர்தலில் (2026) மேற்கண்ட கோரிக்கைகளை அரசியல் கட்சிகள். தங்கள் கட்சியின் தேர்தல் அறிக்கையில் வெளியிட்டு அதனை ஆட்சிக்காலத்தில் நிறைவேற்றிட வேண்டுமென்றும் வலியுறுத்தினர்.


No comments:
Post a Comment