இக்கூட்டத்தில் தலைவர்கள் உரையாற்றியபோது தெரிவித்த கருத்துக்கள் பின்வருமாறு: ..
1970க்கும் பிறகு மத்திய அரசுகள் விவசாயிகளுக்கு லாபகரமான விலைக்கொடுக்காமல் வேஷ்டி சட்டை, புடவை, பாவாடை கோவணத்தை பிடிங்கி நிர்வாணமாக்கியதை பாரீர்? என்றும் "அரசு, வங்கி அதிகாரிகள், ஆசிரியர்கள் .அரசு அதிகாரிகள் ஆகியோர்க்கு, ரூ 100 சம்பளம் உயர்வு கொடுத்தால் ..விவசாயிக்கு ரூ.10வது கொடுக்காமல், ரூ.2 கொடுப்பது,அநியாயம் என்றும் ',விவசாயிகள் கடனிலே பிறந்து, வாழ்ந்து, சாகும்பொழுதும் வாரிசுகளுக்கு கடனையே விட்டு செல்வதாகவும், கூறினார்.
1970 ஆம் ஆண்டு சட்டமன்ற உறுப்பினரின் மாத சம்பளம் ரூபாய் 250 ரூ.வங்கி மேலாளர் மாத சம்பளம் 150 ரூ, 8 கிராம் தங்கத்தின் விலை 120 ரூ, ஆசிரியர் சம்பளம் 90 ரூ
தற்போது 2026 ஆம் ஆண்டு கணக்குப்படி ஒரு சட்டமன்ற உறுப்பினரின் மாத சம்பளம் ஒரு லட்சத்து ஐயாயிரம் ரூபாய் , வங்கி மேலாளர் மாத சம்பளம் 1,50,000 , தங்கம் அதாவது ஒரு பவுன் விலை ஏறத்தாழ ஒரு லட்சத்து 27 ஆயிரம் ரூபாய் ஆனால் தற்போது விவசாயக் கூலி பெறும் தொழிலாளர்களின் கூலியும் மிகக் குறைந்த அளவிலலேயே உள்ளது. எந்த வகையிலும் கூலியும்ஏறவில்லை .அவர்கள் வாழ்வில் ஏற்றமும் பெறவில்லை.
நெல் ரூ. 18 க்கு விற்ற விலையிலிருந்து ரூ.54 தருவதாக கூறிவிட்டு ரூ.24 கொடுப்பது நியாயமா என்று கேள்வி கேட்டால் BJP தலைவர் H.ராஜா கூறுகிறார் முதல்வர்ஸ்டாலின் கூறி தான் டெல்லியில் விவசாயிகள் பேராடினார்கள் என்கிறார்.
இப்படி 55 ஆண்டுகளாக விவசாயிகளுக்கு லாபகரமான விலை கொடுக்காமல் ஏமாற்றிய பணம் ரூ. 600 லட்சம் கோடிகள்.
தற்பொழுது விவசாயிகள் வாங்கிய வங்கி கடன் வசூலிக்கும் வங்கி அதிகாரிகள், விவசாயிகளைகேவலப்படுத்தி வேஷ்டி, சேலை வாங்கி கட்டிக்கொள்ளாமல் நிர்வாணமாக நின்று அந்த பணத்தில் கடனை கொடு என்று பேசி தற்கொலைக்கு தூண்டுகிறார்கள்.என்றும் விவசாயிகளுக்கு தண்ணீரும் "" லாபகரமான விலையும் கொடுக்கவில்லையென்றால் விவசாயம் அழியும், என்றும் கார்ப்பரேட் கம்பெனி விவசாய நிலத்தை வாங்கி மரபணு மாற்றப்பட்ட விதைகளால் உணவு உற்பத்தி செய்து பொது மக்களுக்கு கொடுத்தால் பையன், பேரன் ஆண்மையை இழந்துவிடுவான், மகள், பேத்தி கருத்தரிக்க மாட்டார்கள், 16 வயதில் பூப்பெய்தும் பெண் 8 வயதில் பூப்பெய்வார்கள். இதனால் சமுதாயமும், குடும்பமும் அழிவிற்கு வித்திடாமல்.." எவ்வளவுதான் வசதி மற்றும்
பணம் இருந்தாலும் . உயர் பதவி இருந்தாலும் , நஞ்சுயில்லாத உணவு இல்லையென்றால் சிறந்த மருத்துவர்களால் கூடமரணத்தை தடுக்கமுடியாது என்பதற்கு மாண்புமிகு ஜெயலலிதா மரணமேசாட்சி......
எங்கள் சங்கம் BJP, காங்கிரஸ், திமுக, அதிமுகாவிற்கோ மற்றகட்சிகளுக்கோ எதிரானவர்கள் அல்ல. ஆட்சியில் இருப்பவர்களில் யாராக இருந்தாலும் விவசாயிகளை காப்பாற்றுங்கள் என்று கேட்பதற்கும், அழுவதற்கும் உரிமை உள்ளது என்று கூறுபவர்கள் நாங்கள்.
அரசியல் வாதிகள் ஒருவரை ஒருவர் சந்தித்தால் மரியாதைஎன்கிறார்கள்.....விவசாயிகள் ஆளும்கட்சிகாரர்களை, சந்தித்து நியாயம் கேட்டால், காசு வாங்க மிரட்டுகிறார்கள்என்று பொய் பிரச்சாரம் செய்து, விவசாயிகளுக்கு கெட்ட பெயரை உண்டாக்கி விவசாயிகள் ஒன்று சேர்ந்து போராட விடாமல் தடுப்பவர்களே அரசியல்வாதிகள்தான் என்றும்,
..வருடாவருடம் கோதாவரி நதியில் 1330TM.C தண்ணீர் வீணாக கடலில் கலப்பதில் 3OOTM.C தண்ணீரையாவது காவேரியில் திருப்பி விட்டு காவேரி டெல்டா விவசாயிகளை காப்பாற்ற வேண்டும் என்று மாண்புமிகு அமித் தாழகஷாவை டெல்லியில் சென்று 15 தலைவர்கள் கேட்டோம். அவரும் நிதி ஒதுக்கி இணைப்பதாக கூறினார். ஆனால்6 வருடமாக எதுவுமேசெய்யவில்லை. ஆனால் ஒன்றிய அமைச்சர்அமித்ஷாவிடம் அய்யாக்கண்ணு பணம் வாங்கி விட்டதாக பொய் செய்தி பரப்புகின்றனர்.1967-ம் ஆண்டுக்கு முன்பு P.L 480 திட்டத்தின் கீழ் அமெரிக்காவிடம் இந்தியா உணவிற்காக பிச்சை எடுத்தது. உணவு கிடைக்காததால் எலி கறியைச் சாப்பிடச் சொன்னார்கள். நாட்டை உணவுக்காக, அமெரிக்காவிடம் பிச்சை எடுப்பதிலிருந்து காப்பாற்றிய விவசாயிகளை காப்பாற்ற மறுப்பது ஏன்? பரம்பிக்குளம் ஆழியாறு திட்டத்தில் உள்ள மேலநீராறு அணையிலிருந்து நல்லாறு அணை கட்ட இணைப்பு வேண்டும்.
நீலகிரியில் ஓடும் பாண்டியாறு புன்னம்புலா ஆற்றை மங்குழி வழியாக மாயாற்றில் இணைத்தால் நீலகிரியில் பெய்யும் மழைநீர் 100 T.M.C கேரளா கர்நாடக செல்லாமல் பவானி டேம் சென்றால் தமிழகத்தின் 3 லட்சம் ஏக்கர் புஞ்சை நிலங்கள் நஞ்சை நிலமாக மாறும் காவிரிக்கு 50 T.M.Cதண்ணீர் கிடைக்கும் காவேரியில் வீணாக கடலில் கலக்கும் வெள்ளநீரில் 1000 கன அடி நீரை மேட்டூரிலிருந்து வடக்கு பக்கம் கால்வாய் வெட்டி குஞ்சாண்டியூர் ஜலகண்டபுரம், எடப்பாடி, திருச்செங்கோடு, சின்னப்பம்பட்டி, வைகுந்தம், மகுடஞ்சாவடி, சரபங்காநதி, திருமணி முத்தாறு, மோர்பாளையம், ஆட்டையாம்பட்டி, காளிப்பட்டி. வெங்கனூர், மூன்றடைப்பு. நாமக்கல் பாவை கல்லூரியின் மேல்புறம் திருமலைப்பட்டி, பொம்மைகுட்டை மேடு. காளப்பநாயக்கன்பட்டி, சேந்தமங்கலம், பழைப்பாளையம், எருமைப்பட்டி, கோம்பை, மகாதேவி, பச்சபெருமாள்பட்டி, வைரிசெட்டிபாளையம் வழியாக | அய்யாறு உப்பாற்றுடன் இணைத்த பிறகு அரியலூர் செட்டிக்குளம், குரும்பலூர், பெரம்பலூர் கொண்டு செல்ல வேண்டும்.
இதற்கு அணைக்கட்ட தேவையில்லை. தண்ணீர் இயற்கையாக ஓடி வருவது போல் நில அமைப்பு உள்ளது என்று தமிழக அரசின் திருச்சி மற்றும் சேலம் நீர் ஆதார திட்ட வடிவமைப்பு கோட்டங்கள் அறிக்கையை அரசுக்கு சமர்ப்பித்து ரூ. 14 ஆயிரம் கோடி கேட்டும் அரசு கொடுக்க வில்லை. ஆனால் 30ஆயிரம் கோடிக்கு மேல் நீர் ஆதார திட்ட அமைப்புக்கு சம்பளமாக தமிழக அரசு கொடுத்து உள்ளது. அத்தி கடவு அவிநாசி, காவேரி குண்டாறுக்கு அதிமுக அரசு பணம் ஒதுக்கி உதவியது போல் காவேரி அய்யாறு இணைக்க திமுக அரசு நிதி உதவி செய்து கொல்லிமலைக்கு, தெற்கேயும், காவிரி கொள்ளிடத்திற்கு வடக்கேயும் உள்ள 1000 ஏரி குளங்களை நிரப்பி 5 லட்சம் ஏக்கர் புஞ்சை நிலத்தை நஞ்செய் நிலங்களாக மாற்றினால் நிலத்தடிநீர் மட்டம் 50 அடிக்கு வந்து விடும். இளைஞர்களுக்கு வேலைகிடைக்க வாய்ப்பு உள்ளது.என்றும்
மேற்கு தொடர்ச்சி மலையில் தமிழக பகுதியில் பெய்யும் மழைநீர் ஆலடியாறு அணைக்குச் சென்று வீணாக கேரளா வழியாக கடலுக்கு செல்வதை ஆலடியாறு அணையில் துளையிட்டு கீழ்கூடலூர் (வடக்கு), கம்பம் (வ), உத்தமபாளையம் (), போடிநாயக்கனூர் (தெற்கு). தேனி (வ). பெரியகுளம் (@) (1500 (மீ உயரம்), தேவன் கோட்டை (சி), வெள்ளோடு (), திண்டுக்கல் (துெ. ஏரியோடு இது, கோவிலூர், கடவூர் (கி) வழியாக பொன்னனியாறு அணைக்கு தண்ணீர் வந்தால், வைய்யம்பட்டி, மணப்பாறை, துவரங்குறிச்சி, மருங்காபுரி பகுதிகளில் 5லட்சம் ஏக்கர் புஞ்சையை நஞ்சையாக்கலாம். சில நூறு தொழிலதிபர்கள் வாங்கிய ரூ.24 லட்சம் கோடிகளை மத்திய அரசு தள்ளுபடி செய்கிறது. ஆனால் 95 கோடி விவசாயிகளில் 90 கோடிகோடி விவ சாயிகள்இந்து விவசாயிகள் தேசிய மயமான வங்கியில் வாங்கிய ரூ.1 லட்சம் கோடி கடனை தள்ளுபடி செய்ய மறுப்பது விவசாயிகள் ஒன்று சேர்ந்து கேட்காததுதான், சேர்ந்து போரடியவர்களுக்கு சம்பளம் உயர்வு கிடைத்து உள்ளது.'
, காவேரி-அய்யாறு இணைப்பு, கதவனைகள், தடுப்பணைகள் விவசாய விளை பொருளுக்கு 2 மடங்கு லாபகரமான விலை, 60 வயதடைந்த அனைத்து விவசாயிகளுக்கும் பட்டா நிலம் இருந்தாலும் மாதம் ரூ.5000/- ஓய்வூதியம் கிடைக்க, நடு ரோட்டில் படுத்தோம், போராடினோம். நிர்வாணமாக ஓடினோம், கடலில் இறங்கியும் மலையிலும் செல் போன் டவரிலும் ஏறி குதிக்க முயற்சி செய்து 300 FIR போட்டு சிறை சென்றோம். ஆனாலும் லட்சக்கணக்கான விவசாயிகள் சேர்ந்து போராடாததால் விவசாயிகள் கோரிக்கை நடக்கவில்லை. பாசமுள்ள தாய் கூட குழந்தை அழுதால் தான் பால் கொடுப்பார் எனவே ஒன்று சேர்ந்து போராடினால் வெற்றி கிடைக்கும் இல்லையேல் மரணம் தான் மிச்சம். என்று கூறினார்கள்.
மேலும் வரும் தேர்தலில் ஆளும் தி.மு.க. அரசை விவசாயிகள் ஆதரிப்பது தற்கொலைக்கு சமம் என்றும் உரையாற்றினர். ஆளும் அரசு எடுக்கும் கொள்கை முடிவுகள் , அனைத்துமே கார்பரேட்டுகளுக்கு சாதகமான முடிவுகள்தான் என்றும். எனவே வருகிற மார்ச் மாத இறுதியில் விவசாயிகள் மாநாட்டில் தமிழக விவசாயிகளின் ஆதரவு யாருக்கு தருவது என முடிவெடுக்கப்படும் என்று தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஆலோசனைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.

No comments:
Post a Comment