திருச்சி மன்னார்புரம் ரவுண்டானா பகுதியில் புதிய பயணியர் நிழற்கூடம் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. 13.3.2026 - tamilkalam

News Update

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Friday, March 13, 2026

திருச்சி மன்னார்புரம் ரவுண்டானா பகுதியில் புதிய பயணியர் நிழற்கூடம் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. 13.3.2026

 தி



திருச்சி பஞ்சப்பூரில் புதிய பேருந்து நிலையத்திலிருந்து வரக்கூடிய அனைத்து பேருந்துகளும் மன்னார்புரம் வழியாக வந்து செல்கின்றன.

ஆயிரக்கணக்கான பயணிகள் மன்னார்புரம் பேருந்து நிறுத்தத்தை பயன்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் அங்கு பயணியர் நிழற்குடை அமைத்து தர  பொதுமக்கள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. பத்திரிக்கைகளிலும் செய்தியாக வந்தது.

அதன் அடிப்படையில் பயணியர் நிழற்குடை அமைக்க திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைகோ, தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து 60 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்தார்.

இதனை தொடர்ந்து அதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

இதில் திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைகோ கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார்.

தொடர்ந்து செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது, 

திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலை மன்னார்புரம் பகுதியில் பயணிகளின் கோரிக்கையை ஏற்று ரூபாய் 60 லட்சம் மதிப்பீட்டில் புதிய பயணியர் நிழற்குடை அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டது.

நான்கு மாதத்திற்குள் கட்டுமான பணிகள் நிறைவடைந்து பயணியர் நிழற்குடை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

அமெரிக்கா இஸ்ரேல் ஈரான்  போர் காரணமாக வளைகுடா நாடுகளில் மட்டுமல்லாது உலகம் முழுவதும் பல்வேறு பிரச்சனைகளை உருவாக்கும். குறிப்பாக கச்சா எண்ணெய், கேஸ் பெட்ரோல் தட்டுப்பாடு ஏற்படும் என ஏற்கனவே கூறியிருந்தேன் . இதன் காரணமாக கேஸ் விலை உயர்ந்துள்ளது. தட்டுபாட்டை போக்க ஒன்றிய அரசு அதற்கான மாற்று ஏற்பாடு செய்துள்ளதாக கூறியிருக்கிறது.  ஈரான் மட்டுமின்றி பிற நாடுகளில் இருந்து கச்சா எண்ணெய் பெற்று தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுப்பதாக ஒன்றிய அரசு கூறியிருக்கிறது.

இங்குள்ள தட்டுப்பாடு செயற்கை தட்டுப்பாடாக இருக்கலாம் என சந்தேகம் உள்ளது. அதேபோல் சிலர் எரிவாயுவை பதுக்கிவைத்திருப்பதாகவும்  கூறுகிறார்கள்.

கேஸ் தட்டுப்பாட்டால்  தமிழகம் மட்டுமல்லாது நாடு முழுவதும் பல உணவகங்கள் மூடப்பட்டுள்ளதாக செய்தியில்  அறிகிறோம். இதில் ஒன்றிய அரசும்,, மாநில அரசும் இணைந்து செயல்பட வேண்டும் ..குறிப்பாக ஒன்றிய அரசு தலையிட்டு இந்த பிரச்சனைகளுக்கு தீர்வு காண வேண்டும் என கோரிக்கை வைக்கின்றேன்.

சகோதரர் விஜய பொறுத்தவரை அரசியல் பயணத்தை தொடங்கியதில் இருந்து திமுகவையும் :,,பாஜகவையும் இரண்டையும் எதிர்ப்பதாக கூறியிருந்தார்.

. விஜய் பாஜகவுடன் கூட்டணி வைத்தால் எங்களுடைய கூட்டணி பாதிப்பு உருவாகாது. கடந்த ஐந்து ஆண்டுகளில் மக்களின் நம்பிக்கையை திமுக கூட்டணி பெற்றுள்ளது.

அரசியலைப் பொறுத்தவரை பல பேர் பல கருத்துக்களை கூறுவார்கள். எது உண்மை எது பொய் என்பது பத்திரிகையாளர்களுக்கு தான் தெரியும். ஆகவே உண்மையை மக்களுக்கு கொண்டு செல்ல வேண்டும். என்று தெரிவித்தார். மேலும் அடிக்கல் நாட்டும் விழாவினை கலந்து கொண்டு அங்கே பஸ் நிறுத்தத்தில் பேருந்துக்காக காத்திருந்த மக்களிடமும் உரையாடினார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages