சர்வதேச விருதுகளை குவித்த பி.எம்.டபுள்.யூ - 1991 திரைப்படம்!
தமிழ் சினிமாவில் சிறுவர்களுக்கான படங்கள் அவ்வப்போது வந்த வண்ணம் இருக்கின்றன. 'பசங்க', 'காக்காமுட்டை; 'குரங்கு பெடல்', பூவசரம் பீபி போன்ற படங்களின் வரிசையில் உருவாகியுள்ள படம் "பி.எம்.டபிள்யூ 1991". இந்தப் படத்தை பொன்முடி திருமலைசாமி இயக்கியுள்ளார். இவர் 'பையா', 'கருங்காலி உள்ளிட்ட பல படங் களில்
வில்லனாக நடித்திருக்கிறார்.
இந்த படம் குறித்து இயக்குநர் திருமலை குமாரசாமி திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார், அதில்..
சைக்கிளையும், ஒன்பது வயது சிறுவனையும் மையப்ப டுத்தி இந்தப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. படத்தின் மைய கதாபாத்திரத்தில் மதுரையை சேர்ந்த கவுதமன் என்ற சிறுவன் நடித்துள்ளான்.
இந்தப்படம் பல சர்வதேச திரைப்பட விழாக்களுக்கு அனுப்பப்பட்டு, இதுவரை 22 விருதுகளைப் பெற்றிருக்கிறது. நான் இதற்கு முன்பு 'கோ பான ரூப சுந்தரம்' என்ற படத்தை இயக்கினேன். சில காரணங்களால் அந்தப் படத்தை தொடர முடியவில்லை. அந்த கோபத்தில் நாயகன்-நாயகி இல்லாமல் ஒரு படத்தை எடுக்க முடிவு செய்து எடுத்தது தான் இந்தப்படம். இது விருதுக்ககான படம் என்றாலும், படத்தில் மூன்று பாடல்கள், ஒரு சண்டைக் காட்சி உள்ளன. வளர்ந்து வரும் இயக்குனர்கள் தியேட்டர் ரிலீஸ் என்பதையும் தாண்டி ஆஸ்கார் உள்ளிட்ட விருதுகளுக்காகவும் படம் எடுக்கலாம் என தெரிவித்தார்.
மேலும் திருச்சியில் நடிப்பு ஆர்வலர்களுக்காக பயிற்சி மையம் தொடங்கப்பட்டுள்ளது. இதில் நடிப்பு, இயக்கம் உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. இதில் 5 வயது முதல் 60 வயது வரை ஆர்வம் உள்ளவர்கள் கலந்து கொள்ளலாம் என தெரிவித்தார்.
இந்த செய்தியாளர் சந்திப்பு நிகழ்ச்சியின் போது மணிவண்ணன், கபிலன் ஆகியோர் உடன் இருந்தனர்.

No comments:
Post a Comment