டாஸ்மாக் ஊழியர்கள் திருச்சி மண்டல சங்கங்கள் நடத்திய ஆர்ப்பாட்டம் திருச்சியில் நடந்தது.
மதுவிலக்கு அமைச்சரின் கால அவகாசம் முடிந்து விட்டது என்றும்
காலி மதுபாட்டில் திரும்பபெறும் திட்டம் என்னவாயிற்று என்றும், டாஸ்மாக் ஊழியர்களின் பணிவரன்முறை, காலமுறை ஊதிய கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டுமென்றும்!
டாஸ்மாக் ஊழியர்களின் கோரிக்கைகளுக்காக
மண்டல அலுவலகங்கள் முன் மாநிலந்தழுவிய
ஆர்ப்பாட்டம் நடந்தது.
TASMAC
நாள்:15.07.2026 இன்று '
நேரம் : காலை 11.00 மணி அளவில்
இடம் : - திருச்சி
ஆட்சியர் அலுவலக வளாகம் அருகில் நடந்தது.
டாஸ்மாக் ஊழியர்களுக்கு அடிப்படை சம்பளம் தீர்மானித்து காலமுறை ஊதியம் வழங்க வேண்டு மென்றும்."
* காலிபாட்டில் திரும்ப பெறும் ரூ. 10 திட்டத்தை ஊழியர்களிடம் திணிக்ககூடாது என்றும், மாற்று திட்டத்தை உருவாக்கி அமுல்படுத்த வேண்டும் என்றும்,
* அரசு ஊழியர்களைப் போல ஒய்வு பெறும் வயது 60 தாக்க வேண்டும் என்றும்,
* டாஸ்மாக் ஊழியர்கள் குடும்பத்தினர் மருத்துவ சிகிச்சை பெற இஎஸ்ஐ மருத்துவ திட்டத்தை அமுல்படுத்த வேண்டு மென்றும்
* டாஸ்மாக் விற்பனையை முறைப்படுத்த கேஷ் கவுண்டர், சேல்ஸ் கவுண்டர் உட்பட அடிப்படை கட்டமைப்பை உருவாக்க வேண்டு மென்றும் முழக்கமாகவும், கோரிக்கையாகவும் வைக்கப்பட்டது.

No comments:
Post a Comment