தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக பொது தொழிலாளர் சங்க மாநில செயற்கழு கூட்டம் சனிக்கிழமை அன்று திருச்சி வெண்மணி இல்லத்தில் நடந்தது கூட்டத்திற்கு சங்க மாநில தலைவர் வீ.குமார் தலைமை தாங்கினார் வேலை அறிக்கையை மாநில பொதுச் செயலாளர் ஆர் புவனேஸ்வரன் வாசித்தார் வரவு செலவு அறிக்கையை மாநில பொருளாளர் எம். ஏழுமலை சமர்ப்பித்தார்
மாநில துணை பொது செயலாளர் என். ராசப்பன் சிறப்புரையாற்றினார்
கூட்டத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக நேரடி கொள்முதல் நிலையத்தில் 12(3) ஒப்பந்தப்படி தற்காலிக பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது 2012 ஆம் ஆண்டு வேலைக்கு சேர்ந்தவர்களை பணி நிரந்தரம் செய்துள்ளனர் ஆனால் அதற்குப் பிறகு 13 வருடங்களாக தற்காலிக பணியாளர்கள் பணி நிரந்தரம் செய்யப்படவில்லை.தற்காலிக பணியாளர்கள் சுமார் 8500 பேர் உள்ளனர் அவர்களை உடனடியாகபணி நிரந்தரம் செய்ய வேண்டும் நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் 2320 காலி பணியிடங்கள் உள்ளன அதனை உடனடியாக நிரப்ப வேண்டும் நுகர்பொருள் வாணிப கழகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கு மாதம் ரூ.1300 ஓய்வூதியமாக வழங்கப்படுகிறது அதனை இது 9000 ஆக உயர்த்தி வழங்க வேண்டும் தமிழக அரசு ரேஷன் கடை பணியாளர்கள் மூலம் தாயுமானவர் திட்டத்தில் மூத்த குடிமக்களுக்கு வீட்டுக்கே சென்று ரேஷன் பொருட்களை வழங்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது பொருட்களை எடுத்துச் செல்லும் வாகன செலவு மற்றும் பொருட்களை ஏற்றி இறக்கம் கூலி ஆகியவற்றை ஊழியர்களை செலவு செய்ய வேண்டியுள்ளது அந்த செலவினத்தை நிர்வாகமே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன முடிவில் திருச்சி மண்டல தலைவர் வேலு நன்றி கூறினார் கூட்டத்தில் மாநில நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்


No comments:
Post a Comment