திருச்சி தென்னூர் உழவர்சந்தை பகுதியில் த.வெ.க. கட்சியினர் பிறந்த நாள் விழாக் கொண்டாட்டம்:. - tamilkalam

News Update

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Wednesday, July 15, 2026

திருச்சி தென்னூர் உழவர்சந்தை பகுதியில் த.வெ.க. கட்சியினர் பிறந்த நாள் விழாக் கொண்டாட்டம்:.



 தென்னூர் பகுதி ஆர்.ஷேக் அலாவுதீன் 

ஏற்பாட்டில் 

விஜய் பிறந்த நாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள்- மற்றும், அன்னதானம் , 

துணை சபாநாயகர் ரவிசங்கர் , செந்தில் தலைமையில் வழங்கப்பட்டது.

தமிழக முதலமைச்சர் விஜய் மற்றும் தனது பிறந்த நாளை

முன்னிட்டு தென்னூர் பகுதி

ஆர். ஷேக் அலாவுதீன் ஏற்பாட்டில் பொதுமக்களுக்கு அன்னதானம், நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி தென்னூர் உழவர் சந்தை மைதானத்தில

நடந்தது. சட்டமன்ற

துணை சபாநாயகர் ரவிசங்கர்

மாவட்டத் தலைவர் செந்தில் 

ஆகியோர் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் அன்னதானம் வழங்கினர்.

பின்னர் ரவிசங்கர் பேசும்போது,

தமிழகத்திலேயே ஏன் இந்தியாவிலேயே ஒரு தலைவனுடைய பிறந்த நாளை வருடம் 365 நாட்களும் கொண்டாட கூடிய ஒரு தலைவன் என்று சொன்னால் அது தமிழக வெற்றி கழகத்தினுடைய ஆகச் சிறந்த தலைவரும் எங்கள் எண்ணங்களிலும் மனங்களிலும் வீற்றிருக்கும்,

தமிழக முதல்வர் விஜய் மட்டும் தான். நான் துறையூர் தொகுதியில் வாக்குக்கு ஒரு ரூபாய் கூட கொடுக்காமல் பத்தாயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதற்கு முதல்வர் விஜய் ஒருவரே காரணம்.

சட்டமன்றத்தில் பார்ட்டி ஃபண்டு என்ற ஒரு வார்த்தையை அவர், உச்சரித்ததும் பின்னங்கால் பிடரியில் அடிக்க வெளியே ஓடினார்கள்.

 தமிழக வெற்றி கழகம் என்பது ஏதோ ஒரு கவர்ச்சிக்காக உருவான கட்சி கிடையாது. உண்மையான

மதச்சார்பற்ற, சமூகநீதி கொள்கைக்காக உருவான இயக்கம். சிறுபான்மையினர் மற்றும் பாதிக்கப்பட்ட மக்களின் இருப்பதே ஜனநாயகம். நடுநிலை.

இருக்கட்டும். இன்றைக்கு அரசு அலுவலகங்களில் 

லஞ்சம் கொடுக்காமல் வேலை நடக்கிறது 

கடந்த 75 ஆண்டுகால தமிழக அரசியல் வரலாற்றிலேயே எந்த ஒரு சலனமும் இல்லாமல் ஒரு மனிதருக்காக அவரது, முகத்திற்காக அவர் மேல் கொண்ட அன்பிற்காக மட்டுமே ஒரு அரசியல் புரட்சி வெடித்தது.

இறுமாப்புடன் இருந்த திராவிட சக்திகளை வேரோடும், வேரடி மண்ணோடும் இருந்த இடம் தெரியாமல் பிய்த்து எறிந்து இருக்கிறீர்கள் என்றார்.

கிளாசிக்

போஸ்ட்

 செயலாளர் டி. அப்துல்லா, பகுதி இணை செயலாளர் 

ஷேக், பகுதி பொருளாளர் நிசார், 

துணைச் செயலாளர் பைரோஸ்,

பகுதி செயற்குழு உறுப்பினர்கள் அப்துல் பாசித், கார்த்திகேயன், ராஜா முஹம்மது ,

அக்பர் அலி, சண்முகம் ,நஸ்ரின்,

எனர்ஜி அப்துல் ரகுமான், பிரியா

சிவக்குமார், வழக்கறிஞர் புவனேஸ்வரி

 உள்ளிட்ட நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages