G.நித்தியானந்தம்
த.பெ. A.கணபதி
கதவு எண்: 22 கள்ளர் தெரு.என்ற முகவரியில் திருச்சியில் வசிக்கும் மேற்கண்ட நபர் பத்திரிக்கையாளர்களுக்கு அளித்த பேட்டியில்
நான் மேற்கண்ட முகவரியில் வசித்து வருகின்றேன். நான் தற்போது ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகின்றேன். திருச்சிராப்பள்ளி மாவட்டம், திருவெறும்பூர் வட்டம், பிரகாஷ் நகரில் மதுரையை தலைமையிடமாக கொண்ட Neo Max நிறுவனத்தின் கிளையை G.ரமேஷ் மற்றும் அவருடைய மனைவி R.சுகன்யா இருவரும் கடந்த 2014ம் வருடம் முதல் நடத்தி வந்தனர், மேற்படி இருவரும் என்னை பல முறை நேரில் சந்தித்து Neo Max என்ற நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தால் நல்ல லாபம் கிடைக்கும் என்று ஆசை வார்த்தை கூறி அதன்பேரில் நான் கடந்த 2017ம் வருடம் ரூ.2.50 கோடி முதலீடு செய்துள்ளேன், மேலும் எனது சகோதரி, அம்மா, அப்பா மற்றும் உறவினர்கள் என அனைவரும் மேற்படி நிறுவனத்தில் ரூ.8 கோடி முதலீடு செய்துள்ளோம். ஆனால் நாளது தேதிவரை எங்களுக்கு எந்தவிதமான தொகையும் கொடுக்காமல் ஏமாற்றி வந்ததால் நானும் சில நபர்களும் சேர்ந்து மதுரை மாவட்ட, பொருளாதார குற்றப்பிரிவு, காவல் உதவி கண்காணிப்பாளரிடம் கடந்த 2024ம் வருடம் புகார் கொடுத்தும் தற்போதுவரை மேற்படி ரமேஷ் மற்றும் அவருடைய மனைவி இருவரும் தங்களுடைய பணபலத்தை பயன்படுத்தி நடவடிக்கை எடுக்கவிடாமல் செய்து வருகின்றனர், மேற்படி ரமேஷ் என்பவர் எங்களிடமிருந்து ஏமாற்றி வாங்கிய பணத்தை கொண்டு தனது மனைவி சுகன்யா என்பவரின் பெயரில் பல ஏக்கர்
நிலங்களை துவாக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் நிலம் வாங்கி ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகின்றார்கள், நான் அது சம்மந்தமான ஆவணங்களை ஒப்படைத்து பொருளாதார் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை, மேலும் மேற்படி ரமேஷ் என்பவர் BHEL நிறுவனத்தில் தற்போதுவரை பணிபுரிந்து கொண்டு, சுமார் 5000ற்கும் மேற்பட்ட நபர்களிடம் பல கோடி ரூபாய் பணத்தை ஏமாற்றி மோசடி செய்தும் தற்போதுவரை அவர் மீது எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேற்படி மனஉளைச்சலுக்கும் வேதனைக்கும் ஆளாகியுள்ளோம்,
எனவே பத்திரிக்கையாளர் களாகிய தாங்கள் எனது புகார் மனுவின் மீது காவல் துறை நடவடிக்கை எடுக்க என் பேட்டியை செய்தியாக வெளியிட்டு மேற்படி ரமேஷ் மற்றும் சுகன்யா இருவரின் மீதும் காவல் துறை முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய வேண்டி, உதவி செய்யுமாறு தங்களை கேட்டுக் கொள்கின்றேன் என பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் கூறினார். நடவடிக்கை எடுக்குமா காவல் துறை?

No comments:
Post a Comment