புதிய வருமான வரி சட்டம் குறித்து
திருச்சியில்
வியாபாரிகளுடன் விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.
வருமான வரித்துறை உயர் அதிகாரிகள்நீண்ட விளக்கம் அளித்தனர்
திருச்சி வருமான வரி அலுவலகம் சார்பில் வருமான வரிச் சட்டம், 2025 குறித்த "பிராரம்ப் என்ற மாபெரும் விழிப்புணர்வு நிகழ்ச்சி, திருச்சி பெமினா ஓட்டலில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மதுரை மண்டல வருமான வரி முதன்மை ஆணையர் வசந்தன் தலைமை தாங்கி பேசுனார். அவர் கூறியதாவது
புதிய வருமான வரி சட்டம் குறித்தும், அந்த சட்டம் எந்த வகையில் அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில் எளிதாக இருப்பது குறித்து விளக்கமாக பேசினார். கூட்டத்தில்
திருச்சி வருமான வரி கூடுதல் ஆணையர் நித்யா கலந்து கொண்டு பேசும் போழுது புதிய வருமான வரிச் சட்டம், 2025-ன் பல்வேறு முக்கிய அம்சங்கள் குறித்தும், பழைய வருமான வரிச் சட்டம், 1961 மற்றும் புதிய வருமான வரிச் சட்டம், 2025 ஆகியவற்றுக்கு இடையேயான வேறுபாடுகள் குறித்தும் விளக்கமளித்தார். இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு வணிகர் பேரமைப்பு மாநில பொதுச் செயலாளர் கோவிந்தராஜுலு, பேசும் போது இந்த புதிய சட்டம் குறித்து வணிகர்கள் புரிந்து கொள்ள வேண்டும். ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் அதிகாரிகள் உங்களுக்கு எடுத்து கூறுவார்கள் என்று பேசினார். தமிழ்நாடு வணிகம் மற்றும் தொழில்துறை சங்கம் மற்றும் சங்கப் பிரதிநிதிகள், பல்வேறு வர்த்தக சங்கங்களைச் சேர்ந்தவர்கள், வரி ஆலோசகர்கள், வரிப் பிரதிநிதிகள், வரி செலுத்துவோர் பெருமளவில் கலந்து கொண்டனர்.
புதிய வருமான வரிச் சட்டம், 2025 குறித்து வரி செலுத்துவோர் மற்றும் பங்குதாரர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், அதன் முக்கிய அம்சங்களை விளக்கும் கையேடுகள் ,பான் கார்டு விண்ணப்பங்கள், புதிய பயன்பாட்டுப் படிவங்கள் மற்றும் வரும் மாதங்களில் வருமான வரி கணக்கு தாக்கல் செய்யப் பயன்படுத்தப்படும் படிவங்கள், முன்கூட்டிய வரி மற்றும் இதர வரிகளைச் செலுத்த வேண்டிய பிரிவுகள் மற்றும் சலான்கள் போன்ற விவரங்கள் இந்த "பிராரம்பா 2026, மாபெரும் பரப்புரை நிகழ்ச்சியில் தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் காட்சிப்படுத்தப்பட்டு விநியோகிக்கப்பட்டன. மேலும் வருமான வரி செலுத்த , இபைலிங் ,இணையதளத்தில் இணைக்கப்பட்டுள்ள 'கர் சாதி' என்ற செயற்கை நுண்ணறிவு மூலம் இயங்கும் சாட்பாட், புதிய வருமான வரிச் சட்டம், 2025 குறித்து 24 மணி வழங்குகிறது. இது படிப்படியான நேரமும் நிகழ்நேர வழிகாட்டுதலை வழங்குவதுடன், கடினமான வரி விதிமுறைகளை எளிமையாக்கி, வரி தாக்கலின் போது ஏற்படும் பிழைகளைக் குறைக்க உதவுகிறது. இந்த கூட்டத்தில் மங்கள் அண்ட் மங்கள் உரிமையாளர் முக்கப் பிள்ளை லைன் டேட்ஸ்
திருச்சி மாவட்ட தலைவர் ஸ்ரீதர், மாவட்ட செயலாளர் வெங்காய மண்டி தங்கராஜ்,மாநகர தலைவர் எஸ் ஆர் வி கண்ணன், மாநகர செயலாளர் பரணி பவன் ஆறுமுக பெருமாள், திருச்சி மாவட்ட இளைஞரணி தலைவர் ஏஎம்பிஅப்துல் ஹக்கீம்,திருச்சி மாநகர இளைஞரணி தலைவர் கே.எம்.எஸ். மைதீன்,திருச்சி மாநகர இளைஞரணி செயலாளர் திருமாவளவன், மாநில இணைச் செயலாளர்கள் காந்தி மார்க்கெட் காதர்மைதீன், கமலக்கண்ணன், மாநிலத் துணைத் தலைவர் கந்தன், மாநில இணைச் செயலாளர் ரஹீம்,டோல்கேட் ரமேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
.


No comments:
Post a Comment