கோவில், சொத்துக்கள் மீட்கப்படும் திருச்சியில் அறநிலையத்துறை பேட்டி: - tamilkalam

News Update

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Saturday, May 23, 2026

கோவில், சொத்துக்கள் மீட்கப்படும் திருச்சியில் அறநிலையத்துறை பேட்டி:

கோவில் ஆக்கிரமிப்பு சொத்துக்கள் மீட்பதற்கு தீவிர நடவடிககை  எடுக்க தயாராக உள்ளதாக தெரிவித்தார்.

கோவில்களில் நெரிசல் இல்லாமல் பக்தர்கள் தரிசிக்க ஏற்பாடு செய்யப்போவதாக

திருச்சியில் அமைச்சர் ரமேஷ் பேட்டி:

திருச்சி பாரதிதாசன் சாலையில் அமைந்துள்ள மன்னர் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் திருவுருவச் சிலைக்கு அவரது 135 1-வது பிறந்த நாள் விழாவினை முன்னிட்டு தமிழ்நாடு அரசின் சார்பில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் எஸ்.ரமேஷ் , சட்டமன்ற பேரவை துணை சபாநாயகர் துறையூர் மு.ரவிசங்கர், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத் தலைவர் கு.ப.கிருஷ்ணன் , மாவட்ட ஆட்சித்தலைவர்வே.சரவணன், மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் ரா.கதிரவன் , முசிறி சட்டமன்ற உறுப்பினர் எம்.விக்னேஷ் , திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினர் நவல்பட்டு எஸ்.விஜி , மாநகராட்சி ஆணையர் லி.மதுபாலன் , ஆகியோர் இன்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.இந்நிகழ்வில் நிர்வாகிகள் செந்தில், குடமுருட்டி, கரிகாலன் பத்மநாதன்,என் எஸ் பூபதி,நாகநாதர் பாண்டி,ஏர்போர்ட் விஜி,

எஸ். ஜி.சுந்தர்,வெள்ளைச்சாமி,

வழக்கறிஞர் ஜான் ரஸ்கின்,எம்ஜிஆர் நகர் கரிகாலன்,வக்கீல்கள் முல்லை சுரேஷ்,பொன் முருகன்,மற்றும் உஸ்மான் பாபு உய்ய கொண்டான் திருமலை பால்ராஜ், வரகனேரி அரசு, வீரையன்,இனியானூர் இன்ஜினியர் பரமசிவம்,உடையான் பட்டி செல்வம்,கேபிள் முஸ்தபா,

திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் மனித உரிமை பிரிவு தலைவர் எஸ் ஆர் ஆறுமுகம்,தமிழக வெற்றி கழக வழக்கறிஞர் ஆர். ஏ.அஸ்வின் ராஜா,பெரியண்ணா பில்டர்ஸ் செந்தில்குமார் உள்பட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

பின்னர் அமைச்சர் ரமேஷ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது.ஃ

எங்களது கொள்கை மதச்சார்பற்ற சமூக நீதி அதுதான் எங்கள் கொள்கையாக" எங்களது தலைவர் முன்னிறுத்தினார் "அந்தகொள்கையை ஏற்றுக்கொண்டு சாதிய வேற்றுமை தவிர்த்து தந்தை பெரியார் சட்டப் மேதை அம்பேத்கரை கொள்கை தலைவராக ஏற்றுக்கொண்டு கட்சியில் இணைந்து பணியாற்றி வருகிறோம்..

சாதியோ பணமோ இனமோ மொழியோ பாலினமும் எந்தவித பாகுபாடும் இங்கே கிடையாது என்பதை உறுதிமொழி ஏற்றுக்கொண்டு ஒவ்வொரு நாளும் அந்த உறுதியை நெஞ்சில் தாங்கிக் கொண்டு இருக்கிறோம்.


சாதி பார்த்து இனம்,பணம் பார்த்து இனம் பார்த்து எதைப் பார்த்தும் எங்கள் தலைவர் எங்களுக்கு வாய்ப்பு கொடுக்கவில்லை சேவை செய்யக்கூடிய மனநிலை இருக்கிறதா என்பதை பார்த்து தான் வாய்ப்பு வழங்கியிருக்கிறார் சாதியைப் வைத்து இங்கு பேச வேண்டிய அவசியம் கிடையாது மக்களுக்காக இந்த சேவை செய்ய வந்திருக்கக்கூடிய எண்ணத்தை தான் நாம் பார்க்க வேண்டும். 

எங்கள் தலைவருக்காக மட்டுமே அனைவரும் வாக்களித்து உள்ளார்கள் எங்களுக்காக வாக்களிக்கவில்லை .

தலைவர் விஜயை திரையில் பார்க்கும்போது யாரும் ஜாதி மதம் இனம் அடிப்படையில் அவரை பார்க்கவில்லை அதேபோன்றுதான் எங்களையும் மக்கள் பார்க்கிறார்கள் இந்த தலைவருக்கும் இதுபோன்ற பிரிவினை பார்க்கக்கூடிய எண்ணமும் கிடையாது. 

கோயிலுக்கு வரக்கூடிய பக்தர்கள் ஒரு நல்ல மனநிலையில் சுவாமி கும்பிட்டு விட்டு அதே மனநிலையோடு வெளியேற வேண்டும் அவர்களுக்கு எவ்வித சிரமமும் ஏற்படக்கூடாது கோவில்களில் இருக்கக்கூடிய கூட்ட நெரிசல் மற்றும் நீண்ட நேரம் காத்திருக்கும் நிலை ஏற்படாத வண்ணம் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தி உள்ளோம். 

அதேபோன்று கோவில் சார்ந்து இருக்கக்கூடிய சொத்துக்கள் நிலங்கள் ஆக்கிரமிப்புகள் அனைத்தும் ஒவ்வொன்றாக ஆய்வு செய்து மக்களுக்குப் பயனளிக்கக் கூடிய வகையில் அனைத்தையும் மீட்டு கொண்டு வரப்படும். 

இந்து சமய அறநிலைத்துறையில் பணியாற்றும் உயர்மட்ட அதிகாரிகள் மட்டும் அல்ல கீழ்மட்ட ஊழியர்கள் வரை எந்தவிதமான ஊழலும் எந்தவித அதிகாரத்தையும் பயன்படுத்த இடம் கிடையாது.


மைக்ரோ மேனேஜ்மென்ட் நானே செய்து அனைத்து கோவில்களும் எனது நேரடி கண்காணிப்பிலேயே இருக்கும். 

ஏற்கனவே செயல்பட்டுக் கொண்டிருக்கும் திட்டங்கள் அனைத்தும் திறன் பட செயல்படுத்தவும் புதிய திட்டங்களும் கொண்டு வரப்படும். 

மக்கள் பயனளிக்கக் கூடிய வகையில் மேம்படுத்தப்படும். 

திருக்கோவில்களில் இதுவரை ஏதேனும் முறைகேடுகள் நடைபெற்றிருந்தால் அதை அனைத்தும் சரி செய்யப்பட்டு இந்து சமய அறநிலைத்துறை ஒரு சிறந்த துறை அனைவரும் பாராட்டக்கூடிய துறையாக செயல்படுவேன்.

ஸ்ரீரங்கம் மற்றும் திருவானைக்கோவில் பகுதிகளில் அடிமனை பிரச்சனை அதிகமாக உள்ளது அது தொடர்பாக இன்று மாலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆய்வுக் கூட்டம் இருக்கிறது அதன் பின்னர் முழுமையான விவரங்களை தெரிவிக்கிறேன். 

மக்களுக்கு நியாயமான முறையில் என்ன கிடைக்க வேண்டுமோ அதை சரியான முறையில் பெற்று தருவேன்...

கோவில்களில் அனைத்து அடிப்படை வசதிகளும் மேம்படுத்த வேண்டும் என அறிவுறுத்தி இருக்கிறேன். 

கொஞ்சம் அவகாசம் மட்டும் கொடுங்கள் அனைத்தையும் நிச்சயம் செய்வேன் 

இவ்வாறு அவர் கூறினார்

திருச்சி பாரதிதாசன் சாலையில் அமைந்துள்ள மன்னர் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் திருவுருவச் சிலைக்கு அவரது 135 1-வது பிறந்த நாள் விழாவினை முன்னிட்டு தமிழ்நாடு அரசின் சார்பில் அமைச்சர் எஸ்.ரமேஷ் , துணை சபாநாயகர் துறையூர் மு.ரவிசங்கர், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத் தலைவர் கு.ப.கிருஷ்ணன் ,கலெக்டர்.சரவணன்ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்திய போது எடுத்த படம்

அருகில் எம்எல்ஏக்கள் கதிரவன்,நவல்பட்டு விஜி,விக்னேஷ் உள்பட பலர் உள்ளனர்
 

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages