திருவெறும்பூர் பகுதியில் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வாக்கு சேகரித்தார். - tamilkalam

News Update

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Friday, April 10, 2026

திருவெறும்பூர் பகுதியில் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வாக்கு சேகரித்தார்.


 திருவெறும்பூர் பகுதியில் இன்று அன்பில் மகேஷ் பொய்யாமொழி உரை நிகழ்த்தி , வாக்கு சேகரித்தார். எடப்பாடி பழநிசாமிக்கு

|  தேர்தல் முடிவுகள் பற்றிய கருத்துக்கணிப்புகள் அளித்துள்ள தோல்வி பயத்தால், முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சரை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வசைபாடி வருகிறார்,, என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பேசினார்



திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதி மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளரான அமைச்சர் முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, இன்று திருவெறும்பூர் வடக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட வாழவந்தான் கோட்டை, ஐயம்பட்டி, ரெட்டியார் தோப்பு, பெரியார் நகர், காமாட்சி அம்மன் நகர், லூர்து நகர் மற்றும் பத்தாளபேட்டை ஊராட்சியைச் சேர்ந்த மேல மங்காவனம், கீழ மங்காவனம் ஆகிய பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.



பிரச்சாரத்தின் போது அமைச்சர் பேசியதாவது:

வாழவந்தான் கோட்டை ஊராட்சி: கடந்த ஐந்தாண்டுகளில் மட்டும் சுமார் ₹32.20 லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு மக்கள் நலத்திட்டப் பணிகள் முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்பட்டுள்ளன.

திருவெறும்பூர் தொகுதி: ஒட்டுமொத்தமாக இத்தொகுதியில் ₹450 கோடி மதிப்பீட்டில் பல்வேறு உட்கட்டமைப்புப் பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

புதிய பாலம்: இப்பகுதி மக்களின் கோரிக்கையான சிறிய பாலம் அமைக்கும் பணி, தேர்தல் முடிந்து 30 நாட்களில் தொடங்கி வைக்கப்படும். அதற்கு அடிக்கல் நாட்ட நானே மீண்டும் வருவேன். 

ஒன்றிய அரசு மற்றும் அதிமுக மீது விமர்சனம்:

ஒன்றிய பாஜக அரசு தமிழகத்திற்கு இழைக்கும் துரோகங்களைச் சுட்டிக்காட்டிய அமைச்சர்:

"தமிழகத்திற்கு வர வேண்டிய 100 நாள் வேலைத் திட்டத்திற்கான ₹2,000 கோடி நிதியை வழங்காமல் ஒன்றிய அரசு முடக்கியுள்ளது. இத்தகைய துரோகம் இழைக்கும் பாஜகவுடன் கூட்டணி வைத்துக்கொண்டு, எடப்பாடி பழனிசாமி எந்த முகத்தோடு மக்களைச் சந்திக்க வருகிறார்?" என்று கேள்வி எழுப்பினார்.


மேலும், சமீபத்திய தேர்தல் கருத்துக்கணிப்புகள் திமுக கூட்டணி 179 இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் மு.க. ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி அமையும் எனக் கூறுவதைப் பார்த்து, தோல்வி பயத்தில் எடப்பாடி பழனிசாமி நிதானம் இழந்து பேசி வருகிறார் என விமர்சித்தார்.

திமுகவின் சாதனைகள்:

மகளிர் உரிமைத் தொகை, இலவச விடியல் பேருந்து பயணம் மற்றும் பள்ளி மாணவர்களுக்கான காலை உணவுத் திட்டம் போன்றவற்றைச் சுட்டிக்காட்டிய அவர், தமிழகத்தைக் காக்கும் 'உதயசூரியன்' சின்னத்திற்குப் பெருவாரியான வாக்குகள் அளித்து தன்னை வெற்றி பெறச் செய்யுமாறு கேட்டுக்கொண்டார்.

இந்த பிரச்சாரத்தின் போது தலைமைச் செயற்குழு உறுப்பினர் கே.என். சேகரன், திருவெறும்பூர் வடக்கு ஒன்றிய செயலாளர் கருணாநிதி, முன்னாள் ஒன்றியக் குழு தலைவர் சத்யா கோவிந்தராஜ் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் எனத் திரளானோர் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages