அண்ணல் அம்பேத்கரின் 135 வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சியில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இதனை கொண்டாடும் வகையில்
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
சார்பாக இன்று (14.04.2026) காலை 11 மணிக்கு திருச்சி மத்திய பேருந்து நிலையம் அரிஸ்டோ ஹோட்டல் அருகில் உள்ள அண்ணல் அம்பேத்கரின் உருவச்சிலைக்கு மாலை அணிவித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்விற்கு ம.க.இ.க மாவட்ட செயலாளர் ஜீவா, பு.ஜ.தொ.மு மாவட்ட தலைவர் செந்தில் தலைமை தாங்கினர்.
இந்நிகழ்வில் ம.க.இ.க, பு.ஜ.தொ.மு நிர்வாகிகள், உறுப்பினர்கள் மக்கள் உரிமை பாதுகாப்பு மையத்தின் வழக்கறிஞர்கள் என திரளாக பங்கேற்றனர்.


No comments:
Post a Comment