தேசிய சனநாயக கூட்டணிகட்சியின் திருச்சி வேட்பாளர் வேட்புமனு தாக்கல்:... - tamilkalam

News Update

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Thursday, April 2, 2026

தேசிய சனநாயக கூட்டணிகட்சியின் திருச்சி வேட்பாளர் வேட்புமனு தாக்கல்:...



 அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியின்  வேட்பாளராகதிருச்சி மேற்கு சட்டமன்றத் தொகுதியில் அ.ம.மு.க, கட்சியின் புறநகர் மாவட்ட செயலாளர் (தொட்டியம் ராஜசேகர் வேட்பாளராக போட்டியிடுகிறார். இதனைத் தொடர்ந்து இன்று திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

 முன்னதாக திருச்சி நீதிமன்றம் வளாகம் அருகே உள்ள புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்அவர்களின் திருவுருவ சிலைக்கு அ.இ. அ.தி.மு.க  மாநகர் மாவட்ட செயலாளரும், முன்னாள் திருச்சி மாநகராட்சி துணை மேயருமான  ஜெ. சீனிவாசன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர்  ஊர்வலமாக வந்து வேட்பு மனுவை தாக்கல் செய்தார். அ.ம.மு.க கட்சியின்  திருச்சிமாநகர் மாவட்ட செயலாளர் செந்தில்நாதன், அ.ம.மு.க.அமைப்பு செயலாளர் சாருபாலா தொண்டைமான் மற்றும் பா.ஜ.க.திருச்சி மாவட்ட தலைவர் ஒண்டி முத்து உள்ளிட்ட மேற்கு தொகுதி அதிமுக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொணடு தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages