திருச்சியில் அதிரடி வேட்டை :
கஞ்சா,போதை மாத்திரைகள்,மதுபானம் விற்ற 5 பேர் கைது
மூட்டை மூட்டையாக போதை பொருள்களும் சிக்கியது
திருச்சி இ.பி.ரோட்டில் உள்ள பொது கழிப்பிடம் அருகே கஞ்சா விற்பதாக கோட்டை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.அதன் பேரில் போலீசார் அப் பகுதியில் ரோந்து சென்றனர்.அப்போது அங்கு கஞ்சா விற்று கொண்டிருந்த அதே பகுதியைச் சேர்ந்த தருண் (வயது 22) என்பவரை கைது செய்தனர்.
திருச்சி காந்தி மார்க்கெட் பெரிய பிள்ளையார் கோவில் அருகே தமிழக அரசால் தடை செய்யப்பட்ட வெளிமாநில லாட்டரி சீட்டுகள் விற்கப்படுவதாக காந்தி மார்க்கெட் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.அதன் பேரில் போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.அப்போது அங்கு திருச்சி தாரநல்லூர் பகுதியைச் சேர்ந்த செந்தில்குமார் (வயது 36) என்பவர் லாட்டரி சீட்டுகள் விற்றதாக அவரை போலீசார் கைது செய்தனர்.
திருச்சி ரயில் நிலையம் அருகே தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்கப்படுவதாக கண்டோண்மென்ட் போலீசருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் அப் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு புதுக்கோட்டை மாவட்டம் குன்னத்தூர் பகுதியைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன் (வயது 20)என்பவர் புகையிலைபொருட்கள் விற்றதாக போலீசார் அவரை கைது செய்தனர். இதே போல் திருச்சி குமரன் நகர் பகுதியில் புகையிலை பொருட்கள் விற்றதாக திருச்சி வரகனேரி பகுதியைச் சேர்ந்த பாலசுப்பிரமணி (வயது 48) என்பவரை அரசு மருத்துவமனை போலீசார் கைது செய்தனர். இவர்களிடமிருந்து 240 கிராம் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
திருச்சி மாநகராட்சியில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரியாக பணிபுரிந்து வருபவர் அன்புச்செல்வன் (வயது 43). இவர் சம்பவத்தன்று திருச்சி சங்கிலியாண்டபுரம் மணல்வாரி துறை ரோட்டில் உள்ள ஒரு கொரியர் அலுவலகத்தில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள்அடையாளம் தெரியாத நபரால் அனுப்பி வைத்தது தெரிய வந்தது. இது குறித்து அன்புச்செல்வன் பாலக்கரை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.அதன் பேரில் போலீசார் அங்கு வந்து 75 கிலோ மதிப்புள்ள புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.மேலும்இதனை அனுப்பி வைத்த அடையாளம் தெரியாத நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
திருச்சி பாலக்கரை அருகே போதை மாத்திரைகள் விற்கப்படுவதாக பாலக்கரை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.அப்போது அங்கு சந்தேகப்படும் படியாக நின்றிருந்த திருச்சி பாலக்கரை காஜா பேட்டை பகுதியை சேர்ந்த பிலாலுதீன் (வயது 30) என்பவரை பிடித்து விசாரணை செய்தனர்.விசாரணையில் அவர் போதை மாத்திரைகள் விற்பனை செய்தது தெரியவந்தது.இதை எடுத்து பாலக்கரை போலீசார் அவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 8 போதை மாத்திரைகள் ஒரு ஊசி மற்றும் ஒரு சலைன் வாட்டர் பாட்டில் பறிமுதல் செய்யப்பட்டது.
திருச்சி கண்டோன்மெண்ட் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியான ரெயில் நிலையத்திற்கு அருகே மதுபான பாட்டில்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.அப்போது அங்கு மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்ததாக திருச்சி பாலக்கரை காஜா பேட்டை பகுதியை சேர்ந்த ரமேஷ் வயது ( 63 ) என்பவரை போலீசார் கைது செய்தனர்.அவரிடம் இருந்து 28 மதுபான பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
No comments:
Post a Comment