திருச்சி மாவட்ட ஆட்சியரையும், போலீஸ் கமிஷனரையும் மாற்றக்கோரி மனு:-.. - tamilkalam

News Update

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Saturday, March 21, 2026

திருச்சி மாவட்ட ஆட்சியரையும், போலீஸ் கமிஷனரையும் மாற்றக்கோரி மனு:-..

 சட்டமன்ற தேர்தல் தேதிஅறிவிப்பை முன்னிட்டு

திருச்சி கலெக்டர்  மற்றும், போலீஸ் கமிஷனரை இடமாற்றம் செய்ய வேண்டும் என

இந்திய தேர்தல் கமிஷனருக்கு பாஜக மாவட்ட தலைவர் ஒண்டி முத்து கோரிக்கை மனு வைத்துள்ளார்.

இந்திய தேர்தல் தலைமை தேர்தல் அதிகாரிக்கு திருச்சி மாநகர், மாவட்ட பாஜக தலைவர் ஒண்டிமுத்து கோரிக்கை மனு அனுப்பி உள்ளார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

 சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல்கள் அரசியலமைப்பின் ஒரு அடிப்படை அம்சமாகும். மேலும், அரசியலமைப்பின் 324-வது பிரிவின் கீழ், தேர்தல்களின் மேற்பார்வை, வழிகாட்டுதல் மற்றும் கட்டுப்பாடு ஆகியவை இந்தியத் தேர்தல் ஆணையத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. எனவே, நிர்வாக மற்றும் காவல் அமைப்புகள் நடுநிலையாகவும், பாரபட்சமின்றியும், வெளிப்படையாகவும் செயல்படுவதை உறுதி செய்வது ஆணையத்தின் கடமையாகும்.

திருச்சி மாவட்டத்தில் கலெக்டராக ப


ணியாற்றிவரும் ஆட்சியர் சரவணன் கடந்த சில வருடங்களாக தொடர்ந்து மாநகராட்சி கமிஷனராக பணியாற்றி பின் அடுத்த பதவியாக ஆட்சியர் பதவியில் இங்கேயே உள்ளார்.மேலும் திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் காமினி மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் சீனிவாசன்ஆகியோர் தொடர்ந்து பணியாற்றி வருகிறார்கள்.

எனவே அவர்களை வைத்து கொண்டு தேர்தலை சந்திப்பது சாத்தியமாகாது. மேற்கூறிய அதிகாரிகளை திருச்சி மாவட்டத்திலிருந்து உடனடியாக இடமாற்றம் செய்ய வேண்டும்.அவர்களுக்கு பதிலாக நடுநிலையான சுதந்திரமான மற்றும் கட்சி சார்பற்ற அதிகாரிகளை நியமிக்க வேண்டும்.தேர்தல் காலத்தில் நிர்வாக மற்றும் காவல்துறை அமைப்புகளில் மீது கடுமையான கண்காணித்தையும் ,மேற்பார்வையும் உறுதி செய்ய வேண்டும்.சுதந்திரமான நியாயமான மற்றும் வெளிப்படையான தேர்தல் உறுதிப்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும்.நடவடிக்கை எடுப்பதில் ஏற்படும் எந்த ஒரு தாமதமே தேர்தல் செயல்முறையின் நேர்மையை சரி செய்ய முடியாதபடி பாதிப்பு ஜனநாயக நிறுவனங்கள் மீதான நம்பிக்கையை குறைத்து விடும்.

இவ்வாறு அந்த மனுவில் மாவட்டத் தலைவர் ஒண்டிமுத்து கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages