கொள்முதல் விலை கிடைக்க வலியுறுத்தி
மக்காச்சோளத்தை தரையில் கொட்டி விவசாயிகள்.. திருச்சியில் இன்று.. .(2.2.2026)போராட்டம் - ...
திருச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு நடத்தினர்
தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்கம் சார்பில் அச்சங்க மாநில தலைவர் விஸ்வநாதன் தலைமையில் ஏராளமான விவசாயிகள் இன்று காலை திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் அருகே விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இந்த ஆர்ப்பாட்டத்தில்
தமிழ்நாட்டில் மக்காச்சோளத்தை தனியார் வியாபாரிகள் ரூபாய் 1,800,2,000 வரை கொள்முதல் செய்து வருகின்றனர். மத்திய அரசு மக்காச்சோளத்திற்கு குவிண்டாலுக்கு ரூபாய் 2 ஆயிரத்து 400 விலை நிர்ணயம் செய்துள்ளது இது தமிழ்நாட்டு விவசாயிகளுக்கு கிடைக்கவில்லை என முறையிட்டோம். அதன்படி திருச்சி மாவட்ட கலெக்டரிடம் மக்காள சோளத்திற்கு சரியான விலை கிடைக்க நடவடிக்கை வேண்டி மனு அளித்தோம் ..
ஆனால் போதிய விலை கிடைக்கவில்லை இதனால் மக்காச்சோள விவசாயிகள் வாழ்வாதாரம் பெரும் பதிப்படைந்துள்ளது. ஒன்றிய அரசு அறிவித்த விலையை முறையாக மாநில அரசுகள் அமல்படுத்த கலெக்டர் மற்றும் வேளாண் மார்க்கெட்டில் நடைமுறைப்படுத்த வேண்டும். என்ன கோரிக்கை விடுத்தனர்.
மக்காச்சோளத்தை தரையில் கொட்டியதால் பரபரப்பு..
விவசாயிகள் அனைவரும் மக்காச்சோளத்தை தரையில் கொட்டி சாக்கு பைகளில் எடுத்து வந்து மாலை அணிவித்து உரிய விலை தர வேண்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இதனால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

No comments:
Post a Comment