திருச்சியில் மின்வாரிய தொழிற்சங்கங்கள் இணைந்து கூட்டு குழு ஆர்பாட்டம்:- - tamilkalam

News Update

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Monday, March 2, 2026

திருச்சியில் மின்வாரிய தொழிற்சங்கங்கள் இணைந்து கூட்டு குழு ஆர்பாட்டம்:-




 

மின் வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு ஆர்ப்பாட்டம்


திருச்சிராப்பள்ளி, மார்ச், 3,

மின்வாரியத்தில் பணி புரியும்
கிளாஸ் - 1 மற்றும் கிளாஸ் - 2
பொறியாளர்களுக்கும்,அலுவலர்களுக்கும் ஊதிய உயர்வு வழங்கிட மறு ஆலோசனை வழங்கிடக் கோரி தமிழ்நாடு மின்வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் 
செவ்வாய் கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் திருச்சி மன்னார்புரம் மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு  நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு
இன்ஜினியர் அசோஷியேசன்
மாநில செயலாளர் 
விக்ரமன் தலைமை தாங்கினார்.
மின்துறை பொறியாளர் அமைப்பு மாநில துணை பொதுச்செயலாளர் இருதயராஜ்,
தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு வட்ட செயலாளர் நடராஜன்,
 எம்ப்ளாயீஸ் பெடரேசன் சிவசெல்வம், இன்ஜினியர் சங்கம் சங்கர் கணேஷ்,   தொழிலாளர்  பொறியாளர் ஐக்கிய சங்கம் ஆலய மணி,நகரிய கோட்ட பொறியாளர் முத்துராமன்
உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

ஆர்பாட்டக்காரர்கள் உரை நிகழ்த்திய போது மக்களுக்கு கோடைகால மின் பற்றாக்குறையை. சரி செய்ய ஒரு நாளைக்கு
கோடிக் கணக்கில் மின்சாரம் கொள்முதல் செய்யப்படுகிறது. ஆனால் எங்கள் கோரிக்கைக்கு ஆகும் தொகை தமிழகத்திற்கு ஒருநாள் மின் கொள்முதல் செய்யும் செலவுதான், இந்த குறைந்த, எளிமையான கோரிக்கை கூட நிறைவேற்ற மனமில்லதா அரசா?இந்த அரசு என கேள்வி எழுப்பினர். பொது மக்களின் சேவை துறையிலேயே ,மிகமிக , அத்தியாசிய தேவை மின் தேவை. ஆனால் ஏறத்தாழ அறுபது ஆயிரம் ஊழியர்கள்  பற்றாக்
குறையில் மிக அதிமான வேலைப் பழுவில் வேலை செய்யும் துறையாகவும், அதிக விமர்சனத்திற்கு உள்ளாகும் துறையாகவும். மின்வாரியத்துறை உள்ளது. இரவு, பகல், மழை, குளிர் என்றும் பாராமல் உழைக்கும் உழைப்பாளிகளாக, உழைக்கும் அதிகாரிகள் முதல். அடி மட்ட ஊழியர்களுக்கு வரை அரசு எங்கள் மீது கவனம் செலுத்தி கோரிக்கைகளை நிறைவேற்ற மென கேட்டுக் கொண்டனர்.  ஆகவே .அரசு மின்வாரிய ஊழியர்களின் கோரிக்கையை உடனடியாக ,,நிறைவேற்ற அரசிடம் அவர்களது ஆர்பாட்டத்தின் போது தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages