இளம் பெண்திடீர் மாயம்
திருச்சி தென்னூர் பகுதியைச் சேர்ந்தவர் தனுஷ்கோடி (65). இவரது மகள் ஜெயஸ்ரீ (27). இவர் போட்டித் தேர்வுகளுக்கு தயாராகி வந்தார். இதனால் தினமும் மேல புதூர் பகுதியில் உள்ள போட்டி தேர்வு பயிற்சி நிறுவனத்தில் பயிற்சி பெற்று வந்தார். ஜெயஸ்ரீயை அவரது தந்தை தினமும் போட்டி தேர்வு தயாராகும் நிலையத்தில் விட்டு மீண்டும் வீட்டிற்கு அழைத்து வந்தார். இந்த நிலையில் நேற்று அங்கு சென்ற ஜெயஸ்ரீ மாயமானார் இதுகுறித்து அந்த நிறுவனத்திடம் கேட்டபோது அவர் ஏற்கனவே சென்று விட்டதாக அவர்கள் தெரிவித்தனர் இது குறித்து பாலக்கரை பகுதியில் ஜெயஸ்ரீ யை தேடி வருகின்றனர்.
No comments:
Post a Comment