ஆடு திருடிய
2 பேர் கைது
திருச்சி ஸ்ரீரங்கம் ஆர்.எஸ்.சாலையைச் சேர்ந்தவர் குணசேகரன் (28). இவர் தன் ஆடுகளை தன் வீட்டின் அருகே மேய்ச்சலுக்கு விட்டிருந்தார். அப்போது ஒரு ஆடு மாயமானது தெரிய வந்தது. இது குறித்து ஸ்ரீரங்கம் போலீசார் வழக்கு பதிந்து ஆட்டை திருடிய ஸ்ரீரங்கத்தைச்சேர்ந்த முருகானந்தம் (26) மற்றும் கீழவாசலைச் சேர்ந்த முருகன் (25) ஆகிய இரண்டு வாலிபர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர் மேலும் தப்பி ஓடிய
விக்கி என்கிற ராமச்சந்திரன் என்பவரை தேடி வருகின்றனர்.
இவர்களிடமிருந்து திருடப்பட்ட ஆடு மீட்கப்பட்டது.
No comments:
Post a Comment