திருச்சியில் வழக்கறிஞர்கள் போராட்டம் - tamilkalam

News Update

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Tuesday, February 24, 2026

திருச்சியில் வழக்கறிஞர்கள் போராட்டம்

 தமிழக அரசே ! தமிழக அரசே !! நடவடிக்கை எடு ! நடவடிக்கை எடு!! என்னும் முழக்கத்தோடு

போரட்டம் நடத்தினர். அவர்கள் தங்கள் கோரிக்கையாக கூறியது.---

இலால்குடியில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக, வாடகை கட்டிடத்தில் எந்தவிதமான அடிப்படை வசதிகளும் இல்லாமல் நீதிமன்றங்கள் செயல்பட்டு வருகிறது. புதிய நீதிமன்றம் கட்டிடம் கட்டுவதற்கு மட்டும் இலால்குடியில் அரசு இடம் தேர்வு செய்து தராமல் தொடர்ந்து இழுத்தடித்து வருகிறது. வழக்கறிஞர்கள் ஆகிய நாங்களும் தொடர்ந்து பல்வேறு வகையில் போராட்டங்கள் நடத்தி வருகிறோம். ஆனால், எந்தவித முன்னேற்றமும் இல்லை, என்றும். ___




எனவேதான் நாங்கள் அரசு அலுவலகங்களை முற்றுகையிடும் போராட்டம் முன் வைத்துள்ளோம். மேற்படி போராட்டத்திற்கு பொதுமக்கள், விவசாயிகள், வியாபாரிகள் அனைத்து அரசியல் கட்சியினர், மாணவர்கள், தன்னார்வலர்கள், சமூக ஆர்வலர்கள் ஆகியோர் மேற்படி போராட்டத்திற்கு ஒத்துழைப்பு அளித்து போராட்டம் வெற்றியடைய செய்யுமாறு வழக்கறிஞர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் கேட்டுக் கொண்டனர். 

மேலும் , தற்போதைய மிகப் பெரிய அரசியல் பலமிக்கவர்களும் , ஆளும் அரசு. சேர்ந்த அமைச்சர்களுக்கும் லால்குடி மிகவும் பரிச்சமான ஊராகவும் உள்ளது. ஆனால் வழக்குரைஞர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை என்றும் பேசினர்.


இவண்,


வழக்கறிஞர்கள் சங்கம், இலால்குடி.


No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages