ஸ்ரீ அண்ணாமலையார் அறக்கட்டளையின் முதலாம் ஆண்டு வெற்றி விழா மற்றும் இரண்டாம் ஆண்டு துவக்க விழா திருச்சி அருண் ஹோட்டலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
விழாவிற்கு ஸ்ரீ அண்ணாமலையார் அறக்கட்டளையின் நிறுவனத் தலைவர் சிவபிரகாசம் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினர்களாக சுரேஷ் பாபு (எ) சுகந்தி ராஜா, அரிமா சாமிநாதன், அரிமா முனைவர் பேராசிரியர் ராச ரத்தினம், வேம்பு ட்ரான்ஸ்போர்ட் சதீஷ் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர்.
முன்னதாக, பள்ளி மாணவிகளின் வரவேற்பு பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவில் நலிவடைந்தோர், பள்ளி மாணவ-மாணவிகள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் கர்ப்பிணிப் பெண்களுக்கு நலத்திட்ட உதவிகளும், முதியோர் இல்லத்திற்குத் தேவையான உணவுப் பொருட்களும் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில் ஒருங்கிணைப்பாளர் அருணாச்சலம், பொருளாளர் ஜேம்ஸ், லட்சுமணன் உள்பட திரளானோர் கலந்துகொண்டனர். நிறைவாகச் செயலாளர் கோபால் நன்றி கூறினார்.


No comments:
Post a Comment