இந்த மாத்திற்குள்கோரிக்கைகளை நிறைவேற்றவில்லையென்றால்
நவம்பர் மாதத்தில்
மின்வாரிய கேங்மேன், பணியாளர்கள் போராட்டம் செய்யப்போவதாக அறிவித்தனர்.
திருச்சியில் நடந்த கூட்டத்தில் தீர்மானம்
தமிழ்நாடு மின்வாரிய கேங்மேன் மற்றும் பணியாளர்கள் சங்கத்தில் மாநில பொதுக்குழு செயற்குழு கூட்டம் திருச்சி உறையூர் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
கூட்டத்தில் செயல் தலைவர் பாலகிருஷ்ணன் வரவேற்று பேசினார் கூட்டத்திற்கு மாநில தலைவர் தமிழரசு தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் ராமன், பொருளாளர் பாலாஜி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் எம்பிளாயிஸ் யூனியன் பெடரேசன் பொதுச் செயலாளர் சேக்கிழார் சிறப்புரை ஆற்றினார் கூட்டத்தில்
கேங்மேன் பணியாளர்களின் முக்கிய கோரிக்கையான 9,163 கேங் மேன் பணியாளர்களையும் கள உதவியாளர் பணியிடங்களுக்கு மாறுதல் செய்ய வேண்டும். கேங்மேன் பணியாளர்களின் உரிமைகள் மற்றும் பணி சலுகைகளை உறுதி செய்ய வேண்டும். காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். பணியாளர் நலன் மற்றும் பாதுகாப்பு தொடர்பான கோரிக்கைகள் மற்றும் மின்வாரிய பணியாளர்களின் பணி, ஊதியம் பணியிட மாற்றம், பணி சலுகைகள் போன்ற பல்வேறு முக்கிய கோரிக்கைகளை இந்த மாத இறுதிக்குள் தமிழக அரசு நிறைவேற்றி தரவில்லை யென்றால் வருகிற நவம்பர் மாதத்தில் மின்வாரிய பேங்க் மேன் பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.முடிவில் தகவல் நுட்ப செயலாளர் இருதயராஜ் நன்றி கூறினார்.


No comments:
Post a Comment