தமிழக வாழ்விட மேம்பாட்டு வாரியம் நடவடிக்கை எடுக்குமா? கண்டு கொண்டு கவனிக்குமா த.வெ.க.அரசு? - tamilkalam

News Update

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Sunday, September 20, 2026

தமிழக வாழ்விட மேம்பாட்டு வாரியம் நடவடிக்கை எடுக்குமா? கண்டு கொண்டு கவனிக்குமா த.வெ.க.அரசு?






திருச்சிராப்பள்ளி மாவட்டம், மண்ணச்சநல்லூர் பஞ்சாயத்துக்கு உட்பட்ட இருங்கலூர் பகுதியில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட வாரியம். தமிழக அரசு இந்த பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு 768 வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டு பயனாளிகள் கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகளாக இங்கு வசிக்கின்றனர். ஆனால் இந்த குடியிருப்பு பகுதியில் மக்கள் வாழ்வதற்கான அடிப்படை கட்டமைப்பு வசதிகளும் இந்த அரசு செய்து கொடுக்கவில்லை குறிப்பாக மனிதன் உயிர் வாழ்வதற்கு அடிப்படைத் தேவை குடிநீர் ஆனால், இந்த அரசு எங்களுக்கு ஏற்பாடு செய்து தரவில்லை. நிலத்தடி நீர் மட்டும் அதாவது உப்பு நீர் மட்டும் எங்களுக்கு ஏற்பாடு செய்திருக்கிறார்கள். அதுவும் எங்களுக்கு போதுமானதாக இல்லை. கோடை காலங்களில் நிலத்தடி நீர் குறைந்து காணப்படுவதால் நாங்கள் குளிப்பதற்கு துவைப்பதற்கும் அத்தியாவசிய தேவைக்கும் பயன்படுத்துவதற்கு போதுமான தண்ணீர் இல்லாததால் நாங்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகி வருகிறோம். குறிப்பாக இந்த ஆண்டு நான்கு மாதங்களாக நாங்கள் மிகவும் கஷ்டப்படுகிறோம் பத்து நாளைக்கு ஒரு நாள் குளிப்பதை அரிதாக இருக்கிறது. எனவே எங்களுக்கு உடனடியாக போர்க்கால அடிப்படையில் நிலத்தடி நீருக்கு உடனடியாக ஏற்பாடு செய்ய அடிப்படையாக குடிநீர் எங்களுக்கு இல்லாமல் சிரமப்படுகிறோம். தமிழக அரசு இந்த இடத்தில் கட்டி கொடுத்த அடுக்குமாடி குடியிருப்பில் மக்கள் வாழ்வதற்கான தகுதி இல்லை என்று தமிழக ஆட்சியாளர் அவர்களும் மாவட்ட நிர்வாகம் இந்த கோரிக்கையை நிறைவேற்றவில்லை.


எனவே எங்கள் கோரிக்கையை உடனடியாக மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் நிறைவேற்ற வேண்டும் என்று மனு கொடுத்து கேட்டுக் கொண்டனர். கண்டு கொண்டு நடவடிக்கை எடுக்குமா? ஆளும் த.வெ.க. அரசு.

தலைமை: வெ.செல்வராஜ். இருங்களூர் நலசங்கம்

தலைவர்: பிரபாகரன், இருங்களூர் நலசங்கம்

துணைத்தலைவர் லோகநாதன். செலயாளர்: மலர்கொடி, இருங்களூர் நலசங்கம் கார்த்திகேயன் பொருளார்: ராஜேஸ்வரி, இருங்களூர் நலசங்கம் ஆகியோர் இணைந்து மனு அளித்தனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages