தமிழக அரசுக் கல்லூரி ஓய்வூதிய நலசங்க பொதுக்குழு கூட்டம் திருச்சியில் நடந்தது..... - tamilkalam

News Update

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Saturday, October 3, 2026

தமிழக அரசுக் கல்லூரி ஓய்வூதிய நலசங்க பொதுக்குழு கூட்டம் திருச்சியில் நடந்தது.....



 

தமிழக அரசுக் கல்லூரி ஓய்வூதியர் நல சங்கத்தின் முதல் மாநில பொதுக்கூட்டம் திருச்சியில் நடந்தது.






நே.ஜோசப் ஜான் தமைமை வகித்தார்

அ.வ.யூனஸ் துணைத்தலைவர்
.பெ.அன்பழகன் இணைச் செயலாளர் 

தி.ந.ரவி செயலாளர்

மு.கோபண்ணசாமி

பொருளாளர்

மா.சுப்புரத்தினம் துணைத்தலைவர் (மகளிர்)
.மு.அருணா

இணைச்செயலாளர் (மகளிர்) ஆகியோர் முன்னிலையில் மாநில பொதுக்கூட்டம் நடந்தது.

“TAPS
 ஓய்வூதியம் வழங்கிட வேண்டுமென அரசிடம்

கோரிக்கை" வைத்தனர்.

தமிழக அரசுக் கல்லூரி பங்களிப்பு திட்ட ஓய்வூதியர் நலச் சங்கத்தின் முதலாவது பொதுக்குழு கூட்டம் திருச்சி, அஜந்தா ஹோட்டலில் 03-10-2026 காலை 11 மணி அளவில் நடைபெற்றது.
. இவ்விழாவிற்கு மாநிலப் பொறுப்பாளர்கள், செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களை சார்ந்த உறுப்பினர்கள் வருகை புரிந்து விழாவைச் சிறப்பித்தனர்.

விழா வரவேற்புரையை மாநிலத் துணைத்தலைவர் முனைவர் யூனஸ் அவர்கள் வரவேற்புரை வழங்கினார். மாநிலத் தலைவர் முனைவர் ஜோசப் ஜான் தலைமையேற்று தலைமை உரையை வழங்கினார் இனி வரும் காலங்களில் சங்கத்தின் செயல்முறைத் திட்டங்களை தொகுத்து வழங்கினார்கள்.

விழாவின் சிறப்பு விருந்தினர்களாக, சி. பி.எஸ்
 ஒழிப்பு இயக்கத்தின் தலைமை மாநில ஒருங்கிணைப்பாளர் திரு. ஜெயராஜராஜேஸ்வரன் மற்றும் மாநில ஒருங்கிணைப்பாளர் திரு. பிரெடெரிக் ஏங்கெல்ஸ் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரை நிகழ்த்தினார்கள். அவர்களது உரையில், தமிழக அரசு தற்போது நடைமுறைப் படுத்தியுள்ள ஓய்வூதியத்திட்ட வழிமுறைகளையும், அதிலுள்ள பிரச்சனைகள், மற்றும் சவால்களையும் எடுத்துக் கூறி போராட்டக் களமே வெற்றிக்கு வழிவகுக்கும் என்பதையும் உறுப்பினர்களுக்குத் தெளிவாக விளக்கமளித்தார்கள். 
பின்பு உறுப்பினர்களுடன் கலந்துரையாடி உறுப்பினர்கள் கேட்கும் வினாக்களுக்குத் தெளிவான விளக்கங்களையும் வழங்கினார்கள். 

விழாவில் மாநிலச் செயலர் முனைவர் தி.ந. இரவி அவர்கள் தமது அறிக்கையில், இது நாள் வரையிலான சங்கத்தின் நடவடிக்கைகள், வளர்ச்சி மற்றும் செயல்பாடுகள் பற்றிய அறிக்கையினைத் தெளிவாக எடுத்துரைத்தார். பின்பு மாநில பொருளாளர் முனைவர் கோபண்ணசாமி மற்றும் பொதுக் குழு உறுப்பினர்களின் முழு ஆதரவுடன் கீழ்க்காணும் முக்கிய தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.

தீர்மானங்கள்

1. தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டம் (TAPS)[அரசாணை (நிலை) எண்.7. நிதி (PGC)த் துறை, நாள்: 09-01-2026) நடைமுறைப்படுத்தப்பட்ட நாள் 01-01-2026 அன்று மற்றும் அதன் பின்னர் என்பதற்குப் பதிலாக, எந்த வித மாத ஓய்வூதிய பலன்களையும் பெறாமல் சி.பி.எஸ் திட்டத்தில் பணி நிறைவு பெற்ற திட்டத்தைத் தெரிவு செய்து கொள்ளலாம் என தமிழக அரசு தகுதியுள்ள அனைவரும் TAPS அரசாணையில் திருத்தம் கொண்டு வரவேண்டும் என்றும், தெரிவு செய்து கொள்ள வாய்ப்பு வழங்கப்படாமல், ஓய்வுக்கால பணப்பலன் வழங்கியவற்றில் அரசின் பங்களிப்பு(வட்டியுடன்) பணத்தினை அரசிற்கு திரும்ப வழங்கிட உள்ள ஊழியர்கள் வசம் மீளப்பெற்று, TAPS திட்டத்தினில் சேர்த்திட, ஊழியர்களின் சலுகை மற்றும் கோரிக்கையினை ஏற்று மனிதம் போற்றி, வழிவகையினை அரசு உடன் ஆவன செய்ய வேண்டுமென இச்சங்கம் வலியுறுத்துகிறது.

2. TAPS-ஐத் தெரிவு செய்யாத மற்றும் குறைவான காலமே பணியாற்றிய ஆசிரியர். அரசு ஊழியர்களுக்கு, அவர்களது வயது முதிர்வைக் கவனத்தில் கொண்டு எதிர்காலத்தின் வாழ்வாதாரத்தை உறுதி அகவிலைப்படியுடன் கூடிய உரிமை ஓய்வூதியத்தை வழங்கிட, தமிழக அரசு செய்யும் வகையில் ஆணையிட வேண்டும் என இச்சங்கம் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.

3. கடந்த 01-04-2003 - க்குப் பிறகு சி.பி.எஸ் திட்டத்தில் பணியில் சேர்ந்து இயற்கை எய்திய அனைத்து ஆசிரியர், அரசு ஊழியர்களுக்கும் அகவிலைப்படியுடன் கூடிய குடும்ப ஓய்வூதியம் வழங்கிடவும் தமிழக அரசு ஆவன செய்ய ஆணையிட வேண்டும் என்றும் இச்சங்கம் அரசை வலியுறுத்துகிறது.

4. எவ்வித மாதாந்திர சம்பள வாழ்வாதாரமுமின்றி தவிக்கும், கடந்த 01-04-2003-க்குப் பிறகு சி.பி.எஸ் திட்டத்தில் பணியில் சேர்ந்து, பணி நிறைவு பெற்ற அனைவருக்கும் முறையான ஓய்வூதிய வழிகாட்டு நெறி முறைகள் வெளியிடும் வரை, காலம் தாழ்த்தாமல் உடனடியாக இடைக்கால ஓய்வூதியம் வழங்கிட வேண்டும் என்றும் இச்சங்கம் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறது.

5. ஓய்வு பெற்ற அனைத்து வகை ஊழியர்களுக்கும், அரசின் மருத்துவ காப்பீடு திட்டத்தின் பலன்கள் வழங்கப்பட வேண்டும்.

இறுதியாக சங்கத்தின் இணைச்செயலாளர் (மகளிர்) முனைவர் அருணா அவர்கள் நன்றியுரை வழங்கினார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages