மார்பக புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் மாரத்தான் ஓட்டம் நடைபெற உள்ளது.. - tamilkalam

News Update

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Wednesday, September 30, 2026

மார்பக புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் மாரத்தான் ஓட்டம் நடைபெற உள்ளது..







 டாக்டர் சாந்தா மார்பகப் புற்றுநோய் அறக்கட்டளையும்

DR.G.விஸ்வநாதன் மருத்துவமனை இணைந்து நடத்தும்,

மேம்மோரன் 2026 திருச்சி மக்களிடையே மார்பக புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் போட்டி நடைபெற உள்ளது.

21 .1KM அரை மாரத்தான் & 5KM விழிப்புணர்வு (போட்டியற்ற ) ஓட்டப்போட்டி 4TH

அக்டோபர் 4, 2026

DR.K.சாந்தா மார்பக புற்றுநோய் அறக்கட்டளையும் (SBCF)- மற்றும் DR.G. .விஸ்வநாதன் மருத்துவமனையும் இணைந்து வருகின்ற அக்டோபர் மாதம் 4ம் தேதி ஞாயிற்று கிழமை, SBCF MAMMORUN - 2026 என்ற நிகழ்வை நடத்தவுள்ளது

SBCF MAMMORUN இந்த போட்டி மூலம் மார்பக புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தவும் மற்றும் ஆரம்பத்திலேயே கண்டறிந்தால் குணப்படுத்தலாம் என்ற விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்த வேண்டும் என்பதனை நினைவில் கொண்டு இந்த நிகழ்ச்சியினை நடத்துகின்றனர்.

21.1KM அரை மாரத்தான் போட்டியானது காலை 5 மணியளவில் DR.G.விஸ்வநாதன் மருத்துவமனை மாம்பழச்சாலையில் இருந்து சீதாராமன் சீரங்கம் ( காவல்துறை துணை ஆணையர், )ஸ்ரீரங்கம் அவர்களால் கொடியசைத்து துவக்கி வைக்க படுகின்றது.

5KM ஓட்ட போட்டியானது காலை 7.00 மணியளவில் தென்னுர் உழவர்சந்தையில் இருந்து திரு.பாலகிருஷ்ணன் IPS காவல் துறை தலைமை காவல் கண்காணிப்பாளர் (மத்திய மண்டலம்) அவர்களால் கொடியசைத்து துவக்கி வைக்க படுகின்றது .இந்த 5KM போட்டியில் கலந்து கொள்ளும் அனைத்து மாணவர்களுக்கும் முன்பதிவு இலவசமாக செய்யப்படுகின்றது.

இந்த போட்டியின் பரிசளிப்பு விழாவானது ஜமால் மொஹமெட் கல்லூரியில் காலை 8..30 மணியளவில் நடக்க உள்ளது இந்த நிகழ்ச்சியில் DR..A.K .காஜா நஷீமுதீன் செயலாளர் மற்றும் திரு.M.J .ஜமால் முகமத் பொருளாளர் மற்றும்

 இந்த நிகழ்ச்சிக்கு நமது திரைப்பட நடிகை ப்ரீத்தா முகுந்த் அவர்களும் கலந்து கொள்கின்றனர்.

இந்த போட்டியின் மொத்த பரிசு தொகை 300,000 லட்சம்.

DR.K.சாந்தா மார்பக புற்றுநோய் அறக்கட்டளை (SBCF)- அறக்கட்டளை

திருச்சி,தமிழ்நாடு,இந்தியா 2005 இல் "ராமன் மேகசேசே பத்மபூஷன் விருது பெற்ற DR.V.சாந்தா அடையார், சென்னை அவர்களால் DR.K .சாந்தா அவர்களின் நினைவாகவும்,

1995இல் துவக்கிவைக்கப்பட்டது இந்த அறக்கட்டளை இருபது வருடங்களுக்கு மேலாக மக்களிடையே மார்பக புற்றுநோயை பற்றிய விழிப்புணர்வை நிறைய முகாம்கள் மூலமாக மக்களுக்கு ஏற்படுத்தி வருகின்றனர்.

முழுமருத்துவ வசதி கொண்ட மேம்மோ பஸ். ரோட்டரிசங்கம் மற்றும் ரோட்டரி டிஸ்ட்ரிக்ட் 3000 & 7620,மற்றும ரோட்டரி கிளப் ஆப் சீரங்கம் ரோட்டரி கிளப் ஆப் ராக்வில்லே USA மூலம் 2012 ல் மேற்கண்டஅறக்கட்டளைக்கு வழங்கப்பட்டது என்றும்,,

இந்த மேம்மோபஸ் திருச்சியை மையமாக கொண்டு அதை சுற்றியுள்ள கிராமம் மற்றும் நகரங்களுக்கு பயணித்து 440ற்கு மேற்பட்ட முகாம்கள் மூலம் 4,15,000 திற்கும் மேற்பட்ட பெண்களுக்கு மார்பக புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வும் .41,325 பரிசோதனையும் செய்துள்ளதாகவும்,இதில் 31பெண்களுக்கு மார்பக புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும்,

அக்டோபர் மாதமானது உலகம் முழுவதும் பிங்க் அக்டோபர் என புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்திவருகின்றது. எங்களது அறக்கட்டளை சார்பாக மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பைக் ரைடு,, முடி தானம்,பட்டிமன்றம், மற்றும் மாணவர்களுக்கான விழிப்புணர்வு போட்டி, மார்பக புற்றுநோயில் இருந்து வென்றவர்களுக்கான ஆலோசனை கூட்டமும் நடத்தி வருவதாகவும்,கொரோன நோய் தொற்று காலங்களில் VIRTUAL MARATHAON போட்டி நடத்தியதாகவும் கூறினர்.

பொது மக்களின் பங்கேற்பு ஒரு பொதுவான காரணத்திற்காக இருந்தால் மட்டுமே நாம் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த முடியும் என்பதை கருத்தில் கொண்டு மக்களிடையே மார்கப் புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக மாரத்தான் ஓட்ட போட்டியை திருச்சி மாவட்ட தடகள சங்கம் மற்றும் தமிழ்நாடு விளையாட்டு வளர்ச்சி சங்கம் இவர்களுடன் இணைந்து 21.1km அரை மாரத்தான் ஓட்டப்போட்டியை கடந்த 2013 இல் இருந்து நடத்தி வருவதாவும், இந்த ஓட்ட போட்டியில் 5000 மேற்பட்டவர்கள் பங்கேற்று இந்த போட்டியை சிறப்பித்துள்ளதாக கூறினர்..மார்பக புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டறிந்தால் குணப்படுத்தலாம் DR .K .சாந்தாகூறினார்

மேற்கண்ட இந்த அறக்கட்டளையில் மருத்துவ கல்வியை மேம்படுத்துவதற்காக அறுவைசிகிச்சை மற்றும் மார்பக அறுவைசிகிச்சை பட்டப்படிப்பு படிக்கும் மாணவர்களுக்கும் கல்வி சம்பந்த பட்ட போட்டி நடத்தி வெற்றி பெற்றவர்களுக்கு வருகின்ற அக்டோபர் மாதம் 4 ம் தேதி காலை பரிசளிக்க படவுள்ளார்கள் எனவும் தெரிவித்தனர். மொத்த பரிசுத்தொகை ஒரு லட்சம் என தெரிவித்தார்.

இந்த விழிப்புணர்வு ஓட்ட போட்டியை மக்களிடையே கொண்டு சென்று மார்பக புற்று நோயினை ஒழிக்க மக்கள் அனைவரும் இதில் பங்கு பெற வேண்டும் என கேட்டுக்கொண்டனர். 

|

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages