தமிழக அரசுக்கு செவிலியர் சங்கம் வலியுறுத்தல். நிறைவேற்றுமா? தமிழக அரசு|? - tamilkalam

News Update

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Thursday, September 24, 2026

தமிழக அரசுக்கு செவிலியர் சங்கம் வலியுறுத்தல். நிறைவேற்றுமா? தமிழக அரசு|?


 ​4,724 செவிலியர் காலிப்பணியிடங்களை நிரந்தரமாக நிரப்ப வேண்டும்: தமிழக அரசுக்கு செவிலியர் மேம்பாட்டு சங்கம் வலியுறுத்தல்

​தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள 4,724 செவிலியர் காலிப்பணியிடங்களை 11 மாத தற்காலிக அடிப்படையில் நிரப்பும் அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என தமிழ்நாடு செவிலியர் மேம்பாட்டு சங்கம் வலியுறுத்தியுள்ளது.

​இதுகுறித்து அச்சங்கத்தின் மாநில இணைச் செயலாளர் கலையரசி செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:

​தமிழ்நாடு செவிலியர் மேம்பாட்டு சங்கத்தின் மாநில செயற்குழு முடிவின்படி, தற்காலிக செவிலியர் பணி நியமன அறிவிப்பை ரத்து செய்யக்கோரி மாநிலம் முழுவதும் பிரச்சார இயக்கம் மேற்கொண்டு வருகிறோம்.

​கடந்த 2015-ம் ஆண்டு முதல் மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் (MRB) மூலமாகவே செவிலியர்கள் பணி நியமனம் செய்யப்பட்டு வந்தனர். அவ்வாறு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு 2 ஆண்டுகளில் பணி நிரந்தரம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால், 10 ஆண்டுகள் கழித்தும் அவர்கள் படிப்படியாகவே பணி நிரந்தரம் செய்யப்பட்டு வருகின்றனர். அவர்களின் பணிப் பாதுகாப்பே கேள்விக்குறியாக உள்ள நிலையில், தற்போது காலியாக உள்ள 4,724 செவிலியர் பணியிடங்களை 

மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம்

 மூலம் நிரப்பாமல், மாவட்ட நல்வாழ்வு சங்கம் (District Health Society) மூலம் 11 மாத தற்காலிகப் பணியாக நிரப்ப அரசு முயல்வது வேதனையளிக்கிறது.

​இத்தகைய ஒப்பந்த நடைமுறையால் செவிலியர்களின் பணி நிரந்தரம் கேள்விக்குறியாவதோடு, படித்த இளைஞர்களின் வேலைவாய்ப்பும், பொதுமக்களுக்கான மருத்துவச் சேவையும் பெரிதும் பாதிக்கப்படும். 

​செவிலியர் படிப்பை முடித்துவிட்டு அரசுப் பணி நிரந்தரம் செய்யப்படும் என்ற கனவோடு இருக்கும் இளைஞர்களுக்கு, இந்தத் தற்காலிக பணி நியமன அறிவிப்பு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. 11 மாத தற்காலிக பணிக்குப் பிறகு செவிலியர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகும் சூழல் உருவாகியுள்ளது.  

​சம வேலைக்கு சம ஊதியம் வழங்கக் கோரிய வழக்குகளைத் தவிர்ப்பதற்காக தமிழக அரசு இதுபோன்ற தற்காலிக முறையைக் கையாள்கிறதா என்ற சந்தேகம் எழுகிறது. 

மேலும், புதிதாகத் தொடங்கப்பட உள்ள 6 அரசு செவிலியர் கல்லூரிகளிலும் போதகர்களை ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கும் முடிவையும் கைவிட வேண்டும்.

மருத்துவத்துறையில் தற்காலிகப் பணி நியமன முறையை முற்றிலும் கைவிட்டு, 

மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம்  மூலம் செவிலியர்களை நிரந்தரப் பணியாளர்களாக நியமிக்க வேண்டும் என்ற

​எங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி, வரும் 28, 29 ஆகிய தேதிகளில் மாணவ சந்திப்பு இயக்கமும், கருப்பு பேட்ஜ் அணிந்து போராட்டமும் நடைபெறவுள்ளது. தொடர்ந்து 30-ம் தேதி சென்னையில் மாபெரும் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும். 

தமிழக அரசு எங்களது நியாயமான கோரிக்கைகளுக்குச் செவிசாய்க்காவிட்டால், போராட்ட தீவிரமடையும்."

​இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages