இந்துக்களின் வழிபாட்டு உரிமையை தமிழக த.வெ.க அரசு பாதுகாக்க வேண்டும் என கோரிக்கை.
இந்து எழுச்சி பேரவையின் தலைவர் பழ.சந்தோஷ் குமார் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு திருச்சியில் நடந்தது.
இந்து எழுச்சிப் பேரவை மாநில நிர்வாகிகள் கூட்டம் இன்று திருச்சியில் நடந்தது மாநில தலைவர் பழ. சந்தோஷ் குமார் தலைமை தாங்கினார் பொதுச் செயலாளர் ஜி பி சதீஷ் கண்ணா, மாநில அமைப்பு தலைவர் பாரதிமோகன், திருச்சி மாவட்ட தலைவர் நிதீஷ் குமார், சோழமண்டல நிர்வாகி ஆர் செந்தில்குமார், இளைஞரணி விக்னேஸ்வரன், தொழிற்சங்க மாதுளை பொதுச் செயலாளர் பி சி ஆனந்தன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். ஆடி மாத வழிபாடாக
பால்குடம் ஊர்வலம் சென்ற மக்கள் மீது நெருப்பு வீசப்பட்டது தொடர்பாக ஒருவர் மீது பி.சி.ஐ.ஆர் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதேபோன்று அங்குள்ள சந்தைப்பேட்டை பகுதியில் உள்ள காளியம்மன் கோவில் முன்பு பிரதிஷ்டை செய்யப்பட்ட சூலாயுதத்தை ஒரு தரப்பினர் கொடுத்த அழுத்தத்தினால் காவல்துறையினர் மற்றும் வருவாய்த்துறையினர் தன்னிச்சையாக தடுத்துள்ளனர்.
. இது இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான இடமாகும். மேற்கண்ட ஒரு பிரிவினரின் தவறான செயலையும்,சம்பவத்தையும், கண்டித்து நாளை மறுநாள் இந்து எழுச்சி பேரவை சார்பாக சூலாயுத வழிபாடு யாத்திரை போராட்டத்தை நடத்துகிறோம் என்றும்,
.இந்த யாத்திரையானது திருச்சி உறையூர் ,சமயபுரம் உள்ளிட்ட 27 இடங்களில் சூலாயுதத்துடன் புறப்பட்டு சென்று இனாம் காளியம்மன் கோவிலில் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில் ,
தஞ்சாவூர் புதுப்பட்டினம் பகுதியில் திருமலை எத்திராம்ஜி மடத்துக்கு சொந்தமான ரூ.160 கோடி மதிப்பிலான நிலத்தை தனி நபர்கள் ஆக்கிரமித்துள்ளனர்.
. இது தொடர்பாக எங்கள் அமைப்பினர் கலெக்டரிடம் புகார் அளித்து தற்போது ஆர்டிஓ விசாரணை நடந்து வருகிறது இந்துக்களின் வழிபாட்டு உரிமையை தமிழக அரசு பாதுகாக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.


No comments:
Post a Comment