செவித்திறன் குறைபாடு உடையவர்களுக்கு திருச்சியில் ஒர் மிகச்சிறந்த நேரடி சேவை... - tamilkalam

News Update

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Friday, September 25, 2026

செவித்திறன் குறைபாடு உடையவர்களுக்கு திருச்சியில் ஒர் மிகச்சிறந்த நேரடி சேவை...



 *செவித்திறன் குறைபாடுடையவர்களுக்கு வரப்பிரசாதம்... திருச்சியில் முதல் லைவ் எக்ஸ்பீரியன்ஸ் சென்டர் ஆரம்பம்*

* டபுள்யூ.எஸ். ஆடியாலஜி - 

அருண் ஹியரிங் எய்ட் நிறுவனத்துடன் இணைந்து தொடங்கியது 


செவித்திறன் குறைபாடுடையவர்களுக்கான பல்வேறு நவீன காதுகேட்கும் கருவிகளை தயாரிக்கும் உலகின் முன்னனி நிறுவனங்களுள் ஒன்றான டபுள்யூ.எஸ்.ஆடியாலஜி மற்றும் "அருண் ஹியரிங் எய்ட்" ஆகியவை இணைந்து திருச்சி, கன்டோன்மெண்ட், ஜென்னி பிளாசாவில் "ப்ரில்லியண்ட் சௌண்ட் கேலக்ஸி" என்கிற புதிய மையத்தை திறந்துள்ளது.

விழாவிற்கு வந்திருந்தவர்களை அருண் ஹியரிங் எய்ட் நிறுவனர் அருண்குமார் வரவேற்றார்

டபுள்யூ.எஸ்.ஆடியாலஜி நிறுவனரும் முதன்மை செயல் அதிகாரியுமான அவினேஷ் பவார் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு புதிய மையத்தை ரிப்பன் வெட்டி திறந்துவைத்தார்

.இதன் துவக்க விழா நிகழ்ச்சியில் செவித்திறன் குறைபாடுடைய சுமார் 100 பேருக்கு இலவசமாக காதுகேட்பு கருவி வழங்கப்பட்டன.இதுகுறித்து டபுள்யூ.எஸ்.ஏ நிறுவனர் அவினேஷ் பவார் கூறுகையில்.,

உலக அளவில் முன்னணி காதுகேட்பு கருவிகள் தயாரிக்கும்  நிறுவனமான எங்கள்   நிறுவனத்தின் மூலம், வைட்எக்ஸ் மற்றும் சிக்னியா ஆகிய பிராண்டுகள் மூலம் காது கேட்பு கருவிகள் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இதன் மூலம் நவீன டெக்னாலஜி மற்றும் பல்வேறு வசதிகளுடன் கூடிய காது கேட்பு கருவிகளை செவித்திறன் குறைபாடு உடையவர்கள் குறைந்த விலையில் வாங்கி பயனடைய முடியும். அந்த வகையில், திருச்சி ஜென்னி பிளாசாவில் இன்று துவங்கப்பட்டுள்ள எங்களது பிரில்லியன்ட் சவுண்ட் கேலக்ஸி மையம் ஒரு லைவ் எக்ஸ்பீரியன்ஸ் சென்டர் ஆகும். வழக்கமாக காதுகேட்பு கருவிகளை வாங்கிச் செல்லும் விற்பனை நிலையமாக இல்லாமல், இது செவித்திறன் குறைபாடு உடையவர்கள் அவர்களுக்கான குறைகளை நிவர்த்திசெய்யும்  வகையில் உள்ள தற்போதைய நவீன தொழில்நுட்பகரணங்களை பார்த்து லைவ் எக்ஸ்பீரியன்ஸ் செய்து வாங்க முடியும். மேலும் இங்குள்ள நிபுணர்கள் அவர்களின் தேவைக்கு ஏற்ப தகுந்த கருவிகளை பரிந்துரைப்பார்கள். மருத்துவர்களின் ஆலோசனைக்கு பிறகு வாடிக்கையாளர்கள் தங்களுக்கு தேவையானவற்றை வாங்கி பயனடைய முடியும்.இந்தியாவில் சுமார் 11 இடங்களில் இது போன்ற லைவ் எக்ஸ்பீரியன்ஸ் சென்டர்கள் இருந்தாலும், மத்திய தமிழகத்தில் திருச்சியிலேயே முதன் முதலாக அருண் ஹியரிங் எய்ட் நிறுவனத்தோடு இணைந்து எங்களது பிரில்லியன்ட் சவுண்ட் கேலக்ஸி மையத்தை துவங்கியுள்ளோம்.

இதன்மூலம் திருச்சி மற்றும் சுற்றுவட்டாரத்தில் உள்ள செவித்திறன் குறைபாடு உடையவர்கள் பயனடைய முடியும் என தெரிவித்தார் . 

தஞ்சாவூரை தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் அருண் ஹேரிங் எய்ட்சென்டருக்கு ஏற்கனவே தமிழகத்தின் முழுவதும் சுமார் 16-க்கும் மேற்பட்ட இடங்களில் காதுகேட்ப கருவி விற்பனை மையங்கள் இயங்கி வருகிறது.அந்த வகையில் தற்போது டபிள்யூ.எஸ் ஆடியாலஜி நிறுவனத்துடன் இணைந்து பிரில்லியன்ட் சவுண்ட் கேலக்ஸி என்ற மையத்தை திருச்சியில் துவக்கியுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை அருண் ஹியரிங் எய்ட் மற்றும் டபுள்யூ.எஸ். ஆடியாலஜி நிறுவனத்தின் நிர்வாகிகள் மற்றும் ஊழியர்கள் சிறப்பாக செய்திருந்தனர்

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages