அனைத்து ஆசிரியர் கூட்டமைப்பு மாநில மையம் சார்பில் முப்பெரும் விழா திருச்சியில்நடைபெற்றது..... - tamilkalam

News Update

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Wednesday, September 30, 2026

அனைத்து ஆசிரியர் கூட்டமைப்பு மாநில மையம் சார்பில் முப்பெரும் விழா திருச்சியில்நடைபெற்றது.....



 இக்கூட்டத்தில்

 முனைவர்.சி.மனோகரன் அவர்கள், மாநிலத் தலைவர்-ATF தலைவகித்தார்.

வி.சி.க வின் முக்கிய 'தலைவர்களில் ஒருவரான தமிழாதன் பங்கேற்றார்.

: திரு.ப. பெருஞ்சித்திரன் அவர்கள், மாநில செயல்தலைவர்-ATF த. சுப்ரமணி அவர்கள், மாநில அமைப்புச்செயலாளர்-ATF  சி.அன்பழகன்அவர்கள் மாநில அமைப்புச்செயலாளர்-ATF .செல்லதுரை அவர்கள், மாநிலத் துணைத்தலைவர்--ATF ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

:.பெ.தமிழ்முதல்வன்(எ) முனுசாமி அவர்கள், மாநில துணை பொதுச் செயலாளர் வரவேற்புரையாற்றினார்.

முனைவர்.சி.மனோகரன் அவர்கள், மாநிலத்தலைவர் தலைமை உரையாற்றினார்.

பணிநிறைவுப் பாராட்டு விழா மற்றும் நல்லாசிரியர் விருது பெற்றோருக்கு பொன்னாடை அணிவித்து நினைவுப்பரிசு வழங்கப்பட்டது.

ப.பெருஞ்சித்திரன் அவர்கள் (பணிநிறைவு பெறுபவர்) த.சுப்பிரமணி அவர்கள் (பணிநிறைவு பெறுபவர்) .சிஅன்பழகன் ஆகியோர்(பணிநிறைவு பெறுபவர்களாக பங்கேற்றனர்.)


திரு.பஜெயராம் அவர்கள் (நல்லாசிரியர் விருதுபெற்றுக் கொண்டார்.

முனைவர்.சி.மனோகரன் அவர்கள், மாநிலத் தலைவர் தொடுப்புரையாற்றினார்.

குப்புசாமி அவர்கள், மாநில துணைப் பொதுச்செயலாளர் நன்றியுரையாற்றினார்.


அனைத்து ஆசிரியர் கூட்டமைப்பு மாநில மையம் சார்பில் முப்பெரும் விழா நிகழ்வு மாநிலத் தலைவர் முனைவர் சி.மனோகரன் அவர்கள் தலைமையில் 30.9.2026, புதன்கிழமை காலை 10 மணி அளவில் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள அருண் ஹோட்டலில் நடைபெற்றது.


இக்கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் ஒருவனாக நிறைவேற்றப்பட்டன.  

​கடந்த மே-2026 ல் நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் வரலாற்று சாதனை படைத்து வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ள தமிழக வெற்றிக் கழக கட்சித் தலைவர் மற்றும் தமிழக முதலமைச்சர் .ச.ஜோசப் விஜய் அவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறது.  

​பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள  ப.ராஜ்மோகன் அவர்களுக்கும், சமூக நீதித்துறை அமைச்சர்  வன்னியரசு அவர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறது.  

​நடந்து முடிந்த ஆசிரியர்கள் சிறப்பு தகுதித் தேர்வு முடிவுகள் விரைவில் வெளியிடப்பட்டு பதவி உயர்வு மற்றும் மாறுதல் கலந்தாய்வு நடத்தப்பட்டு காலி பணியிடங்கள் உடனடியாக நிரப்பப்பட வேண்டும்.  

​மத்திய அரசுத் துறைகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு உள்ளது போல் தமிழ்நாடு அரசு துறைகளில் பணியாற்றும் பட்டியல்/பழங்குடியினர் இன ஊழியர்களுக்கு 16/4 A விதிமுறைகள் மூலம் பதவி உயர்வில் முன்னுரிமை வழங்கப்பட வேண்டும்.  படத்திலுள்ள உரை (Text) கீழே கொடுக்கப்பட்டுள்ளது:  

​5) பள்ளி ஆசிரியர்கள் கற்பித்தல் பணிதவிர பிற பணிகள் வழங்குவதை முற்றாக கைவிடவேண்டும்.

(EMIS Online work, சென்சஸ் பணி, காலை உணவு மேற்பார்வை பணி முதலிய பணிகளில் ஆசிரியர்களை ஈடுபடுத்தக் கூடாது)  

​6) அரசு பணிகளில் காலியாக உள்ள அனைத்து காலிப் பணியிடங்களையும் உடனடியாக நிரப்ப வேண்டும். SC/ST பிரிவில் காலியாக உள்ள பின்னடைவு பணியிடங்களையும் (Backlog Vacancy) உடனடியாக நிரப்பப்பட வேண்டும்.  

​7) தி.மு.க அரசு தனது தேர்தல் அறிக்கையில் அளித்துள்ள வாக்குறுதிப்படி பழைய ஓய்வூதியத் திட்டத்தை அனைத்து அரசு ஊழியர்களுக்கு உடனடியாக அமல்படுத்திட வேண்டும்.  

​8) அனைத்து ஆசிரியர் கூட்டமைப்பு காப்பாளர் தொல். திருமாவளவன், நிறுவனர் தலைவர் விடுதலை சிறுத்தைகள் கட்சி அவர்களின் தலைமையில் சென்னையில் "ஆசிரியர்கள் கோரிக்கை -மாநில மாநாடு" ஒன்றை விரைவில் நடத்துவதாக தீர்மானிக்கப்படுகிறது.  

​9) மருத்துவர்களுக்கு உள்ளது போல் ஆசிரியர்களுக்கும் பணி பாதுகாப்பு சட்டத்தை விரைவில் இயற்றிட வேண்டும்.  

​10) இடைநிலை ஆசிரியர்கள், உயர்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்கள், முதுகலை ஆசிரியர்கள் ஆகியோருக்கு இழைக்கப்பட்டுள்ள அநீதியான ஊதிய இழப்பை களைந்திட வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது .




No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages