தமிழக எதிர் கட்சித் தலைவர் உதயநிதியை கைது செய்ததைகண்டித்து திருச்சியில் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மறியல் போராட்டம் ஃ - tamilkalam

News Update

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Tuesday, August 4, 2026

தமிழக எதிர் கட்சித் தலைவர் உதயநிதியை கைது செய்ததைகண்டித்து திருச்சியில் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மறியல் போராட்டம் ஃ




 திமுக இளைஞரணி செயலாளரும், தமிழக  எதிர்கட்சித் தலைவருமான உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திருச்சி சிந்தாமணி அண்ணா சிலை அருகில்  முன்னாள் அமைச்சர் தெற்கு மாவட்ட செயலாளர்  அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டதில் கலந்து கொண்டு காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு திருச்சி சிதம்பரம் மஹால் திருமண மண்டபத்தில் அடைக்கப்பட்டனர் . 

இந்த நிகழ்வில் மாநகர செயலாளர் மதிவாணன், பகுதி செயலாளர்கள் மோகன், ராஜ் முகமது, நீலமேகம், மணிவேல், பாபு, மாவட்ட துணை செயலாளர்கள் லீலா வேலு, செங்குட்டுவன், மாநகர துணை செயலாளர்கள்  நூர்கான், பொன் செல்லையா, துணை மேயர் திவ்யா, பொது குழு உறுப்பினர் மணிமேகலை, ராஜேஸ்வரன்  மற்றும் திமுக நிர்வாகிகளும் தொண்டர்களும் திரளாக இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர் .

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages