இந்திய ஆசிரியர் கூட்டமைப்பின் மாநிலக் குழு கூட்டம் திருச்சியில் நடந்தது. - tamilkalam

News Update

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Saturday, August 1, 2026

இந்திய ஆசிரியர் கூட்டமைப்பின் மாநிலக் குழு கூட்டம் திருச்சியில் நடந்தது.





இந்தியப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு


தமிழ்நாடு மாநிலக்குழு கூட்டம் திருச்சியில்

 02.08.2026 இன்று நடந்தது. இக்கூட்டத்தில்

பாராளுமன்றம், சட்டமன்றங்களில் 33% இட ஒதுக்கீடு..பற்றி விவாதிக்கப்பட்டது. மேலும்

நீட், டெட் தேர்வுகள் ஒழிப்பு... தேசிய கல்விக்கொள்கை ரத்து... பழைய ஓய்வூதியத் திட்டம் நடைமுறைப்படுத்துதல் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி STFI சார்பில் திருச்சியில் நடைபெற்ற கருத்தரங்கில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


இந்தியப்பள்ளி மாநில ஆசிரியர் கூட்டமைப்பு (STFI) தமிழ்நாடுக்குழு சார்பில் திருச்சியில் மாநில அளவிலான கருத்தரங்கம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு STFI அகில இந்திய துணைத்தலைவரும், தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் பொதுச் செயலாளருமான ச.மயில், 

STFI அகில இந்தியச் செயலாளரும், தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் நிறுவனத்தலைவருமான அ.மாயவன், முன்னாள் எம்.எல்.சி., தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் பொதுச் செயலாளர் பொ.அன்பழகன் ஆகியோர் கூட்டுத்தலைமை வகித்தனர். தமிழ்நாடு மாநில தமிழ்நாடு பதவி உயர்வு பெற்ற பட்டதாரி மற்றும் தமிழாசிரியர் கழகத்தின் தலைவர் த.உதயசூரியன், தமிழ்நாடு அரசு உதவிபெறும் தனியார் பள்ளி ஆசிரியர் அலுவலர் கூட்டமைப்பின் துணை பொதுச் செயலாளர் சிவ.ஸ்ரீ .ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் அ. சங்கர் வரவேற்புரை ஆற்றினார். கருத்தரங்கை தொடங்கி வைத்து STFI அகில இந்திய செயற்குழு உறுப்பினர் மூ.மணிமேகலை உரையாற்றினார்.

கருத்தரங்கின் முதல் அமர்வில் பாராளுமன்றம் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு 33 சதவீதம் இட ஒதுக்கீடு காலத்தின் கட்டாயம்" என்ற தலைப்பில் எல்.ஐ.சி மகளிர் துணைக் குழு தென் மண்டல அமைப்பாளர் ஆர்.எஸ்.செண்பகம் கருத்துரை வழங்கினார். மேடையின்

பொதுச்செயலாளரும், கல்வியாளருமான பு.பா. பிரின்ஸ் கஜேந்திரபாபு கருத்துரை வழங்கினார். தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநிலச்செயலாளர் ஜ.ஜெயராஜ் நன்றி கூறினார். கூட்டத்தில் மாநிலம் முழுவதும் STFI இணைப்புச் சங்கங்களின் நிர்வாகிகள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.


கருத்தரங்கில் பாராளுமன்றத்தின் நடப்பு மழைக்கால கூட்டத் தொடரில் பாராளுமன்றம் மற்றும் சட்டமன்றத்திற்கு 33% இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை ஒன்றிய அரசு நிறைவேற்ற வேண்டும் என்றும், மாணவர்களை பாதிக்கும் NEET தேர்வு, ஆசிரியர்களை பாதிக்கும் TET தேர்வு ஆகியவற்றை ரத்து செய்திட ஒன்றிய மகளிர் அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்தியாவின் பொதுக் கல்வியில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் தேசிய கல்விக் கொள்கை 2020 ஐ ஒன்றிய அரசு உடனடியாகக் கைவிட வேண்டும் எனவும், தமிழ்நாடு அரசு தனது ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages