தோட்டக்கலைத்துறை அலுவர்கள் சங்கத்தின் கவன ஈர்ப்பு ஆர்பாட்டம் திருச்சியில் நடந்தது.. - tamilkalam

News Update

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Friday, July 17, 2026

தோட்டக்கலைத்துறை அலுவர்கள் சங்கத்தின் கவன ஈர்ப்பு ஆர்பாட்டம் திருச்சியில் நடந்தது..



 தமிழ்நாடு தோட்டக்கலைத்துறை அலுவலர்கள் சங்கத்தின் கூட்டமைப்பின் சார்பாக கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் திருச்சியில் நடந்தது.


சிவகுமார்,  மாநில ஒருங் கிணைப்பாளராக அங்கம் வகித்தார்.

தமிழ்நாடு உதவி தோட்டக்கலை அலுவலர்கள் சஙகம்.இச்சங்கத்தின்.ஆர்பாட்டம். 17.6.2026 இன்று நடந்தது.

ஆர்பாட்டத்தின்  கோரிக்கைகள்  வருமாறு....  விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் உழவர் அலுவலர் தொடர்பு  திட்டம் (UATT-2.0) தொடர்பான அனைத்து அரசாணைகளையும் இரத்து செய்திட வேண்டி அரசின் கவனத்தை ஈர்க்கும் விதமாக ஆர்பாட்டம் நடந்தது.,

தோட்டக்கலைத்துறை அலுவலர்கள் சங்க கூட்டமைப்பின் தொடர் கோரிக்கையான. உழவர் அலுவலர் தொடர்புத்  திட்டம் (UATT-2.0) இத்திட்டத்தினை விவசாயிகளின் நலன் கருதியும், களப்பணியார்களின் பணிச் சமநிலையற்ற தன்மையையும் அரசு கருத்தில் கொண்டும்,முழுமையாக இரத்து செய்திட வேண்டி அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் திருச்சியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில்நடந்தது.

இக்கவனஈர்ப்பு. ஆர்ப்பாட்டமானது மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் தலைமையில் நடைபெற்றது.

இதில் அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் மற்றும் நிர்வாகிகள் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள்.

கலந்து கொண்டவர்கள்:

1. தலைமை ஒருங்கிணைப்பாளர்கள் - R.மருது முத்து .

 M.தயாநிதி

சிறப்பு வாழ்த்துரை:

1- மாவட்ட தலைவர், பால்பாண்டிTNGEA.

மாவட்ட செயலாளர் S. நவநீதன்,TNGEA.

வாழ்த்துரை வழங்கியவர்கள்:

3. பி.ராஜேந்திரன் N.செந்தில்ராணி

நன்றியுரை S. பாக்கிய ராஜ் கூறினார்.

நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

வேளாண்மைத்துறையால் கடந்த ஆண்டு இறுதியியல் உழவர் அல்லாத தொடர்புத் திட்டம் (UATT-2.0) என்ற திட்டமானது அவசரகதியில் (எந்த வித கள ஆய்வும் மேற்கொள்ளாமல், வேண வல்லுநர்கள் குழுவின் ஆலோசனைகளை பெறாமல்) கொண்டுவரப்பட்டுள்ளது என்றும்,

இத்திட்டத்தின் நோக்கம்

வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, மற்றும் வேளாண் வணிகம் (மற்றும்) விற்பனைத்துறை ஆகிய மூன்றுத் துறை களப்பணியாளர்களை ஒன்றிணைத்து மேற்படி 3 துறையுடன் வேளாண் பொறியியல் துறையின் திட்டங்களையும் சேர்த்து நான்கு துறை பணிகளை ஒரு களப்பணியாளர் மேற்கொள்ள வேண்டும் இதுவே இத்திட்டத்தின் நோக்கமாகும். இத்திட்டத்தில் பணிபுரிபவர்கள்

வெவ்வேறு கல்வித் தகுதியையும் மற்றும் தொழில்நுட்பங்களையும் உடையதாகும் ஆகவே இவையாவும்கலப்பதினால் விவசாயிகளின் நலன் கடுமையாக பாதிக்கும்... என்றும் ஃ.

அடிப்படையில் இருதுறையிலும் (வேளாண்மைத்துறை மற்றும் தோட்டக்கலைத்துறை) உள்ள அலுவலர்கள் வெவ்வேறு கல்வித் தகுதியையும் வெவ்வேறு பயின்றவர்கள்.தோட்டக்கலைப் பயிர் பற்றி படித்துள்ள களப்பணியாளர்களுக்கு வேளாண் பயிர்களாகிய தொழில்நுட்பங்களையும் நெல்,கரும்பு,பயறு வகைகள் போன்ற வேளாண் பயிர் பற்றிய பயிற்சியும், கல்வி அறிவும்,கள அனுபவமும் கிடையாது.  

அதே போன்று வேளாண் பயிர் பற்றி படித்துள்ள களப்பணியாளர்களுக்கு தோட்டக்கலை பயிர்களான வாழை,காய்கறி, பழங்கள் மற்றும் மலர்பயிர்கள் போன்ற பயிர்களுக்கு தொழில்நுட்பமோ, கல்வி அறிவோ,கள அறிவோ தெரியாத காரணத்தினால் விவசாயிகளுக்கு தாங்கள் பயிரிட்டுள்ள வேளாண் அல்லது தோட்டக்கலைப் பயிர்களுக்கு தேவையான சரியான தொழில்நுட்பமோ, உரப்பரிந்துரையோ வழங்க இயலாத சூழல் ஏற்பட்டுள்ளது. இச்சூழல் விவசாயிகளுக்கு பயிரிழப்பும் பொருளாதார இழப்பும் ஏற்படுத்த கூடும்.

பணியில்சமநிலையற்ற தன்மையாக 

கிராமங்கள் ஒருவருக்கு அதிகமாகவும்,ஒருவருக்கு குறைவாகவும் பிரித்தளிக்கப்பட்டுள்ளது.

அரசாணை(நிலை) எண்

: 252-ல் 

3 முதல் 4 கிராமங்களுக்கு ஒரு களப்பணியாளர்கள் என அரசாணையில் குறிப்பிட்டுள்ளது. 

ஆனால் நடைமுறையில் 20% களப்பணியாளர்களுக்கு மட்டுமே 3 முதல் 4 கிராமங்களும் ஒதுக்கப்பட்டுள்ளது.

 மீதமுள்ள 80% களப்பணியாளர்களுக்கு 8 முதல் 22 கிராமங்கள் வரை ஒதுக்கீடு செய்துள்ளார்கள். 

மேலும் 1183 எக்டர் பரப்பளவிற்கு ஒரு களப்பணியாளர் என பணி ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும்.ஆனால் 45% களப்பணியாளர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.மீதமுள்ள 55% களப்பணியாளர்களுக்கு 1300 முதல் 4000 எக்டர் வரை பரப்பு ஒதுக்கீடு மட்டுமே 1183 எக்டர் பரப்பளவு செய்து அதிக, கடுமையான பணிச் சுமை கொடுக்கப்பட்டுள்ளது.

எனவே

, விவசாயிகள் மற்றும் களப்பணியாளர்கள் ஆகிய இருவரையும் பாதிக்கும் இந்த திட்டத்தினை (UATT 2.0) முற்றிலும் இரத்து செய்யக் கோரி அரசின் கவனத்தை க்,கும் பொருட்டு, இன்று ( வெள்ளிக்கிழமை ,17.07.2026. அன்று அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன்பாக 'கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டமும்" அதனை தொடர்ந்து 21.07.2026 செவ்வாய்கிழமை முதல் தலைநகரம் சென்னையில் இத்திட்டம் தொடர்பான அனைத்து அரசாணைகளையும் இரத்து செய்யும் வரை 'தொடர் போராட்டமும்' நடத்தப் போவதாக தமிழ்நாடு தோட்டக்கலை  கூட்டமைப்பு திர்மானித்துள்ளதாக ஆர்பாட்டத்தில் தெரிவிக்கப்பட்டது..






No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages