இக்கூட்டத்தில்
அனைத்து மாவட்ட எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.
நலிந்து வரும் எர்த் மூவர்ஸ் தொழிலை மீட்டு இத்தொழிலை நம்பி உள்ள லட்சக்கணக்கானவரின் வாழ்வாதாரத்தை காத்து வாடகை உயர்வு செய்திட மாநில அளவிலான ஒருங்கிணைந்த எர்த் மூவர்ஸ் உரிமையாளர்களின்
நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தின் தீர்மானங்கள்."
1. புதிய வாகனங்களின் கடுமையான விலையேற்றம், உதிரி பாகங்கள், இன்சூரன்ஸ் மற்றும் வரிஏற்றத்தை அரசு கட்டுப்படுத்த வேண்டும் என்றும்
2 Life Tax என்ற நடைமுறையை ரத்து செய்து பழைய முறையே பின்பற்ற வேண்டும். ஒரு ஆண்டிற்கு ரூபாய் 15,000 செலுத்தி வந்த நிலையில் Life Tax என்ற பெயரில் 15 வருடத்திற்கு சுமார் 2 லட்சத்து 90 ஆயிரம் செலுத்த வேண்டும் என்று புதிய நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் சுமார் 65 ஆயிரம் வரை நேரடியாக கொள்ளையடிக்கப்படுகிறது என்றும்
3. வெளி மாநில வாகனங்கள் நமது சங்கத்தின் நிர்ணயித்த விலையை விட குறைவான கட்டணத்தில் இயங்கினால் நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என கண்டணத்தோடு தெரிவித்தனர்.
4. அரசு வேலை, அரசு ஒப்பந்த வேலை மற்றும் காண்ட்ராக்ட் முறை எடுக்கும் நிறுவனங்கள் 80% சதவீதம் உள்ளூர் வாகணங்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்றும்
5. அந்த அந்த மாவட்டத்தில் உள்ள Construction Equipments வாகனம் ஏற்றி செல்லும் போது டெலிவரி சலான் E way பில், ஜிஎஸ்டி ஆகிய போன்ற ஆவணங்களில் இருந்து உள்ளூர் உரிமையாளர்களுக்கு குறைந்தது 30 கிலோமீட்டர் வரை விளக்கு அளிக்க வேண்டும் என்றும் ',
6. பழைய கட்டிட கழிவுகளை ஏற்றிச்செல்லும் வாகனங்களுக்கு ரசீது இல்லை என்று வாகனத்தின் மீது அபராதம் விதிப்பதை நிறுத்த வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டது.
7. நிதி நிறுவனங்கள் மூலம் கடன் பெற்று வாங்கபட்ட வாகனத்தை ஒன்று அல்லது இரண்டு தவணை கட்ட தவறினால் வாகன உரிமையாளருக்கு முன்னறிவிப்பு கொடுக்காமல் அடியாட்களை வைத்து வழிப்பறி செய்வதுபோல நிதி நிறுவனம் வாகன பறிமுதல் செய்வதை தடுத்து நிறுத்த வேண்டும்என்றும்.
8. தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து எர்த் மூவர்ஸ் வாகனங்களுக்கும் ஒரே மாதிரியான வாடகையை நிர்ணயம் செய்துள்ளோம். இதனை அனைத்து மாவட்டங்களும் கடைப்பிடிக்க வேண்டும் என்றும்,
9. தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து கிராவல் குவாரிகளை அரசே ஏற்று நடத்த வேண்டும் என்றும்,
10.எர்த் மூவர்ஸ் வாகனங்களை பயன்படுத்தி இடங்களை சுத்தம் செய்யும் பொழுது ஏற்படும் சிக்கல்களுக்கு இட உரிமையாளரும் வாகனங்களை அழைத்துச் சென்றவருமே முழு பொறுப்பேற்க வேண்டும் என்றும் , வாகனங்களையோ ஆப்ரேட்டர் மற்றும் வாகன உரிமையாளர்களையோ எந்தவித சட்ட சிக்கல்களுக்கும் உட்படுத்தக் கூடாது. என்றும் பத்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு பத்திரிக்கையாளர்கள். சந்திப்பும் நடந்தது.
இக்கூட்டத்திற்கு கோவை மாவட்ட எர்த் மூவர்ஸ் சங்கத் தலைவர் சந்திரசேகர்,
திருச்சி மாவட்ட எர்த் மூவர்ஸ் சங்க தலைவர் S. மஞ்சுநாத் அவர்கள் தலைமையில் பெருந்திரளாக உரிமையாளர்கள் கலந்து கொண்டு புதிதாக தேர்தெடுக்கப் பட்டுள்ள தமிழக முதல்வரை சந்தித்து தாங்கள் குறைகளை நிவர்த்தி செய்து தர வேண்டுமென கேட்கப் போவதாக தெரிவித்தனர்.


No comments:
Post a Comment