சட்டபேரவையில்
முதல்வர் பேசியதை
அனைவரும் பாராட்டியதாக
திருச்சியில் துணை சபாநாயகர் ரவிசங்கர் நிருபர்களிடம் பேட்டி அளித்தார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான ஜோசப் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு, திருச்சி மாவட்ட தமிழக வெற்றிக்கழகம் சார்பில் பாலக்கரை பகுதியில் சிறப்பு நலத்திட்ட உதவிகள் மற்றும் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. திருச்சி மாவட்ட முன்னாள் தலைவர் ஆர்.கே. ராஜா ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், தமிழ்நாடு சட்டமன்ற துணை சபாநாயகர் ரவிசங்கர் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கியதுடன், அன்னதானத்தையும் தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள், கூட்டணி கட்சிப் பொறுப்பாளர்கள் மற்றும் ஏராளமான தொண்டர்கள் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சிக்குப் பிறகு துணை சபாநாயகர் ரவிசங்கர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது :-
எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின், சட்டபேரவையில் விமர்சனம் வைத்துவிட்டு.. டிவி பார்க்க சென்றுவிட்டார். முதல்வர் பேசும் போது , முறையாக சபாநாயகரின் அனுமதி கேட்ட பிறகு தான் சைகை செய்தார். அப்பொழுது எதிர் புறத்தில் பேசுபவர்கள் ஒரு சிலர் ஒருமையில், கெட்ட வார்த்தையில் பேசினார்கள். அதை தான் சபாநாயகர்
கண்டித்தார்.
சட்டபேரவையில் முதல்வர் பேசியதை
அனைவரும் பாராட்டினார்கள். சட்டமன்றத்தில்
உதயநிதி ஸ்டாலின் பார்த்து பார்த்து படிச்சாரே, கீழே பார்த்து படிச்சாரே அதை சொல்லுறீங்களா.
முதல்வர் பேசும் போதே சட்டபேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தார்கள் இதை எப்படி பார்கிறீர்கள் என்று கேட்டதற்கு உங்களை போல தான் நானும் பார்க்கிறேன்.. அவர்களை நம்பி ஓட்டு போட்ட மக்கள் தான் சிந்திக்க வேண்டும்
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது முன்னாள் மாவட்ட தலைவர் ஆர் கே ராஜா,மத்திய மாவட்ட தலைவர் செந்தில், நிர்வாகிகள் மற்றும் ரியல் எஸ்டேட் அதிபர் ,நந்தகுமார்,சிந்தாமணி முத்துக்குமார், கெட்டப் ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்

No comments:
Post a Comment