தமிழ்நாடு பார்க்கவகுல பேரவை தொடக்கவிழா நடந்தது. - tamilkalam

News Update

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Sunday, June 14, 2026

தமிழ்நாடு பார்க்கவகுல பேரவை தொடக்கவிழா நடந்தது.



தமிழ்நாடு பார்க்கவகுல பேரவையின் இரண்டாம் ஆண்டு தொடக்க விழா திருச்சியில் நடைபெற்றது.   

கூட்டத்திற்கு கட்சியின் நிறுவனத் தலைவர் வழக்கறிஞர் ரமேஷ் தலைமை தாங்கினார்.

 வழக்கறிஞர் நேச மனோகர் வரவேற்பு உரை ஆற்றினார்.

 கூட்டத்தில் அகில பாரத பார்க்கவ குல சங்க நிறுவனத் தலைவர் திருமலை ரவி,தென்னாட்டு பார்க்கவ குல சங்க மாவீரர் ரூசோ பேரவை கஸ்பார், தமிழ் குடிமக்கள் சமூக நல அறக்கட்டளை நிறுவனர் ராமகிருஷ்ணன், வல்லம் டேவிட் ராஜா, தேவனேரிப்பட்டி,  திவாகர்,சமயபுரம் ஜெகன் நிவாஸ், ரவி, தமிழ்நாடு பார்க்கவ குல பேரவை மதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் திருச்சி கொட்டப்பட்டு ஜெயக்குமார், அகில இந்திய மக்கள் மறுமலர்ச்சிக்கழக நிறுவனத் தலைவர் பொன். முருகேசன், தமிழக வாழ்வுரிமை பாதுகாப்பு கட்சி நிறுவன தலைவர் மணிபாபா, தமிழ்நாடு மக்கள் கட்சி நிறுவனத் தலைவர் சிவராமன், ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டனர். கூட்டத்தில்தமிழக அரசு உடனடியாக ஜாதி வாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும். நீட் தேர்வு உள்ளிட்ட அனைத்து போட்டித் தேர்வுகளையும் ரத்து செய்ய வேண்டும். 12 ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் உறுதி செய்ய வேண்டும். தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் ஜாதிய ஆணவ படுகொலையை கட்டுப்படுத்த சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும். திருச்சியை தமிழ்நாட்டின் இரண்டாவது தலைநகரமாக அறிவிக்க வேண்டும். தமிழகத்திற்கு உரிய காவிரி நீர் கிடைத்துவிடும் வகையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன

 மேலும் கூட்டத்தில் அகில பாரத பார்வ குல சங்க நிறுவனத் தலைவர் திருமலை ரவி நிருபர்களிடம் கூறும் பொழுது திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதி மற்றும் நான்கு தொகுதிகளில் நடைபெற உள்ள இடைத்தேர்தலில் பார்க்கல குல உடையார் பார்க்க வ குல மூப்பனார் சமுதாயத்தை சேர்ந்த வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெற வைத்து பார்க்கவ குலத்திற்கு அமைச்சர் பதவி . வழங்க வேண்டும் என்றும் ",திருப்பத்தூர் பட்டியலில் பார்வையில் நத்தம் மலையான் சுருதி மான் மாற்றி அரசாணை வெளியிட வேண்டும்.என்றும்"

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அமைந்துள்ள சர். ஏ.டி .பன்னீர்செல்வம் மணிமண்டபம் சீரமைக்கப்பட வேண்டும் என்றும், மேலும் மணிமண்டப அருகில் உள்ள டாஸ்மார்க் மதுபான கடையை முறையாக அகற்ற வேண்டும். பி.சி.ஆ.ர். வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் மூலம் பாதிக்கப்படும் பிற சமுதாய மக்கள் பாதுகாப்பு கருதி அந்த சட்டத்தைமுற்றிலும் நீக்க வேண்டும் என்றும்,,. மக்கள் தலைவர் ஜி. கே .மூப்பனார் அவர்களுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தி கூறினார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages