திருச்சி பாலக்கரை, காஜா பேட்டையில் கஞ்சா புழக்கத்தால் மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தனர். - tamilkalam

News Update

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Monday, May 25, 2026

திருச்சி பாலக்கரை, காஜா பேட்டையில் கஞ்சா புழக்கத்தால் மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தனர்.


 திருச்சி  பாலக்கரை   பசுமடம்  பகுதியான காஜாபேட்டை பகுதியில் அதிகமாக கஞ்சா வியாபார புழக்கம்இருப்பதால் ,,வாலிபர்கள் கஞ்சா போதையில்  குடியிருப்பு வாசிகளிடம் தகராறு செய்வதாக குடியிருப்பாசிகள் அனைவரும் இணைந்து மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தனர்.

காஜாப்பேட்டையில் கஞ்சா குடிகாரர்களால். பாதிக்கப்பட்ட பொதுமக்கள் புகார் மனு அளித்துவிட்டு... பத்திரிக்கையாளர்களிடம் தங்கள் பாதுகாப்பற்ற அவல நிலையை கூறினார்கள். அப்போது கூறியதாவது:,

எங்கள் பகுதியில் சுமார் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் குடியிருந்து வருகிறது. எங்கள் பகுதியில் அதிகப்படியான கஞ்சா புழக்கம் உள்ளது வாலிபர்கள் கஞ்சா போதையில் இரவு நேரங்களில் அநாகரிமான செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர் மக்கள் போக்குவரத்திற்கு பெரும் இடையூறு ஏற்படுத்துகின்றனர் .  அதேபோல சிறுவர் சிறுமியர்களிடம் சமூகத்தின் பயன்பாடு இல்லாத செயல்களையும் , கொச்சையான, மற்றும் அருவருக்கத்தக்க ,  பேச்சுக்களையும் பரப்புகின்றனர் .  இதனால் எங்கள் பகுதி சிறுவர்,சிறுமிகளின் நிலைமையும், பாதுகாப்பும் கேள்விக்குறியாகி உள்ளது.

இதனால் எங்கள் பகுதி மக்கள் கடும் மன உளைச்சலில் உள்ளனர் .  அதேபோல பல வீடுகளில் சம்பவங்களும் அரங்கேறியுள்ளது.  எனவே எங்கள் பகுதியில் கஞ்சா பழக்கத்தை கட்டுப்படுத்தவும் குடியிருப்பு வாசிகளிடம் தகராறு செய்யும் வாலிபர்களை கண்டித்து கடும் நடவடிக்கை எடுக்கவும் மாவட்ட கலெக்டர் போலீசாரிடம் அறிவுறுத்த வேண்டும் என வலியுறுத்தி மனு அளித்தனர். நடவடிக்கை எடுக்குமா மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும் என பொது மக்கள் எதிர்பார்ப்பு?. மேலும் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்தவர்களின் பாதுகாப்பு, கேள்விகுறியாகவும், மிகுந்த அச்சநிலையில் இருப்பதாகவும் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages