திருச்சி வாக்காளர்களுக்கு முன்னால் அமைச்சர் K.N. நேரு. நன்றி தெரிவித்தார். - tamilkalam

News Update

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Monday, May 18, 2026

திருச்சி வாக்காளர்களுக்கு முன்னால் அமைச்சர் K.N. நேரு. நன்றி தெரிவித்தார்.


திருச்சி மேற்கு தொகுதி மக்களுக்கு கே.என்.நேரு நன்றி

மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவேன் என உறுதி

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் திருச்சி மேற்கு சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற திமுக முதன்மைச் செயலாளரும், சட்டமன்றத் துணைத் தலைவருமான கே.என்.நேரு தனது தொகுதிக்குட்பட்ட அனைத்து பகுதிகளுக்கும் திறந்த ஜீப்பில் சென்று நன்றி தெரிவித்து வருகிறார்.வெள்ளியன்று காலை மாலை என இரு வேளைகளிலும் தொகுதி முழுவதும் பம்பரமாக சுழன்று வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார்.அப்போது பொதுமக்களிடம் உங்கள் கோரிக்கைகள் அனைத்தும் படிப்படியாக நிறைவேற்றப்படும் என கே.என்.நேரு உறுதி அளித்தார்
 இரண்டாவது நாளாக சனிக்கிழமை அன்று சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். காலை தில்லைநகர், உறையூர், அரவானூர், லிங்கநகர், நாடார் தெரு, தியாகராய நகர், பாத்திமா நகர், வெக்காளியம்மன் கோவில் தெரு, முஸ்லிம் தெரு, பாண்டமங்கலம் ரோடு, நவாப் தோட்டம், அண்ணாமலை நகர், தென்னூர் பட்டாபிராமன் தெரு உள்ளிட்ட பகுதிகளில் வாக்களித்த மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்தார். அவருடன் மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி மாநகர செயலாளர் மேயர் அன்பழகன் பகுதி செயலாளர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

 

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages