திருச்சி ஹர்ஷமித்ரா மருத்து மனையில் புகையிலை எதிர்ப்பு விழிப்புணர்வு கூட்டமும், விருது வழங்கும் நிகழ்ச்சியும் நடந்தது.... - tamilkalam

News Update

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Sunday, May 31, 2026

திருச்சி ஹர்ஷமித்ரா மருத்து மனையில் புகையிலை எதிர்ப்பு விழிப்புணர்வு கூட்டமும், விருது வழங்கும் நிகழ்ச்சியும் நடந்தது....



ரீல் போடுங்க...ரியல் ஹீரோ ஆகுங்க!"என்ற தலைப்பில்

ஹாஷமித்ரா மருத்துவமனையின் புகையிலை எதிர்ப்பு மாபெரும் விழிப்புணர்வு இயக்கத்தின் விழிப்புணர்வு கூட்டமும், பிரபல வெற்றிப்படமான மைனா , கயல்,திரை பட இயக்குநர் பிரபுசாலமன் நெகிழ்ச்சியான உரையும், விருதுகள் வழங்கியும் சிறப்புரையும்  நிகழ்த்தினார்.


உலக புகையிலை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு ஹாஷமிதரா புற்றுநோய் மற்றும் பல்நோக்கு சிறப்பு மருத்துவமனை சார்பில் நடத்தப்பட்ட -ரீல் போடுங்க ரியல் ஹீரோ ஆகுங்க!" என்ற மாபெரும் சமூக விழிப்புணர்வு இயக்கம் இன்று திருச்சி ஹர்ஷமித்ரா மருத்துவ மனையில் நடந்தது.


உலக சுகாதார அமைப்பின் (WHO) 2026 ஆம் ஆண்டிற்கான கருப்பொருளான "Unmasking Appeal" என்பதன் அடிப்படையில் தொடங்கப்பட்ட இந்த இளைஞர்களிடையே புகையிலை மற்றும் நிக்கோட்டின் அடிமைத்தனத்திற்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்துடன் முன்னெடுக்கப்பட்டது.

"ஒரு ரீல் ஒரு விழிப்புணர்வு... ஒரு மாற்றத்தின் தொடக்கம்.. என்ற எண்ணத்துடன் தொடங்கப்பட்ட இந்த இயக்கம், சமூக வலைதளங்கள், வானொலி, கல்லூரி வளாகங்கள். மருத்துவமனையின் வெளிச்சேவை நிகழ்ச்சிகள் மற்றும் பிங்க் கிராஸ் சொசைட்டியின் ஒத்துழைப்பின் மூலம் மக்களிடையே மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விழிப்புணர்வு இயக்கம் மூலம் சுமார் 40 லட்சம் மக்களை சென்றடைந்துள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

தென்னிந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து நூற்றுக்கணக்கான விழிப்புணர்வு ரீல்கள் பெறப்பட்டன. ஒவ்வொரு ரீலும் சமூக அக்கறை, பொறுப்பு உணர்வு மற்றும் புகையிலைக்கு எதிரான வலுவான கருத்துக்களை வெளிப்படுத்தியதாக பாராட்டப்பட்டது.

மே 25ஆம் தேதி பதிவுகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, போட்டிக்காக வந்த அனைத்து ரீல்களும் தனித்த அடையாள எண்களுடன் பதிவு செய்யப்பட்டு, முழுமையான வெளிப்படைத்தன்மை மற்றும் நியாயத்தன்மையுடன் மதிப்பீடு செய்யப்பட்டன.

முதற்கட்டமாக உள்துறை நடுவர் குழுவினா அனைத்து பதிவுகளையும் ஆய்வு செய்தனர். பின்னர் தேர்வு செய்யப்பட்ட ரீல்கள் சிறப்பு நடுவர் குழுவிற்கு அனுப்பப்பட்டு, படைப்பாற்றல், கருத்தின் தெளிவு, சமூக தாக்கம், வெளிப்படுத்தும் விதம் உள்ளிட்ட 10 முக்கியமான அளவுகோள்களின் அடிப்படையில் மதிப்பீடு செய்யப்பட்டன.

பல கட்டங்களை கடந்த இந்த போட்டியில் இருந்து சிறந்த 50 ரீல்கள் தேர்வு செய்யப்பட்டு, அதிலிருந்து சிறந்த 10 ரீல்கள் இறுதிச்சுற்றிற்கு தகுதி பெற்றன.

இந்த இயக்கத்தின் நிறைவு விழா இன்று மாலை ஹாஷமித்ரா மருத்துவமனையில் சிறப்பாக நடைபெற்றது. இறுதிச்சுற்றிற்கு தேர்வு செய்யப்பட்ட சிறந்த ரீல்கள் பொதுமக்கள் முன்னிலையில் திரையிடப்பட்டன.

சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட பிரபல திரைப்பட இயக்குநர் பிரபு சாலமன் வெற்றியாளர்களுக்கு பரிசுகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கி கௌரவித்தார். தனது உரையில், அவர் இயக்கும் திரைப்படங்களில் மது, மற்றும் புகையிலை பயன்படுத்தவதைப் போன்ற காட்சிகள் அறவே இல்லாமல் இயக்குவதாக கூறினார். திரைப்படங்கள் தற்போது போதைப் பொருட்கள் பயன்படுத்துவது, மற்றும் வன்முறை காட்சிகள்தான் பிரதான படுத்தப்படுவதாகவும் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். 

சமூக மாற்றத்திற்கான சக்திவாய்ந்த கருவியாக இளைஞர்களின் படைப்பாற்றல் அமைய வேண்டும் என்றும், புகையிலையற்ற தலைமுறையை உருவாக்குவதில் இத்தகைய முயற்சிகள் முக்கிய பங்கு வகிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், புற்றுநோய் மற்றும் புகையிலை எதிர்ப்பு விழிப்புணர்வு துறையில் சிறப்பாக செயல்பட்டு வரும் மருத்துவ நிபுணர்கள் கலந்துகொண்டு, புகையிலையின் தீமைகள் மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையின் அவசியம் குறித்து பயனுள்ள விழிப்புணர்வு உரைகளை வழங்கினர்.

நிகழ்ச்சியில் மருத்துவர்கள், கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டு விழிப்புணர்வு இயக்கத்திற்கு தங்களது ஆதரவை வெளிப்படுத்தினர்.


நிகழ்ச்சியின் நிறைவில் ஹர்ஷமித்ரா மருத்துவமனை நிர்வாகம், "இது வெறும் போட்டி அல்ல;சமூக மாற்றத்திற்கான ஒரு இயக்கம். ஒரு ரீல் கூட ஒருவரின் சிந்தனையை மாற்றலாம். ஒரு குடும்பத்தை காப்பாற்றலாம், ஒரு வாழ்க்கைக்கு புதிய நம்பிக்கையாக மாறலாம். புகையிலையற்ற சமூகத்தை உருவாக்கும் எங்கள் பயணம் தொடர்ந்து முன்னெடுக்கப்படும்' என்று தெரிவித்தது.


இந்த விழிப்புணர்வு இயக்கத்தின் வெற்றியுடன், இளைஞர்களின் பங்களிப்பும் சமூகப் பொறுப்புணர்வும் மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages