திருச்சி கீழ ஆண்டார் வீதியில் குட்டி குடித்தல் திருவிழா நடைபெற்றது. - tamilkalam

News Update

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Saturday, April 25, 2026

திருச்சி கீழ ஆண்டார் வீதியில் குட்டி குடித்தல் திருவிழா நடைபெற்றது.



 திருச்சி ஸ்ரீ சித்துக்கண் மாரியம்மன் கோவில் 61-ம் ஆண்டு குட்டி குடித்தல் திருவிழா இன்று நடைபெற்றது:-

திருச்சி கீழ ஆண்டாள் வீதி தேரடிக்கு அருகே அமைந்துள்ள ஸ்ரீ சித்துக்கண் மாரியம்மன் கோவிலின் 61 ஆம் ஆண்டு பூச்சொரிதல் சித்திரை திருவிழா நடைபெற்று வருகிறது. கடந்த 21 ஆம் தேதி காவேரி ஆற்றில் இருந்து மாரிக்கரகம், காளி கரகம் மற்றும் மதுரை வீரன், கருப்பண்ணசாமி மருளாளிகளுடன், முருகவேல், சூலாயுதம், அக்கினி சட்டி, தீர்த்த குடம், பால்குடம், அலகு காவடிகளுடன் புறப்பட்டு முக்கிய வீதி வழியாக வலம் வந்து சன்னதியை அடைந்தது. அதனைத் தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் நடைபெற்றது. 

முக்கிய நிகழ்வான குட்டி குடித்தல் திருவிழா இன்று மதியம் வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் பக்தர்கள் பல்வேறு  வேண்டுதல்களுக்காக ஆடுகள் மற்றும் சேவல்கள் வழங்கப்பட்டு மருளாளி குட்டி குடிக்கும் நிகழ்வு நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து இன்று மாலை அடைசல் பூஜை மற்றும் அன்னதானம் நடைபெறுகிறது. மேலும் திருவிழாவில் பங்கேற்ற பக்தர்களுக்கு  மருளாளிகள் அருள்வாக்கு வழங்கினர். இந்த திருவிழாவிற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ சித்துக்கண் மாரியம்மன் கோவில் விழா குழுவினர் செய்திருந்தனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages