திருச்சியில் இன்று ம.க.இ.க., பு.ஜ.தொ.மு.வும் இணைந்து நகல் எரிப்பு போராட்டம் நடந்தது - tamilkalam

News Update

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Thursday, April 16, 2026

திருச்சியில் இன்று ம.க.இ.க., பு.ஜ.தொ.மு.வும் இணைந்து நகல் எரிப்பு போராட்டம் நடந்தது



 

ஒன்றிய பா.ஜ.க அரசு இன்று (16.04.2026) நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற உள்ள தொகுதி மறுவரையறை மசோதாவை கண்டித்து மக்கள் கலை இலக்கியக் கழகம் மற்றும் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி சார்பாக திருச்சி தில்லைநகர் 7 ஆவது குறுக்குசாலை ஆட்டோ ஸ்டாண்டில் காலை 12.30 மணியளவில் மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அனைவரும் கறுப்பு கொடி பிடித்தும், கறுப்பு உடை அணிந்தும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

ஒன்றிய அரசை கண்டித்தும் மசோதாவை திரும்ப பெற வழியுறுத்தியும் மசோதாவின் நகலை தோழர்கள் எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இப்போராட்டத்திற்கு ம.க.இ.க மாவட்ட செயலாளர் தோழர் ஜீவா மற்றும் பு.ஜ.தொ.மு மாவட்ட தலைவர் தோழர் செந்தில் இருவரும் தலைமை தாங்கினர். ஆட்டொ ஓட்டுனர் பாதுகாப்பு சங்கத்தின் மாவட்ட தலைவர் தோழர் சிவா மற்றும் ம.க.இ.க, பு.ஜ.தொ.மு தோழர்கள் திரளாக பங்கேற்று ஒன்றிய பா.ஜ.க மோடி அரசுக்கு எதிரான தமது கண்டனங்களை பதிவு செய்தனர்.



No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages