திருச்சி மாவட்டத்தில்
தமிழ்நாடு துணை முதல்வரும் திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் தீவிர பிரச்சாரம்
தமிழ்நாடு துணை முதல்வரும் திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் திருச்சி மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து சனிக்கிழமை அன்று பிரச்சாரத்தில் ஈடுபட்டார். திருச்சி மேற்கு சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் கே.என்.நேருவை ஆதரித்து தென்னூர் அரசமரம் பகுதியிலும், லால்குடி சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் பாரிவள்ளலை ஆதரித்து லால்குடி ரவுண்டானா அருகிலும், மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் கதிரவனை ஆதரித்து நம்பர் 1 டோல்கேட் பகுதியிலும், ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் துரைராஜை ஆதரித்து திருவானைக்காவல் பகுதியிலும், கிழக்கு சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் இனிகோ இருதயராஜை ஆதரித்தும், திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் மகேஷ் பொய்யாமொழியை ஆதரித்து காட்டூர் பகுதியிலும் பிரச்சாரம் செய்தார்.
தமிழ்நாடு துணை முதல்வரும் திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் லால்குடியில் பேசுகையில்,
லால்குடியில் நம் வெற்றி வேட்பாளர் பாரிவள்ளல் அவர்கள் நிற்கிறார்கள். எதிர் வேட்பாளர் யார்? உங்களுக்குத் தெரியும். அ.தி.மு.க சார்பில் லாட்டரி சீட்டு விற்பவர் நிற்கிறார். எத்தகைய வேட்பாளர் என்று உங்கள் அனைவருக்கும் தெரியும். ஒரே ஒரு சிறு எடுத்துக்காட்டு மட்டும் சொல்கிறேன்.அந்த அம்மையாரின் சொத்து மதிப்பு 6,000 கோடி. அவர் மீதும் அவர் குடும்பத்தின் மீதும் இதுவரை 200-க்கும் அதிகமான வழக்குகள் உள்ளன. 1,000 கோடி ரூபாய் அளவுக்குச் சொத்துக்கள் இப்போது வரை அமலாக்கத்துறை, சி.பி.ஐ. நீதிமன்றங்கள் எல்லாம் முடக்கி வைத்துள்ளன. 1,000 கோடி சொத்தை மட்டும் முடக்கி வைத்துள்ளார்கள்.
இன்று அவர்கள் குடும்பத்தில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு கட்சியில் இடம் பிடித்து வைத்திருக்கிறார்கள். அவர்கள் குடும்பத்தின் ஒட்டுமொத்த நோக்கம் மீண்டும் தமிழ்நாட்டுக்குள் எப்படியாவது லாட்டரி சீட்டு, லாட்டரி தொழிலைக் கொண்டு வந்து தமிழ்நாட்டு மக்களைச் சீரழிப்பதுதான் அவர்களின் ஒரே நோக்கம். லால்குடி மக்களைப் பணத்தால் வெற்றி பெற்றுவிடலாம் என்று தவறாகக் கணக்கிட்டு வந்திருக்கிறார்கள். நீங்கள் அவர்களுக்குச் சொல்லுங்கள். லால்குடி மண் சாதாரண மண் அல்ல, சுயமரியாதை மண். ஒவ்வொன்றையும் யோசித்து முடிவெடுக்கக்கூடிய மண். என்றுமே நீங்கள் பணத்துக்குக் கட்டுப்பட்டவர்கள் கிடையாது. அன்புக்குத்தான் கட்டுப்பட்டவர்கள். தி.மு.க-விற்கு, உதயசூரியன் சின்னத்துக்குத்தான் கட்டுப்பட்டவர்கள். அதனால்தான் நான் மீண்டும் கேட்டுக்கொள்வது. நீங்கள் வெற்றி பெற வைப்பது உறுதி. சகோதரர் பாரிவள்ளலை வெற்றி பெற வைப்பது உறுதி. நான் உங்களிடம் கேட்டுக்கொள்வதெல்லாம் எதிர்த்துப் போட்டியிடக்கூடிய வேட்பாளர் டெபாசிட் இழக்கும் அளவுக்கு நம் வெற்றி இருக்க வேண்டும் என்றார்.







No comments:
Post a Comment