திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் மாவட்ட செயலாளருடன் இணைந்து வாக்கு சேகரித்தார்.,. - tamilkalam

News Update

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Thursday, April 9, 2026

திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் மாவட்ட செயலாளருடன் இணைந்து வாக்கு சேகரித்தார்.,.




அ.இ.அ.தி.மு.க.வின்திருச்சி 1வது தொகுதி வேட்பாளர் பொறியாளர்  க. ராஜசேகர், அவருடன் அ.இ.அ.தி.மு.க மாவட்ட செயலாளர்  சீனிவாசன் மற்றும் ,அதிமுக., கழக முன்னனியினரும், கூட்டணி கட்சியினரும் இணைந்து பெருந்திரளாக திரண்டு நடக்க இருக்கும் சட்டமன்ற தேர்தலுக்கு பொதுமக்களிடம்வாக்கு சேகரித்தனர். மேலும்

2026 - சட்டமன்ற பொதுத்தேர்தல் வாக்குறுதிகளாக கூறப்பட்டது.



ஒவ்வொரு குடும்பத்துக்கும் சிறப்பு உதவித்தொகைரூ,10,000/- ஆயிரம் தரப்படும் என்றும் ,

அனைத்து குடும்பத் தலைவிக்கும் மாதம் ரூ.2000 உதவித்தொகை தரப்படும் என்றும்,

ஆண்களுக்கும் மகளிருக்கு இணையாக  கட்டணமில்லா பேருந்தும்,

5 லட்சம மகளிருக்கு அம்மா இருசக்கர வாகனம் வாங்க ரூ 25.000, ஆயிரம் மானியமாக வழங்கப்படும் என்றும்

முதியோர் உள்ளிட்டோருக்கான உதவித்தொகை ரூ.2000 ஆக உயர்த்தி வழங்கப்படும் என்றும்

அரசுப்பள்ளி மாணவர்களுக்கான மருத்துவ படிப்பு இட ஒதுக்கிற 7.5% லிருந்து 10 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும் என்றும்

திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கான அ.இ.அ.தி.மு.க வேட்பாளர் வாகுறுதிகளை அளித்து மக்களிடம் வாக்கு சேகரித்தார்.மேலும்

இல்லத்தரசிகளின் பணிச்சுமையை குறைக்க அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பிரிட்ஜ் விலையில்லாமல் வழங்கப்படும் என்றும் ,

அம்மா இல்லத் திட்டத்தின் மூலம்அனைவருக்கும் வீடு வழங்கப்படும் என்றும்,

வங்கிகளில் மாணவர்கள் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும் எனவும்,

அரி சி/குடும்ப அட்டைதாரர்களுக்கு ஆண்டுக்கு 3 கேஸ் சிலிண்டர் விலையில்லாமல் வழங்கப்படும் என்றும்

வேலைக்காக காத்திருக்கும் பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.2000 உதவித்தொகை தரப்படும் என்றும் தங்களது (அ.இ.அ.தி.மு.க) கட்சியின் தேர்தல் வாக்குறுதிகளை கூறி வாக்கு சேகரித்தார்..

குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா அரிசியோடு,,....

ஒரு, கிலோ பருப்பு    - ஒரு லிட்டர் சமையல் எண்ணெய் .....விலையில்லாமல் வழங்கப்படும் என்றும்,

திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதி அ.இ.அதிமுக வேட்பாளர் க.ராஜசேகரன் தெரிவித்தார்.

.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages