திருச்சி பொன்மலைப்பட்டி மலையடிவாரம்
வ உ சி நகரை சேர்ந்தவர் வடிவேல் (வயது 46) இவர் தனது டிரைவருடன் கொட்டப்பட்டு அம்பாள் நகர் பகுதியில் காரில் வந்து கொண்டிருந்தார். அப்பொழுது ஐந்து வாலிபர்கள் சாலையில் நின்று கொண்ட கையில் வாளை வைத்துக் கொண்டு அந்த வழியாக செல்லும் நபர்களை மிரட்டி கொண்டு இருந்தனர். அப்பொழுது வடிவேல் கார் அந்த வழியாக செல்வதை பார்த்த வாலிபர்கள் காரை நிறுத்தி வடிவேல் யிடம் தகராறு செய்து வாளை காட்டி மிரட்டி உள்ளனர்.பிறகு இந்த சம்பவம் குறித்து வடிவேல் பொன்மலைப்பட்டி போலீசில் புகார் கொடுத்தார் புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து கொட்டப்பட்டு பகுதியை சேர்ந்த சிவராமன் (வயது 26) ஸ்ரீராம் (வயது 24 )ஆகிய இரண்டு பேரை கைது செய்தனர். இவர்களில் சிவராமன் ரவுடி பட்டியலில் உள்ளார்.மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய கொட்டப்பட்டு பகுதியை சேர்ந்த கார்த்திகேயன், பிலிக்ஸ், முத்துவேல் ஆகிய மூன்று பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
No comments:
Post a Comment