த.வெ.க - என்.டி.ஏ கூட்டணி யூகம் :
மத்திய அரசை எதிர்த்து விஜய் பேசுவதில்லை
திருச்சியில் அமைச்சர் அன்பில் மகேஷ்பொய்யாமொழி பேட்டி:-
தமிழ்நாட்டின் கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு பெரிய அளவில் ஏற்பட்டுள்ளது இதற்கு காரணமாக மத்தியஅரசை கண்டித்து தமிழக முழுவதும் மத சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் பகுதி ஒன்றிய,நகர, பேரூர், கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டுமென திமுக தலைவர் மு க ஸ்டாலின் அறிவித்து இருந்தார்.
அதன் ஒரு பகுதியாக திருவெறும்பூர் தொகுதிக்கு உட்பட்ட பொன்மலை பணிமனை பகுதியில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமை வைத்து பேசியதாவது:-
எனது துறையான பள்ளிக்கல்வித்துறை ஒன்றிய அரசு ரூ 3458 கோடி ரூபாய் வழங்க வேண்டும் அதை வழங்கவில்லை அதே போல் ஒவ்வொரு இல்லத்திற்கும் குடிநீர் சென்ற சேரும் விதம் ஜல் ஜீவன் திட்டத்தின் மூலம் குடிநீர் பைப் பதித்த தத்திற்கு உரிய ரூ 3112 க்கு கோடி வரவில்லை அதேப்போல் 100 நாள் வேலை திட்டத்திற்கு வழங்க வேண்டிய௹ 2000 கோடியையும் தராமல் வஞ்சித்துள்ளது
மேலும் மத்திய அரசு பதவியேற்ற போது 500 மற்றும் ஆயிரம் ரூபாய் செல்லாது என கூறி எல்லோரையும் பெரிய லைன் நிற்க வைத்தது தற்பொழுது கேஸ் புக்கிங் காக அது போல் தற்போது லைனில் நிற்க வைத்துள்ளது ஒரு கேஸ் புக்கிங் செய்தால் அதற்கு 21 நாள் காத்திருக்க வேண்டும்.
நம்மை காக்க வைத்துள்ளது பாஜாக வை தேர்தலில் பாஜகவை வெயிட்டிங் லிஸ்டில் வைக்க வேண்டும் என்று பேசினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க.மாநகரக் கழகச் செயலாளர் மு.மதிவாணன்
காங்கிரஸ் மாநிலங்களவை உறுப்பினர் கிறிஸ்டோபர் திலக், காங்கிரஸ் மாவட்ட தலைவர் ரெக்ஸ்,
மதிமுக ரொக்கையா மாலிக்,
கம்யூனிஸ்ட் சிபிஐ மற்றும் சிபிஎம் வெற்றி, ராஜ்குமார்,
விடுதலைகள் சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் ரமேஷ், தேமுதிக மில்டன், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் மொய்தின், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் ராஜா
பார்வர்ட் பிளாக் தமிழக வாழ்வுரிமை கட்சி வீர முத்திரையர் முன்னேற்ற கழகம் மட்டும் தோழமைக் கட்சி நிர்வாகிகள் கழக நிர்வாகிகள் பெரும் திரளாக கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தில் கோஷங்களை எழுப்பினர்.
பின்னர் அமைச்சர் அன்பில் மகேஷ்,பொய்யாமொழி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
கேஸ் தட்டுப்பாட்டால் பள்ளி மாணவர்களுக்கான காலை உணவு திட்டம் சத்துணவு திட்டம் எதுவும் பாதிக்கப்படாமல் அவற்றை தொடர்ச்சியாக வழங்குவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளோம்.
இந்திய அரசு அமெரிக்க அதிபரிடம் சரணடைந்து விட்டது சீனா அது போல் அமெரிக்காவிடம் அடிபணியாமல் இருந்ததால் தான் இன்னும் 200 நாட்களுக்கு அவர்கள் எரிவாயு கையிருப்பில் வைத்துள்ளார்கள்.
பிரதமர் மோடி, டிரம்பிற்கு அடிபணிந்து போகிறார். டிரம்ப்பை எதிர்த்து கேள்வி கேட்க தைரியம் இல்லாதவராக பிரதமர் இருக்கிறார் என்பது நமக்கு வருத்தமாக உள்ளது.
த.வெ.க - என்.டி.ஏ கூட்டணி குறித்து யூகத்தின் அடிப்படையில் எந்த பதிலும் கூற முடியாது.
மத்திய அரசு ஏதாவது தவறு செய்தது என்றால் அதை எதிர்த்து விஜய் பேசுவதில்லை எந்த கருத்தையும் கூறுவதில்லை.
தமிழ்நாட்டின் உரிமைகள் பறிக்கப்படும் பொழுது களத்தில் வந்து நிற்பது மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியினர் தான். விஜய் எந்த கருத்து கூறாமல் இருப்பதையும் மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
தேர்தல் நேரத்தில் கட்சி நிர்வாகிகளை ஊக்கப்படுத்துவது கட்சி தலைமையின் பொறுப்பு அந்த வகையில் தான் திருச்சியில் நிர்வாகிகள் சந்திப்பு மாநாடு ஏற்பாடு செய்து இருந்தோம் திமுக அரசின் சாதனைகளை நிர்வாகிகள் மூலம் மக்களிடம் கொண்டு செல்லவே இதனை ஏற்பாடு செய்திருந்தோம்.
பெட்ரோல் டீசல் விலை ஏற தற்போது வாய்ப்பில்லை ஆனால் தட்டுப்பாடு வந்தால் பெட்ரோல் டீசல் விலையும் உயரும் எனவே முன்கூட்டியே இதற்கு உரிய நடவடிக்கையை மத்திய அரசு எடுக்க வேண்டும்.
இவ்வாறு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினார்

No comments:
Post a Comment